Dear Friends,
Mr. Ram Ganesh of RGChannel, Nanganallur, visited me Saturday, 21.11.20 and asked me to tell an incident on Mahaperiyava and I recalled what I recently wrote about an old devotee who was fortunate to end his mortal life in presence of Maha Periyava,. The video recording can be heard and seen by clicking the link https:/
/youtu.be/84vx4-y8ZEg
I COPY BELOW WHAT I WROTE A COUPLE OF DAYS AGO ABOUT THIS INCIDENT:
பேசும் தெய்வம். J K SIVAN
முதல்லே பெரியவா தரிசனம்.....
இது மாதிரி நான் ஒரு விஷயம் அறிந்தது கிடையாது. ஆச்சர்யமும் அதிசயமும் கலந்த இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா இல்
இனியும் புதிர் போடாமல் விஷயத்துக்கு வருகிறேன்.
அந்த பக்தருக்கு மகா பெரியவாளை தரிசனம் பண்ண தாகம். முதுமை, உடல் தளர்ச்சி, தனியாக போக முடியாதே. யாராவது ஒரு துணை இல்லாமல் வெளியே போக முடியாது. ஆட்டோ, டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் கையில் காசு வசதியில்லை. நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது ''அவன்'' வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும். ஒரே ஒரு தடவை.....அதுவும் வெறும் பகற்கனவு என்பதும் தெரிகிறது. அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக, ஆக, ஒவ்வொருநாளும் இந்த தாகம் கூடிக்கொண்டே தான் போகிறது. தவிப்பும் வளர்கிறதே.
வாசற்படியில் ஏதோ காலடிச் சத்தம் கேட்டாலே, ''அவன்'' தானோ? வந்துட்டானோ. அட்ரஸ் கண்டுபிடிச்சிட்டானோ? அவனுடன் போக பயம் ஒன்றும் இல்லை. எதிர்பார்த்தது தான். ஆனால் அவாளை பார்க்காமல், தரிசிக்கா மல் போகிறோமே!.... ஏக்கம். இயலாமை...
ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம் நிஜமாகவே கெட்டுவிட்டது.
''யாரு?''
''காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கேன்....''
''ஓஹோ அடடா வாங்கோ .... ''
''உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்தரவு''
நான் என்ன கனவா காண்கிறேன்... எப்படி என் மனசுக்குள்ளேயே நான் பேசிக்கொள்வது எங்கோ காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாளுக்கு கேட்கிறது? இப்படி வெளியே தெரியாத ஒரு டெலிபோன் கூட இருக்கா?
அந்த கிழவரின் உடல் சிலிர்த்தது. குப்பென்று வியர்த்தது. வார்த்தைகள் தடுமாறியது.
''நான் யார்? எதில் சேர்த்தி? பண்டிதனா? சாஸ்திரியா? ஞானியா? தர்மிஷ்டனா? பணக்காரனா? புரவலனா? அக்னிஹோத்ரியா? ஏதாவது கவர்ன்மென்ட் அதிகாரி, MLA , கவுன்சிலர், மந்திரி, கட்சி தலைவன்.... ஹுஹும்.. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையே. கடைசியாக எப்போ பெரியவாளை பார்த்தேன். ஒருநாள் ஒரு தேங்காயை மட்டும் எதிர்க்க வச்சு நமஸ்காரம் செய்தது ஞாபகம் வருது... எதிரே கண்ணாடி போட்டுண்டு, காவி வஸ்திரம், கையில் தண்டம், தலைமேல் வில்வமாலை குறுக்கே போட்டுண்டு, செவுத்திலே சாஞ்சிண்டு ஒரு காலை மடக்கி உட்க்கார்ந்துண்டு இருந்த தெய்வம்...... முகம் இன்னும் ஞாபகம் இருக்கு...
மெதுவாக எழுந்த கிழவரை, மடத்தில் இருந்து வந்தவர் இடுப்பில் ஒரு கை , தோளில் ஒரு கை கொடுத்து அணைத்து பிடித்துக்கொண்டு நடத்தி வாசலில் நின்ற காரில் ஏற்றுக்கொண்டார். கிழவர் ஒரு கணம் யோசித்தார். ஏதாவது எடுத்துக் கொள்ள மறந்துவிட்டேனா? பை , பழம், பர்ஸ்.... ஒன்றுமே தொடவில்லை, வெறும் கையோடு , கட்டின வேஷ்டி மேல் துண்டை சுறுக்கி இடுப்பில் கட்டிண்டு கிளம்பிட்டார்.
உள்ளூர சிரிப்பு. என்ன இது கார் கொண்டு வந்திருக்கே.... வேகமாக அவரைப் போய் பார்க்க விமானம் அல்லவோ கொண்டு வந்திருக்க வேண்டும்.....
காரில் காஞ்சிபுரத்தில் மடத்தில் நுழைந்த போது மார்பு படபடத்தது... பெரியவா அங்கே இல்லை அப்போது. விசாரித்ததில் .... ''பெரியவா இதோ வர நேரம்... காமாக்ஷி தரிசனம் பண்ண போயிருக்கா'' என்று தெரிந்தது.
கூட வந்த மடத்து ஆள் ''தாத்தா, பெரியவா வரதுக்குள்ளே சட்டுன்னு அம்பாளைத் தரிசனம் பண்ணறேளா . வாங்கோ அழைச்சுண்டு போறேன் ''
''இல்லேப்பா முதல்லே, பெரியவா தரிசனம் அப்புறமாதான் மத்ததெல்லாம் ..''
சற்று நேரத்தில் மஹா பெரியவா வந்துட்டா. கும்பல் நெருங்கியது.
வரிசையாக நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டார். இதோ பெரியவாள் எதிரில்....எத்தனை காலம் காத்திருந்த சந்தர்ப்பம் இதோ அதிர்ஷ்டவசமாக கிடைத்துவிட்டதே. நழுவ விடலாமா.....மனது ஆனந்தத்தில் கொப்புளித்தது. மார்பில் படபடப்பு அதிகரித்தது.
வரிசையாக நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டார். இதோ பெரியவாள் எதிரில்....எத்தனை காலம் காத்திருந்த சந்தர்ப்பம் இதோ அதிர்ஷ்டவசமாக கிடைத்துவிட்டதே. நழுவ விடலாமா.....மனது ஆனந்தத்தில் கொப்புளித்தது. மார்பில் படபடப்பு அதிகரித்தது.
பெரியவா கண்களை உற்று பார்த்தார். கண்கள் சந்தித்து மனசை திறந்து வார்த்தைகளை பேசாமலேயே கொட்டின. கைகளை தூக்கி சிரமேல் வைத்து நமஸ்கரித்தார்.
மனசு லேசாயிற்று. நான் எங்கே பறந்து கொண்டிருக்கிறேன்.... கீழே ஆயிரம் மைல்களுக்கு கீழே காஞ்சிபுரம், மடம் , மஹா பெரியவா என் நமஸ்காரம்......... பாக்யம் ஆனந்தம்...
கும்பல் ... பின்னல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். கிழவர் நமஸ்கரித்தனர் எழுந்திருக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாரே....
ஐந்து நிமிஷத்துக்கு மேல் ஆயிற்று... ஹுஹும் கிழவர் நகரவே இல்லை. எப்போ எழுந்திருப்பார்?
அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அதற்காக தானே எல்லோரும் அங்கே அந்த பேசும் தெய்வத்தை பார்க்க வருவது..
''இந்தாடா இதை எடுத்து அவருக்கு போர்த்து..''
மஹா பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து, அருகே இருந்த சிப்பந்தியிடம் கொடுத்தார்.
அந்த காஷாய வஸ்திரம் அந்த பாக்கியசாலி கிழவரின் உயிரற்ற தேகத்தின் மேல் போர்த்தப்பட்டது .
மாதத்திலேயே சாஸ்திரிகள் மேற்கொண்டு அந்திம கிரியைகளை நடத்தினார்கள்.
முதல்லே பெரியவா தரிசனம்.... அப்பறமா மத்ததெல்லாம்.... நிறைவேறி விட்டது.
No comments:
Post a Comment