துரோணாச்சார்யார் J K SIVAN
மஹா பாரதத்தில் சாதனைகளைத் தவிர வேதனைகளும் சோதனைகளும் அதிகம். எவராலும் நெருங்க முடியாத பீஷ்ம பிதாமகர் சாய்ந்து விட்டார். கௌரவ சேனைக்கு அடுத்த சேனாபதி யாக துரோணாச்சார்யார் பொறுப் பேற்றுக்கொண்டு இதோ வந்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் கொல்கிறார். அவர் எதிரே மற்றவர்கள் கொசுக்கள்.
''பாண்டவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறீர்கள்,பாரபக்ஷமாக இருக்கிறீர்கள்'' என்றும் பேசும் துரியோதனனின் சுடு சொற்கள் வேறு அவரது கோபத்தை தூண்டி விட்டது. பாண்டவ சைன்யத்தை அன்றே துவம்சம் செயது யுதிஷ்டிரனை சிறைபிடித்து துரியோத னனிடம் ஒப்படைக்க துணிந்துவிட்டார்.
இருபதாயிரம் பாஞ்சால வீரர்கள் ஆயுதங் களோடு துரோணரை எதிர்த்தனர். ஆயிரக் கணக்கான அம்புகள் ஈட்டிகள் துரோணர் மேல் வீசப்பட்டன. சூரியனை கருமேகம் சூழ்ந்தது போல் இருந்தார். இது தான் தருணம் என பிரம்மாஸ்திரத்தை எடுத்து விட அத்தனை பேரும் மாண்டனர்.
சோமகர்களின் தாக்குதல் துவங்க அவர்களும் கொல்லப்பட்டனர். பாரத்துவாஜ ரிஷி புத்ரன் துரோணாச் சார்யார் எங்கும் ரத்த ஆறு ஓடச் செய்தார். அதில் எண்ணற்ற தலைகள் மிதந்தது. குருக்ஷேத்திர பூமி ரத்தச் சேறில் நடக்க முடியாதபடி, தேர்கள் ஓடமுடியாமல் தடுமாறின.
மத்ஸ்ய ராஜன் வசுதனன் எதிர்த்தான். தலை கொய் யப்பட்டு விழுந்தான். அவனுக்கு உதவி யாக வந்த ஐநூறு மத்ஸ்ய வீரர்கள், ஆறாயிரம் யானைகள், பத்தாயிரம் குதிரைகள் மாண்டன. விபரீதம் எல்லை மீறிவிட்டது. வானில் ரிஷிகள் முகம் தெரிய ஆரம்பித்தது.
என்ன நடக்கிறது இங்கே? விஸ்வாமித்ரர், ஜமதக்னி, துரோணரின் தந்தை பாரத்வாஜர் ஆகியோர் முகம் சிவந்து காணப்பட்டனர். க்ஷத்ரியர்கள் எத்தனை பேர் நாசமாகிவிட்டனர். இதோ கௌதமர், வசிஷ்டர், காஸ்யபர், அத்ரி, ஸ்ரீகதாஸ், ப்ரிசினிகள், மரிசிகள் , ப்ருகு வம்ச ரிஷிகள், ஆங்கிரஸ் எல்லோருமே சூக்ஷ்ம சரீரத்தில் வந்துவிட்டனர்.
''த்ரோணா, நீ செய்வது முறையல்ல, சாஸ்திர விரோதமாக செயல்படுகிறாய். உன் சக்தி வாய்ந்த ஆயுதங்களால் எண்ணற்ற க்ஷத்ரியர் களை மாய்ப்பது உனக்கு அழகல்ல. உனது தர்மத்துக்கு இது விரோதமான செயல். அவற்றை எறிந்துவிடு. உன் முடிவு நெருங்கி விட்டது. நீ உன் இயற்கை தர்மத்தை விட்டு, பிரம்மத்தை அடைய முயல்வதற்கு பதிலாக வழி மாறி விட்டாய். இதை உனக்கு தக்க நேரத்தில் அறிவுறுத்த தான் நாங்கள் வந்திருக் கிறோம். இனியும் நீ கொடூர செயல்கள் புரியக் கூடாது. நீ வேதங்கள் நன்றாக பயின்றவன். பிரம்மத்தை அடைய வேண்டிய பிராம்மணன் நீ. பிரம்மாஸ்திரத்தை எடுத்து நீ செய்த தவறுகள் போதுமானவை. பாபகார்யங்கள் செய்யாதே. அழிவுப்பாதையிலிருந்து மீண்டு அழியாத மோக்ஷத்தை நாடு. பூலோகத்தில் நீ வாழ வேண்டிய நாட்கள் முடிந்து விட்டது. வா எங்களுடன் வந்து சேர்''
எதிரே துரோணரை முடிக்கவென்றே அவதரித்த த்ரிஷ்டத்யும்னன் தெரிந்தான். அவனுடன் பீமன்.
துரோணரின் ஒரே மகன் ''அஸ்வத்தாமனைக் கொன்றுவிட்டேன்'' என்கிறான் பீமன். துக்கம் துரோணரை வீழ்த்தியது. யுத்த களத்தில் மஹா வீரனான அஸ்வத்தாமன் பாண்டவர் களை தாக்கிக் கொண்டுஇருந்தவன் பீமனால் கொல்லப்பட்டானா? மஹா வீரன் அஸ்வத்தா மனை எளிதில் கொல்லமுடியாதே ? உண்மையா பொய்யா இது? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது? ஆம் எதிரிப்படையை சேர்ந்தவன் ஆனாலும் யுதிஷ்டிரன் ஒருவனே நம்பகமானவன். கேட்போம்'' என துரோணர் எண்ணினார்.
''யுதிஷ்டிரா, என் மகன் அஸ்வத்தாமன் கொல்லப் பட்டானா சொல்?''
கிருஷ்ணனுக்கு த்ரோணரை நன்றாகத் தெரியும். பாண்டவர்களையும் அவர்கள் சேனை முழுதும் அழிக்கக்கூடிய ஒரே சக்தி துரோணர் தான். கோபத்தோடு துரோணர் புறப்பட்டால் அரை நாள் போதும் அனைவரை யும் எமனுலகு அனுப்ப. பல உயிர்களைக் காக்க ஒரு உயிரைப் பொய் சொல்லி கொல்வது நியாயம் தான். பொய் நன்மை பயக்கும் என்றால் உண்மையை விட சிறந்தது அல்லவா?. ஆயிரம் பொய் சொல்லி
ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்பார்களே. அதுவும் உண்மை தானோ?.
முன்னேற்பாட்டின் படி ''அஸ்வத்தாமன்'' என்கிற மால்வா தேசத்து ராஜா இந்த்ரவர்மனின் யானையை பீமன் கொன்றுவிட்டான் அதை துரோணன் காதில் விழும்படி அறிவித்தும் விட்டான். இனி வினாடி நேரமும் தாமதம் செய்வது ஆபத்து.
''யுதிஷ்டிரா, நீ இப்போது சொல்வதில் தான் உங்கள் உயிரும் மற்ற எண்ணற்ற உயிர்களும் தப்பும்'' என்று கிருஷ்ணன் எச்சரித்தான்.
'' ஆமாம் குருதேவா,''.......... அஸ்வத்தாமன் என்கிற யானை மாண்டது உண்மை.''
துரோணன் எதிர்பார்த்தது அஸ்வத்தாமன் எனும் தனது மகன் மாண்டது பற்றி. அதுவரை யுதிஷ்டிரன் தேரும் குதிரைகளும் நான்கு அங்குல உயரத்தில் பூமியில் படாதவாறு சென்றது உடனே தரையைத் தொட்டது.
''ஆமாம் குருதேவா'' என்ற வார்த்தை மட்டுமே துரோணன் காதில் விழுந்தது. அடுத்து யுதிஷ்டிரன் சொன்ன விபரம் துரோணர் காதில் விழவில்லை, அவ்வளவு யுத்த பேரிகைகள் முழங்கப்பட்டன.
ஒருபக்கம் மகனை இழந்த துக்கம், மறுபக்கம் மேலே தந்தையும் முன்னோர்கள், மற்ற மஹா ரிஷிகள் அவருக்கு அறிவுரை தந்தது எல்லாம் துரோணர் மனதை நிரப்ப கையிலிருந்த வில்லை, ஆயுதங்களை வீசி எறிந்தார் கண்ணை மூடி தீர்த்தத்தில் தியானத்தில் அமர்ந்தார் .
''ஆஹா, அப்புறம் என்ன நடந்தது என்று திருதராஷ்டிரன் கேட்க சஞ்சயன் தொடர்ந்தான்.
'' இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த, த்ரோணரை முடிக்கவே பிறந்த த்ரிஷ்ட த்யும் னன் ஒரு கொடிய அஸ்திரத்தை துரோணன் மேல் செலுத்தினான். துரோணன் அதை தடுத்து நிறுத்த முயன்றாலும் அவரது ஆயுதங்கள் உடன்படவில்லை. ஆங்கிரஸ் ரிஷி அளித்த வில்லை உபயோகித்து திருஷ்ட த்யும்னன் மேல் அஸ்திரங்களை செலுத்தினார் துரோணர். எதிர் பார்த்த பயன் அது அளிக்கவில்லை. ரிஷிகளின் சாபமோ? திருஷ்டத்யும்னன் மீண்டும் ஒரு சக்தி அஸ்திரத்தை துரோணன் மார்பை நோக்கி செலுத்தினான்.துரோணன் அவற்றை முறித்தார் . திருஷ்டத்யும்னன் தேர், உடைந்து குதிரைகள் மாண்டன .சாத்யகி அதற்குள் த்ரோணரின் தேர், குதிரைகள், வில் ஆகியவற்றை உடைத்தான். கையில் கூரிய வாளோடு த்ரிஷ்டத்யும்னன் துரோணர் மீது பாய்ந்தான். இதற்குள் துரியோதனன் சாத்யகியை க்கொல்ல கர்ணன், க்ரிபர் மற்றும் ஒரு பெரும்படையோடு அணுகினான். சாத்யகிக்கு உதவ யுதிஷ்
டிரன், நகுல சகாதேவர்கள், பீமன் ஆகியோர் சூழ்ந்து கொண்டனர். கௌரவப்படை விலகியது.
டிரன், நகுல சகாதேவர்கள், பீமன் ஆகியோர் சூழ்ந்து கொண்டனர். கௌரவப்படை விலகியது.
இதற்கிடையில் தான் பாஞ்சாலன் திருஷ்ட த்யும்னன், துரோணர் மீது பாய்ந்து தாக்கினான். த்ரோணருக்கு இடது கண் துடித்தது. ஆயுதங்கள் பலனளிக்கவில்லை. ரிஷிகளின் வாக்கு காதில் ரீங்காரம் செய்தது. தனது முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் திருஷ்டத்யும்ன னின் வாள் த்ரோணத்தின் சிரத்தை துண்டித்தது. உயிரற்ற துரோணரின் சிரத்தை வாளால் இழுத்து துரியோதனன் இருந்த பக்கம் அதை வீசி எறிந்தான். த்ரிஷ்ட த்யும்னன் தான் பிறந்த லட்சியத்தை நிறைவேற்றினான்.
மஹாபாரதம் அப்போது துரோணரின் வயது எண்பத்தைந்து என்று சொல்கிறது. அது நடு வயது அப்போது. பதினாறு வயது பாலகனாக பலமிக்கவனாக துரோணன் போர் புரிந்ததை எல்லோரும் அறிவார்கள். எல்லோருமே நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த காலம்.
No comments:
Post a Comment