Tuesday, November 17, 2020

GITANJALI

 

கீதாஞ்சலி  64        J  K SIVAN
தாகூர்

                                                            64.   தீப  ஒளி..   .

64   ON THE SLOPE of the desolate river among tall grasses I asked her, 'Maiden, where do you go shading your lamp with your mantle? My house is all dark and lonesome-lend me your light!' She raised her dark eyes for a moment and looked at my face through the dusk. 'I have come to the river,' she said, 'to float my lamp on the stream when the daylight wanes in the west' I stood alone among tall grasses and watched the timid flame of her lamp uselessly drifting in the tide.

In the silence of gathering night I asked her, 'Maiden, your lights are all lit-then where do you go with your lamp? My house is all dark and lonesome,-lend me your light.' She raised her dark eyes on my face and stood for a moment doubtful. I have come,' she said at last, 'to dedicate my lamp to the sky.' I stood and watched her light uselessly burning in the void.'

In the moonless gloom of midnight I asked her, 'Maiden, what is your quest holding the lamp near your heart? My house is all dark and lonesome,-lend me your light.' She stopped for a minute and thought and gazed at my face in the dark. I have brought my light,' she said, 'to join the carnival of lamps.' I stood and watched her little lamp uselessly lost among lights.


ரம்யமான இடம்.  மலைச்சரிவு. ஜிலுஜிலுவென்று பளிங்கு போல் நீரோடு ஒரு காட்டாறு மேட்டிலிருந்
து

 பள்ளத்தை நோக்கி ஓடும் இடம்.  அருகில் யார் காலும் படாத  பச்சைப் பசும்புல் வெளி. ஆடு மாடு இருந்தால் மேய்ந்து தின்ன ரெண்டு வருஷத்துக்கு ஸ்டாக் இருக்கும் இடம்.    என் வீட்டிற்கு அழகான அதில்  வழக்கமாக  நடந்து செல்வேன். அப்போது அவளை   முதன்முதலாக  பார்த்து  ஒருநாள் கேட்டேன்:

''அம்மா, எங்கே  உன்  கை விளக்கை காற்றில் அணையாமல் மூடி கொண்டு போகிறாய்? என் வீடு இருளோ என்று இருக்கிறதே  உன் விளக்கை கொடேன்?''

பொழுது சாய்ந்த அந்த வேளையில் இன்னும்  இருள்  முழுதும்  கவ்வி  அந்தகாரம்  ஆக்கிரமிக்க வில்லை. எதன் மீதும்  மோதிக்கொள்ளாமல் போகும் அளவுக்கு துளி வெளிச்சம் இன்னும் இருந்தது.  

என்னை  ஏற ற இறங்க பார்த்தாள் . அவளது கரிய விழிகள் என் முகத்தை ஆராய்ந்தன.

''நான் இந்த தீபத்தை  ஓடும் நீரில்   சூரியன் மேற்கே மறைந்த  சந்தியா காலத்தில்  என் வழிபாடாக மிதக்க விட எடுத்து  வந்தேன்''

நான் பேசாமல் அவள்  மெதுவாக நடந்து  ஓடும் நீரில் அந்த தீபம் மிதந்து திண்டாடிக்  கொண்டு போவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.  இதனால் என்ன பிரயோஜனம்.  என் வீடாவது ஒளி பெற்றிருக்குமே .

கிடுகிடுவென்று இருண்டு விட்ட அந்த  முன்னிரவில் அவளை  மறுபடியும்  என் வீட்டிற்கு அருகே  பார்த்துக்
கேட்டேன்:

`அம்மா, உன் தீபங்கள்  நன்றாக எரிந்து வெளிச்சம் கொடுக்கிறதே. மீண்டும் தீபத்தை எடுத்துக்கொண்டு எங்கே செல்கிறாய்.  என் வீட்டைப் பார்த்தாயா, இருட்டில் மறைந்தே போய்விட்டது. ஒரு விளக்கை தருவாயா?'

 ''இந்த தீபம்  ஆகாசத்துக்கு ... என் அர்ப்பணம் '' 

இந்த முறை அவள்  தீபம்  வெட்ட வெளியில்  அர்த்தமில்லாமல் மேல் நோக்கி எரிந்து கொண்டிருந்தது.
சந்திரனில்லாத  மொட்டை  வானத்தில் இருள் மண்டிக்கிடக்க,  நள்ளிரவில் அவளை பார்த்து மீண்டும் கேட்டேன்.

''அம்மா எதற்கு இந்நேரம்  ஒரு விளக்கை உன் மார்போடு அணைத்துக்  கொண்டு நிற்கிறாய்.   என்ன  உன் மனதில் எண்ணம்  இப்போது? இந்த விளக்கு எதற்காக?    என் வீட்டின் இருளை போக்க அதை தரக்கூடாதா?

இருளில் அவள் என்ன நினைத்தாள் , என் முகத்தில் என்ன பார்த்தாள் , நான் அவளது முகத்தையே  பார்க்க இயலவில்லையே.  குரல் மட்டும் தானே கேட்கிறது. 

என் குரல்  கேட்டது அவளுக்கு. அவள் பதிலும் எனக்கு கேட்டது.  மெதுவாக அவள் என்ன சொன்னாள்  தெரியுமா?

இந்த விளக்கை நான் ஏன் கொண்டு வந்தேன்  தெரியுமா  சற்று தொலைவில்  ஒரு  கோவில்  மண்டபத்தில்  விளக்குகள்  தீபாலங்காரம்  செயகிறார்கள் அங்கே இதையும் சேர்த்துவிடுவதற்காக எடுத்துச் செல்கிறேன்.''

ஒரு க்ஷணம்  யோசித்தேன். எத்தனையோ  தீபங்களோடு இந்த பெண்ணின் தீபமும் சேர்ந்து எங்கோ எரியப்போகிறது. என்ன அதனால்  பயன்?

தாகூரின் மனதில் ஓடிய  எண்ணம் என்ன? அதிருப்தியா?  புரியாத தியாகமா?   சுய முயற்சியின்றி  மற்றவர் உதவியை எதிர்பார்த்து  வாழும்  சுயநல வாழ்வில்  ஈடுபாடா?  தன்னிடமிருப்பதை  பலவிதத்தில்  பாபக்ஷமின்றி எல்லோரும் பயன்பட உதவும்   இயற்கைக்கு  வந்தனமாக   அந்த பெண்  செலுத்தும் மனமுவந்த  நன்றி காணிக்கை   ஒரு தனிமனிதன் சுகத்திற்கு அல்ல என்ற அந்த பெண் புகட்டிய பாடமா???  

வாசகர்களே யோசியுங்கள்  உங்களுக்கு  பிடித்த  விடை  தேடி இன்புறலாமே .  உங்கள்  சுதந்திரத்தில் நான் குறுக்கிட போவதில்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...