Wednesday, November 11, 2020


 ஆதித்ய ஹ்ருதயம்     J K  SIVAN  



                   ’சூரியா, இதோ என் நமஸ்காரம்’’
 

ராமன் மனிதனாக அவதரித்தான். பராக்கிரமம் மிகுந்த அரக்கன் ராவணனை வதம் செய்ய முனைந்தான். அந்த நேரத்தில் அகஸ்திய மகரிஷி ராமனை சந்திக்கிறார். ராமனுக்கு சூரியனின் அனுக்ரஹம் கிடைக்க மந்திரம் உபதேசிக்கிறார். விஞ்ஞான காலத்தில் நாம் வாழ்கிறோம். சூரிய ஒளியின் மஹத்வம் நமக்கு தெரியும். அதுவே ஜீவாதார சக்தி என்று புரியும். அதை உணர்வதற்காகவாவது இதை படிப்போம். அகஸ்தியர் கூறும் மந்திரத்தின் பொருள் அறிவோம். ராமன் அதால் பயன் பெற்றதைப் போல் நாமும் தினமும் இதை உச்சரித்து பயனடைய ஒரு காசும் செலவில்லை.

இந்த மந்திரம் பற்றிய சில விவரங்கள்:

அகஸ்தியர் இதற்கு ரிஷி.
ஸ்வரம்: அனுஷ்டுப் (சந்தஸ் )
தெய்வம்: சூரியநாராயணன் ஆதித்யனின் ஹ்ருதயத்தில் இருப்பவன். அவனே ராமன் அவனே நாராயணன் அவனே எல்லாம். பரம்பொருள்.

 ''ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஸம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||''

ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங் களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

''சூரிய பகவானே. உனக்கு ஜெயம், ஜெயம், ஜெயம். இந்த ஏழுலகின் ஒளி விளக்கு. தீபம் நீயே. உன்னுடைய கதிர்கள் படும் இடம் எல்லாம் சகல பாபங்களும் தொலையும். வலி தீரும். துயரம் துன்பம் எல்லாமே காணாமல் போகும், வேதங்கள் உன்னை அடைய வழிகாட்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நீ ஒருவனே தேவன் சூரியநாராயணன். சர்வலோகமும் உன்னை வழிபடுகிறதே ஆதித்ய. சூர்ய நாராயணா. என்னுடைய நமஸ்காரங்களையும் அவற்றோடு சேர்த்து உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன். சூரிய நமஸ்காரம். எனது நாள் உன்னருளால் இன்று நன்றாக துவங்கட்டும்.

''ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्।
रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥  1.

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||

२. दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्।
उपागम्याब्रवीद्राममगस्त्यो भगवान् ऋषिः॥

''தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||

ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான். இந்த மகத்தான யுத்தத்துக்கு. ராம ராவண யுத்தத்திற்கு எல்லா தேவதைகளும் சாட்சியாக வந்திருக்கிறார்கள். ராமனின் பராக்கிரமம் காண வந்துள்ளார்கள். இதோ அகஸ்தியரும் வந்திருக்கிறாரே.

போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார். ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் இழந்து கொண்டே வந்த ராவணன் கவலையோடு களைப்போடு நிற்கிறான் . ராமனின் எதிரே வாழ்வா சாவா போராட்டத்தில் தயாராக உள்ளான்.

राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् ।
येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ॥ 3 ॥

''அப்பா என் மகனே ராமா, கண்ணே, இதைக் கேளடா. எது பரம ரஹஸ்யமோ, சாஸ்வதமோ, அதைச் சொல்கிறேன், உச்சரிப்பாயாக. உனக்கு இதனால் வெற்றி நிச்சயம்'' என்கிறார் அகஸ்தியர் வாத்சல்யத்தோடு. ராமனிடம் யாருக்கு தான் வாத்சல்யம் இல்லை.


आदित्य हृदयं पुण्यं सर्वशत्रु विनाशनम् ।
जयावहं जपेन्नित्यम् अक्षय्यं परमं शिवम् ॥ 4 ॥

இந்த ஸ்லோகம் எல்லோரும் அறிந்தது. பரம சந்தோஷத்தை அளிக்கும் மந்திரம். இதற்கு தான் ஆதித்ய ஹ்ருதயத்தில் முக்ய ஸ்தானம். இந்த ஆதித்யனின் ஹ்ருதயத்தில் உள்ள சூர்யநாராயணனை எவர் மனம் கனிந்து வேண்டினாலும் அவர்களைப் போல் வெற்றிசாலி வேறெவரும் இல்லை. சாஸ்வதமான காரண்டீயான உண்மை இது.

सर्वमङ्गल माङ्गल्यं सर्व पाप प्रणाशनम् ।
चिन्ताशोक प्रशमनम् आयुर्वर्धन मुत्तमम् ॥ 5 ॥

இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்லோகமானது எல்லாவிதமான 'கொடிய பாபங்களையும் அழித்திடும். துக்கம், துயரம், துன்பம் எல்லாவற்றிற்கும் கைகண்ட நிவாரணி. நமது மருந்துகள் உப விளைவுகள்(SIDE EFFECTS ) ஏற்படுத்தும். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் வயிற்று வலியை கிளப்பும். முதுகு வலிக்கு மருந்து விழுங்கினால் உடலெல்லாம் சொறி போல் அரிக்கும். புண்ணாகும். சிலருக்கு மார்பில் வலி ஆரம்பிக்கும். விஷம் அதெல்லாம். இந்த மருந்து அப்படியல்ல. நூறு ஆண்டுகளையும் தருவது. ஒரு போனஸ்.

to be continued

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...