Sunday, November 22, 2020

THE PRIZE

                          கண்ணன் தந்த பரிசு   J K SIVAN 


மேலே    கொடகொட வென்று  மின் விசிறி சத்தம்  கேட்டு கேட்டு பழகிப்போய் விட்டது.  இருக்கும் ஒரே ஜன்னலை சாத்தியாகிவிட்டது. ரொய்ங்க்  என்ற கொசுவின் சத்தம்... 
ஏன் கொசு எப்போதும் காது அருகே வந்து மட்டும்  பாடுகிறது... கேட்டாலும் கேட்காவிட்டாலும்  ஊசி போட்டு ரத்தம் உறிஞ்சுகிறது.. அதற்கு பரிசு  என் கையால்  அடித்துக் கொள்வது  தான். கொசு பறந்துவிடுகிறது. எழுந்து உட்கார்ந்தேன்.  கிருஷ்ணன் எதிரே நின்றான்.

''கிருஷ்ணா, என்னை ஏன் இப்படி வதைக்கிறாய்?''
''ஏன் நான் என்ன செய்தேன். எப்போதும் நல்லது தானே செய்பவன் நான்''.
''என் வாழ்வு  தேவைகளிலேயே  கழிகிறதே. சந்தோஷம் இல்லையே''
''கொசுவுக்கு பரிசு கொடுக்க நினைத்தாய், நான் கொடுத்த பரிசை உணர்ந்தாயா?''
''நீ என்ன பரிசு கொடுத்தாய், எப்போது கொடுத்தாய்?''
''முட்டாளே, உனக்கு நான் தினமும் அருமையாக  நானாகவே  தருவதை நீ அனுபவிக்கவில்லை என்றால் நான் 
அதற்கு என்ன செய்யமுடியும்?இதோ பார் நீ எவ்வளவு பெரிய பணக்காரன் என்று. தெரியாமலேயே முட்டாளாக வாழ்கிறாயே'' என் வங்கிக்கணக்கை என்னிடமே நீட்டினான்....
நான் எப்படி இதை அறியாமல் போனேன்.   என்னை விழிக்க வைத்தவன் கிருஷ்ணன்.  நான் செல்வந்தன்  என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே.  தினமும்  86400 ரூபாய்  எனது வங்கி கணக்கில்  கிருஷ்ணன் கட்டிவிடுகிறான் .
''கிருஷ்ணா  என் மேல் எவ்வளவு கருணை உனக்கு . நன்றிடா''
''உனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் தான் தருகிறேன். சிலர்  அதை தெரிந்துகொள்கிறார்கள்.  நீ லேட்'' 

''ஆமாம்  நான் லேட். என் கணக்கில் அன்று காலை 86400 ரூபாய் வள்ளிசாக இருந்தது.''
''இதோ பார்  வாயை பிளக்காதே.  இந்த ரூபாய் உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சமமாக தருகிறேன்.
 ஆனால்  சில நிபந்தனைகளுக்கு கட்டுப்படவேண்டும்.''
''என்ன நிபந்தனை அப்படி?''
''தினமும்  86400 ரூபாய் மட்டும் தான் தருவேன், கூடவோ கம்மியோ  கிடையாது.  அதை நீ முழுதுமாக செலவு செய்யலாம்.   செலவு செய்யாமல்  மீத்து வைத்தால்  அது உன் கணக்கிலிருக்கும் என்று கனவு காணாதே.  மீந்ததை எடுத்து விடுவேன்.   நிறைய பேர் அப்படி என்னிடம் கோட்டை விடுகிறார்கள் ''
''சரி.'' 
''இதை நீ யாருக்கும்  மாற்றமுடியாதபடி வைத்திருக்கிறேன். நீ மட்டும் தான் உன் இஷ்டம் போல் செலவு செய்யலாம்.தினமும் காலையில்  நீ படுக்கை விட்டு எழுந்ததும் பார்  உன் கணக்கில்  86400 ரூபாய்  இருக்கும் ''
  ''ஓ''
''இன்னொரு விஷயம்.  எப்போதும் இது உனக்கு கிடைக்கும் என்று  மன்னார்சாமி மனக்  கோட்டை கட்டாதே. ஒருநாள் திடீரென்று நான் நினைத்தபோது உன் கணக்கில் இந்த  பணம் ஏறாது. நிறுத்தி விடுவேன். உன்னிடம் சொல்லாமலேஏ .''
''ஐயோ''
''நீ  என்ன செய்யப்போகிறாய்?  உன் இஷ்டப்படி   ஆடுகிறாயா,   எதெல்லாம் வாங்கி குவிக்கவேண்டுமென்று நினைக்கிறாயோ அதெல்லாம் செய்.  உனக்கு உன்னை சேர்ந்தவர்களுக்கு விரும்பியவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு தெரியாதவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும்  நீ  அதை செலவு செய்ய  அனுமதிக்கிறேன்.  ஆனால்  ஏற்கனவே சொன்னதை  நன்றாக கவனத்தில் வை.   மீதி இருந்தால் அடுத்த நாள் உன் கணக்கில் ஏறாது.  அதற்குள் சாமர்த்தியமாக, கெட்டிக்காரனாக பயனுள்ளதாக செலவு செய்''

கண்ணன் கொடுத்த இந்த  பரிசை உணர்ந்து கொண்டேன்....விளையாட்டு அல்ல  நிஜம். 
கிருஷ்ணன் சொன்னது எனக்கு மட்டும் அல்ல.  ஏன் நம் எல்லோருக்கும் தான்.
நீங்கள் நிறைய பேர்   உங்கள் வங்கிக்கணக்கு புத்தகத்தை பார்ப்பதில்லை என்று தெரிகிறது. 
ஆச்சர்யமாக இருக்கிறதா.  வாஸ்தவம் ஸார் .
அவன் கொடுப்பது தானாகவே  எல்லோருக்கும்  சரி சமானமான  ''பரிசு''  ஸார் 
என்ன பரிசு  என்று கேட்பது காதில் விழுகிறது.
ஒவ்வொருநாளும்  86400  வினாடி  துளிகள்  நாம்  உயிரோடு வாழ்வதற்கு தருகிறான்.  
காலம்  TIME   தான்  அந்த பரிசு.
ஒவ்வொரு வினாடியும் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிட்டு ஒரு வினாடி கூட வீணாக்காமல் வாழ கற்றுக் கொள்ளவேண்டும். வாழ  வழி எத்தனையோ இருக்கிறது.  
ஒவ்வொரு வினாடியும் அற்புதமாக செலவழிக்கலாம்.
 எல்லோருக்கும் பயன்பட அதை உபயோகிக்கலாம்.
செலவாகாத  வீணான  வினாடிகள் திரும்ப பெறமுடியாதே . கணக்கில் ஏறாத ரூபாய்.
இந்த  86400  வினாடிகள்  பணத்தை விட  மதிப்பு வாய்ந்தவை.


இப்போதே  இதை படித்தது முதல்  பிளான் பண்ணுங்கள்.  ஒவ்வொரு  வினாடியையும்  நல்லபடி உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் மற்ற, தெரிந்த,  தெரியாதவர்களுக்கெல்லாம் உபயோகமாக,  பயன் பட  செலவழியுங்கள்.

இதில் ஒரு ரஹஸ்யம். அதையும் சொல்லிவிடுகிறேன். 
செலவழிக்க  செலவழிக்க  அந்த வினாடிகள்  நிறைய  சந்தோஷம் தரும் , மனநிறைவு  கூடும். நாம் கண்டுபிடித்து  உபயோகிக்கும் காசு அப்படி செய்யாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...