Sunday, November 22, 2020

TREASURE TROVE

 

            புதனன்று அகப்பட்ட பொன்     J K  SIVAN  

எனக்குத் தெரிந்தவை  எல்லோரும் அறிந்தவை. புதிதல்ல.  நான் கொஞ்சம் லேட்டாக பழைய விஷயங்களை தருபவன். அவ்வளவு தான்.  ஒன்பது மாதங்களுக்கு முன்னால்  ஒரு அதிசயம் நடந்ததே எத்தனைபேர் அறிவுறீர்கள்.


திருச்சி ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்கோவில்  சிவ ஸ்தலம் இருக்கிறது. ஜம்புகேஸ்வர சுவாமி  அகிலாண்டேஸ்வரியோடு உடனுறைந்து காட்சி தரும் ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய  பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்கான  ஸ்தலம்.   1800 வருஷங்களுக்கு முன்பு கோச்செங்கணான் எனும் சோழ ராஜா இந்த  கோவிலைக் கட்டினான்.  இப்போது கடைசியில் ஹிந்து அறநிலைய துறை  கையில் இருக்கிறது.  

இந்த அற்புத கோவிலில் அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு எதிரே,  பிரசன்ன விநாயகர் கோவில் பின் புறம் வாழைத்தோட்டம் பகுதியில்  புதர் மண்டி இருக்கும் ஒரு இடத்தில் பூச்செடிகள் வளர்க்க ஒரு நந்தவனம் அமைக்க நிர்வாகம் திட்டமிட்டது.  ஆட்கள் புதர்களை வெட்டினார்கள்.  மண்ணைத்  தோண்டினார்கள். ஏழடி ஆழம் தோண்டியதால் அங்கே ஏதோ அஸ்திவாரம் போட எண்ணம் போல இருக்கிறது..  அன்று புதன் கிழமை .  போன் அகப்பட்டாலும்  புதன் அகப்படாது என்பார்களே.. அந்த புதன் விசேஷமான புதன்.  பொன்னும் அகப்பட்டது.  அது தான்  விசேஷம்  இந்த கட்டுரை எழுத. 

மண்ணைத்தோடின  கடப்பாரை ஏழடி ஆழத்தில் '' ணங்''  என்று ஏதோ ஒரு உலோகத்தின் மேல்   பிடித்ததால் அந்த வேலையாள் அருகே இருப்பவர்களை கூப்பிட்டான்.  எல்லோருமாக மண்ணை வாரி வெளியே போட்டார்கள்.  ஒரு பழைய கருப்பாக மண்ணில் வெகுகாலம் புதைந்திருந்த செப்புத்தவலை  மண் மூடி  வெளியே வந்தது.   சரியான கனமான  செப்புத்தவலை .  அதிகாரிகளுக்கு விஷயம் சென்றது. அதில் என்ன இருக்கு?   ஸ்ரீரங்கம் தாசில்தார்  வரவழைக்கப்பட்டார். உள்ளூர் போலீஸ்காரர் வந்தார்.  அமைதியான  ஆள்  அதிகம் இல்லாத  அந்த நேரத்தில் கிடுகிடுவென்று  உள்ளோர் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.  சில விஷயங்கள் காட்டுத்தீ  போல்  பரவிவிடும்.  ''கோவிலில் புதையல்''...  இது  போதாதா?  

தவலையில் பொற்காசுகள் நிறைய  விளிம்பு மட்டும் இருந்தது.  மண்ணை எடுத்துவிட்டு  எண்ணினார்கள்.  சின்னதும் பெரிசுமாக  505  பொற்காசுகள்.  கனமாக ஒருபக்கம்   விஷ்ணு, இன்னொரு பக்கம்  அரபிக் எழுத்துக்கள்.  சில காசுகளில்  விஷ்ணு, ஸ்ரீதேவி  பூதேவியுடன்.   

1000 வருஷங்களுக்கு  முன்பு  வராகன் என்றும் பின்னர்  கிழக்கிந்திய  கம்பனி காலத்தில் பகோடா என்றும்  புழக்கத்தில் இருந்த  தங்க நாணயங்கள்.   வெள்ளைக்காரன் காலத்தில்  ஒரு சாமி பகோடா  என்றால் விஷ்ணு பொம்மை மட்டும் பொறுத்தது.  மூணு சாமி பகோடா என்றால் விஷ்ணு ஸ்ரீதேவி பூதேவியுடன்.   505 காசுகள் எடை 1716  கிராம்.   சுத்த தங்கம். தற்போதைய  மதிப்பில்  68 லக்ஷ ரூபாய்கள்.  ஜாக்கிரதையாக  பாதுகாப்பிற்கு எதுத்துச்செல்லப்பட்டது என்ற வரை பேப்பரில் வந்தது.  காசுகளின்  படங்கள் மட்டும் நாம் பார்க்கலாம். 
தொல்பொருள்  ஆராய்ச்சி நிபுணர்கள்  இது  1691ம் வருஷம்   கிழக்கிந்திய கம்பனியார்  சென்னையில்  தங்கசாலையில் தயாரித்த பொற் காசு என்கிறார்கள்.    அப்போது அதன் பெயர் பகோடா  என்கிறார். 16ம் நூற்றாண்டில் யாரோ புதைத்து வைத்தது  என்கிறார்.

இது யார் ஜாக்கிரதையாக கோவிலில் வந்து புதைத்ததோ? ஏன், எதற்கு, யார் இப்படி ஜாக்கிரதையாக புதைத்துவைத்தது. பிறகு ஏன் மறந்து  மறைந்து போனார்கள்.?  இதுபோல் எத்தனை யார் கையில் எல்லாம் அகப்பட்டதோ? பெரிய  காசின் எடை  10 கிராம்  தங்கம்.  அது  ஆர்காட் நவாப் காசு.    இந்த  68 லக்சம்   தற்போதைய மதிப்பு.  பழம்பொருள்  விலை தனி.  அண்டிக்  ANTIC   என்பார்களே  அதை விலைகொடுத்து வாங்குபவர்கள் நூறுமடங்கு அதிகம் விலை கொடுத்து இதை வாங்க தயாராக இருப்பார்கள். 

நமது பாரத தேசம் ஒரு அதிசய பூமி என்பதில் சந்தேகமே  இல்லை.
அப்புறம் என்ன ஆச்சு?  வெளிச்சத்துக்கு வந்த விஷ்ணுகாசு தான் சொல்லவேண்டும். அதற்கு பொறுப்பு ஏற்ற  அற நிலைய  அதிகாரிகள் சொன்னால் தான் தெரியும்?





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...