ஆதித்ய ஹ்ருதயம்: J K SIVAN
வணங்குகிறேன் சூர்யா - ஸ்லோகங்கள் 6 -12
ஆதித்ய ஹ்ருதயம் அற்புதமான சூரிய ஸ்துதி. அகஸ்தியர் அவதாரமான ராமனுக்கு உபதேசித்தது. எல்லோருக்கும் பயனளிப்பது. சென்ற பதிவில் முதல் ஐந்து ஸ்லோகங்களை விளக்கினேன். இப்போது மற்றும் 7 ஸ்லோகங்களை பார்ப்போம்:
रश्मिमन्तं समुद्यन्तं देवासुर नमस्कृतम् ।
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥ 6 ॥
ரஸ்மி மந்தம் சமுத்தியந்தம் தேவாசுர நமஸ்க்ருதம்
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥ 6 ॥
ரஸ்மி மந்தம் சமுத்தியந்தம் தேவாசுர நமஸ்க்ருதம்
பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரும் புவனேஸ்வரம்.
' இதோ பார் ராமா, சூரியனை பிரார்த்தனை செய்து கொள். அவன் தான் உலகமெல்லாம் பரவி நிற்கும் சூரிய காந்தன், ஒளிக்கதிரின் சொந்தக்காரன். தினமும் காலை கிழக்கே, கீழே யிருந்து, கடலோ மலையோ, நிலமோ மேலே மெதுவாக எழுகிறான். அவனை தேவர்கள் அசுரர்கள் எவருமே அன்றாடம் வணங்குகிறார் கள். பிரபஞ்சமே தொழும் தேவன் அந்த சூர்யநாராயணன். ஆதித்யன்.
सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः ।
एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥
சர்வ தேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி, ரஸ்மி பாவன
सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः ।
एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥
சர்வ தேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி, ரஸ்மி பாவன
யேஷ தேவாசுர கணான் லோகான் பாதி கபஸ்திபி:
இந்த சூரியனை ஏதோ ஒருவன் என்று நினைத்து விடாதே. அவனுள் தான் முப்பது முக்கோடி தேவர்களும் ஐக்கியம். ஒளிக்கு ஒளி கொடுப்பவன். இந்த பிரபஞ்சத்தை தனது ஒளிக்கதிர்களால் வியாபித்து ஆள்பவன். தேவர்கள் அசுரர்கள் அனைவருக்கும் உலகிற்கும் அவனே ஜீவாதாரமானவன்.
एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः ।
महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ॥ 8 ॥
ஏஷ ப்ரம்மா ச விஷ்ணுஸ்ச ஷிவா ஸ்கந்த பிரஜாபதி
एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः ।
महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ॥ 8 ॥
ஏஷ ப்ரம்மா ச விஷ்ணுஸ்ச ஷிவா ஸ்கந்த பிரஜாபதி
மஹேந்த்ரோ தனத காலோ எம சோமோ ஹைப்பம் ஹ்யாபாம் பதி
ஆதித்ய நாராயணன் யார்? அவனே பிரம்மா. அவனே விஷ்ணு. அவனே சிவன். அவனே ஸ்கந்தன். அவன் தான் உலக மனித உயிர்களுக்கு மூல காரணன். தேவராஜன். அவனையே குபேரன் என்கிறோம். சகல சம்பத்துக்கும் அதிபதி. அவன் காலன். யமன். வாழ்விக்கறவன் போலவே சம்ஹரிக்கிறவனும் கூட. குளிர்ந்த நிலவு, சந்திரனும் அவனே. தாரையாக பொழியும் மழைக்கதிபதி வருணனும் அவனே.
पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः ।
वायुर्वह्निः प्रजाप्राणः ऋतुकर्ता प्रभाकरः ॥ 9 ॥
பிதரோ வசவ: சாத்யா ஹ்யஸ்வினோ, மறுத்தோ மனு :
வாயுர்வஹ்னி பிரஜாப்ராண' ருது கர்த்தா பிரபாகர :
ஆதித்யன் தான் பித்ரு தேவன். அஷ்ட வசுக்களும் அவன் பிம்பங்களே. சாத்யாவும் அவனே. அஸ்வினி தேவதைகளும் அவன் ஸ்வரூபமே. வாயுவானவனும் அவனே. ஆதித்யன் அக்னி தேவனும் கூட. சகல ஜீவராசிகளின் உயிர் அவன். ஆத்மாவும் அவன் தானே. காலங்களை உருவாக்குகிறவன் அவன் தான். பிரகாசிப்பவன் அவனே. அவனைப் பற்றி போற்றி பாடுவது தான் ஆதித்ய ஹ்ருதயம்.
आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान् ।
सुवर्णसदृशो भानुः हिरण्यरेता दिवाकरः ॥ 10 ॥
ஆதித்யஃ ஸவிதா ஸூர்யஃ ககஃ பூஷா கபஸ்திமான் |
ஸுவர்ணஸத்றுஶோ பானுஃ ஹிரண்யரேதா திவாகரஃ || 10 ||
'ஹே சூர்ய நாராயணா. நீ அதிதி புத்திரன். அதனால் உன்னை ஆதித்யன் என்று வணங்குகிறோம். லோக சிருஷ்டிகர்த்தா. எங்கள் ஒவ்வொரு செயலும் உன்னால். உன்செயலால் அன்றி எது ஆகும்? வானவெளியில் வலம் வருபவன். நீ இன்றி மழை ஏது. மழை இன்றி உலகேது? தங்க ஒளி படைத்த கதிரவனே, பொன் வண்ணனே , பிரகாசமே, தினகரா உன்னால் தானே தினங்களே உருவாகிறது.
हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्ति-र्मरीचिमान् ।
तिमिरोन्मथनः शम्भुः त्वष्टा मार्ताण्डकोஉशुमान् ॥ 11 ॥
ஹரிதஶ்வஃ ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஸப்தி-ர்மரீசிமான் |
திமிரோந்மதநஃ ஶம்புஃ த்வஷ்டா மார்தாண்ட அம்ஶுமான் || 11 ||
''சூரிய தேவா, உனது ரதத்தில் பூட்டிய பச்சை நிற ஏழு குதிரைகளுடன், ஆயிர ஒளி கிரணங்களுடன் இருளை விரட்டுபவனே, ஆனந்தமய வாழ்வு உன்னால் தானே சூரியநாராயணா, ஜனன மரண காரணா, சொல்லொணா புகழ் மிக்கவனே, உனக்கு நமஸ்காரம்''.
हिरण्यगर्भः शिशिरः तपनो भास्करो रविः ।
अग्निगर्भोஉदितेः पुत्रः शङ्खः शिशिरनाशनः ॥ 12 ॥
ஹிரண்யகர்பஃ ஶிஶிரஃ தபனோ பாஸ்கரோ ரவிஃ |
அக்னிகர்போஉதிதேஃ புத்ரஃ ஶங்கஃ ஶிஶிரனாஶனஃ || 12 ||
''ஹிரண்ய கர்பா, உள்ளும் புறமும் சுவர்ண பிம்ப மயமானவனே, மனக் கிலேசம் எல்லாம் நீக்குபவனே, உஷ்ணத்தை அளித்தாலும் அதிலிருந்து தாபத்தை அகற்றுபவனே, ஒளி ஊட்டுபவனே, எல்லோராலும் விரும்பி போற்றப்படுபவனே, இணையற்ற அக்னியை தன்னுள் கொண்டவனே, அதிதியின் புத்ரனே, விருப்பமுடன் ஆகாயமார்கமாக பிரயாணிப்பவனே, பனி,குளிர் ஆகியவற்றை நாசம் செய்பவனே, உனக்கு நமஸ்காரம்.

நமது வாழ்வுக்கே ஆதாரமான சூரியனாய் நன்றியோடு நாமும் வணங்குவோம்.
No comments:
Post a Comment