Friday, November 6, 2020

RAMAYANAM

 ராமாயணம்.       J K SIVAN 


             

      6.    சீதை எங்கே என்று தேடுங்கள்.  
 

இவர்களைப்   பார்த்தால்  தேர்ந்த  வீரர்களாக இருக்கிறார்களே.  க்ஷத்ரிய லக்ஷணம் முகத்தில்  தாண்டவமாடுகிறதே.  உடை சந்நியாசி போல  மரவுரியாகி இருப்பது முகத்திற்கு பொருத்தமில்லையே.   இது  ஏதாவது  வாலியின்  சூக்ஷ்மமாக  இருக்குமோ என்று வெகுநேரம்  சுக்ரீவன் மறைந்திருந்து  ராமலக்ஷமணர்களைப் பார்த்தான்.  ஹனுமான் நம்பகமான மந்திரி. துரோகம் செய்யத்தெரியாதவன். கெட்டிக்காரன், புத்திசாலி. அவன் அவர்களை மதிப்பதால்  எதிரியாக கருத வாய்ப்பில்லை.   சுக்ரீவன் ராமலக்ஷ்மணர்களை சந்தித்து வணங்கி  அவர்கள் விஷயங்கள் அறிந்துகொண்டான். அருகே குகையில் வைத்திருந்த ஆபரண முடிச்சை கொண்டுவந்து காட்டினான்.   சீதையின்  ஆபரணங்களைப்
பாரத்தவுடனே  ராமன் கண்களில் நீர்த்திரை.  இராவணன் அந்தப்பக்கமாக தெற்கு நோக்கி கடல் பகுதியை நோக்கி பறந்திருக்கிறான் என்பதை  சீதை  உணர்த்தி இருக்கிறாள்.   ராமனின் கதையைக் கேட்ட  சுக்ரீவன் தனது சோகக்கதையை சொன்னான்.  

''சுக்ரீவா , வாலியைப் பற்றி கவலை வேண்டாம். உன் ராஜ்யத்தை உனக்கு மீட்டுத் தருகிறேன், உன் மனைவி குடும்பமும் ஜாக்கிரதையாக உன்னிடம் சேரும்படி செயகிறேன்.''

''ராமா,  நீ நினைக்கும்படி வாலி சாதாரணன்  அல்ல. மிகுந்த பலசாலி.  அவனை எதிர்க்கும் சக்தி உனக்கிருக்கிறதா என்று முதலில் எனக்கு தெரியவேண்டும்.   சுக்ரீவன் எதிரே சுற்றுமுற்றும் பார்த்தேன்.  தூரத்தில் ஏழு மரங்கள் வரிசையாக  தெரிந்தன. 

சுக்ரீவன் மனதில் ஓடும் எண்ணத்தை சுலபத்தில் புரிந்து கொண்ட ராமன்  ''சுக்ரீவா இதோ பார்.   ஒரே ஒரு அம்பினை எடுத்து  வில்லில்  நாண்  பூட்டி  செலுத்தினான். அம்பு  அந்த ஏழு பெரிய  மராமரங்களைத் துளைத்துவிட்டு ராமனின்   அம்புறாத்தூணியில் குடி கொண்டது.   சுக்ரீவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை.  ராமன் காலில் விழுந்தான்.  

''நீ  சொல்கிறபடி செய்கிறேன்,  ராமா. நண்பா, எனக்கு நீ  கிஷ்கிந்தையை மீட்டுத்தந்தால்  நன்றிக்கடனாக உடனே  சீதையை தேடி கண்டுபிடித்து உனக்கு கொண்டுவந்து தருகிறேன். என் வீரர்கள் நாலாபக்கமும் செல்வார்கள்.''

''நீ  உடனே  வாலியை  யுத்தத்துக்கு அழைத்து வா. ஒரே அம்பில் அவனை நான் போக்குகிறேன்''
வாலியும்  சுக்ரீவனும் மல்யுத்தம் புரிந்தபோது  ராமனால்  யார்  வாலி யார் சுக்ரீவன் என்று தெரியவில்லை. ஆகவே  சுக்ரீவன் படுகாயத்தோடு திரும்பி கோபமாக  திரும்பினான்.  ''உன்னை நம்பி மோசம்போனேன். எதோ உயிர்  தப்பியது என் புண்யம்''  என்றான்.

''சுக்ரீவா  நீ தோற்று   வாலியிடம்  அடிபட்டதன்  காரணம் நீ தெரிந்துகொள்ளாமல் பேசுகிறாயே.  இருவரும் ரெட்டையர்கள் போல்   ஒரே  மாதிரியாகி  இருக்கிறீர்கள். வாலி  என்று தவறாக உன்னைக்  கொன்றுவிட்டால் என்னாவது? . 

''லக்ஷ்மணா, அதோ அந்த மரத்தின் சிவப்பு மலர்களைப்  பறித்து  தொடுத்து பெரிய மாலையாக  சுக்ரீவன் கழுத்தில் போடு. அப்போது  அடையாளம் தெரியட்டும் எனக்கு''

சிவப்பு மலர் மாலையை கழுத்தில் அணிந்து   சுக்ரீவன் மீண்டும்  வாலியை  மல்யுத்தத்துக்கு அழைத்தான்.  அழைப்பை மீறுவது வீரத்திற்கு அழகில்லை என்பதால் வாலி மீண்டும் மல்யுத்தத்தில் ஈடுபட்டபோது  மரத்தின் பின்னே  நின்றுகொண்டு கவனித்த ராமன் ஒரே அம்பில் வாலியை கொன்றான்.  மேல்  விவரங்களுக்குள் போக இந்த ராமாயண கதைச்சுருக்கம் இடம் கொடுக்கவில்லை.  ஆகவே  சுக்ரீவன் மீண்டும் கிஷ்கிந்தை மன்னனானான்.  மழைக்காலம்  தொடர்ந்ததால்  மாரிக்  காலம் முடிந்தவுடன் சீதையைத் தேடுவது என்று முடிவாகியது.    விடாமல் மழை.   ஆறு, ஏரி , குளம், கால்வாய்  எல்லாம் நீர்மயம்.   மாரிக் காலம் முடிந்தது. சுக்ரீவனை ஏன் இன்னும் காணவில்லை?  லக்ஷ்மணா உடனே சென்று   ''சுக்ரீவன் சொன்னவார்த்தை காப்பாற்றப்போகிறானா, அண்ணன்  வாலியிடம் போக விரும்புகிறானோ'' என்று கேட்டு வா  என அனுப்பினான். 

தனது தவறை உணர்ந்த சுக்ரீவன் தேள் கொட்டியதை போல் உணர்ந்து உடனே  வானர வீரர்களை
அழைத்துக்கொண்டு ராமனிடம் வந்தான்.  ஒரு மாத காலம் கெடு . நீங்கள் அனைவரும் நான்கு 
பிரிவாக  நான்கு  திசைகளிலும் சீதையை தேடி  ராவணன் எங்கு சென்றான், எங்கே அவளை வைத்தி
 ருக்கிறான் என்று அறிந்து சேதி உடனே கொண்டுவரவேண்டும்.  தவறினால் மரண தண்டனை என்று வானர வீரர்களுக்கு கட்டளையிட்டான்.

தெற்கே செல்லும் படைக்கு  வாலியின் மகன் அங்கதன் தலைவன். அவன் உதவியாளன்  ஹனுமான் மற்ற வீரர்களுடன். வழியெல்லாம் தேடிக்கொண்டு தெற்கு கடற்கரை வந்துவிட்டார்கள்.   ஒரு மாத கெடு முடிய  இன்னும் சில நாட்களே இருந்தது.   உயிரா,  சீதையா? எது முதலில் காப்பாற்றப்படவேண்டியது?  தேடினார்கள். 

தொடர்வோம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...