கனகதாசர் J K. SIVAN
'கன கன கிண்டி ''
கனகதாஸரைப் பற்றி முன்பு எழுதியதை வாசகர்கள் விரும்பினால் மீண்டும் பதிவிடு கிறேன் என்று எழுதி எனக்கு வாசகர்கள் விருப்பம் தெரிவித்தததற்கு மிக்க நன்றி. இதோ அந்த பதிவு.
''எங்கும் ஒரே பொட்டல் காடு. கண்ணுக் கெட்டிய தூரம் வரை மேய்ச்சல் நிலம். பெரும்பாலும் அங்கிருப்ப வர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள் தான். அந்த ஊர் கர்நாடகா வில் உள்ள ஒரு குக் கிராமமான பாதா. அந்த ஊர் மக்களுக்கு குருபா என்று பெயர். இந்த குருபா குலத்தை சேர்ந்தவர் பீரப்பா. அவர் மனைவி பச்சம்மா. பீரப்பா விஜயநகர ராஜாவுக்கு ஒரு சேனைத் தளபதி. சிவ பக்தர். பீரப்பா காலத்தில் வைஷ்ணவ மகான் ராமானுஜர் கர்நாடகாவில் புதிதாக ஸ்ரீ வைஷ்ணவ கோட்பாடுகளை பரப்பி நிறைய குருபாக்கள் வைஷ்ணவர்களாயினர். திருப்பதி பாலாஜியை குல தெய்வமாக கொண்டாடினார்கள்.
இவர்களுக்கு ஒரு மகன். திம்மப்பா. குல தெய்வமான திருப்பதி பெருமாள் அருளால் பிறந்தவன்.வளர்ந்து வில் வாள் மல்யுத்தம் எல்லாம் கற்று தேறி அப்பாவின் காலத்துக் கப்புறம் அவனும் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் படையில் தளபதியானான். ராஜாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி நிறைய பரிசுகள் பெற்றான்.
திம்மப்பா தனது வயலில் ஒருநாள் ஒரு குழி தோண்டும்போது தங்கம் நிறைந்த ஒரு பெரிய பானை புதையலாக கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஆச்சர்யமாக வந்து பார்த்து மெச்சி திம்மப்பாவை ''கனக நாயக்'' என்று அழைத்தார்கள். (தங்கம் உடையவன்). பெருமாள் பக்தன் அல்லவா. திம்மப்பா காகிநெள்ளி என்கிற ஊரில் தனது குல தெய்வம் பெருமாளுக்கு கோவில் கட்டி ஆதிகேசவ பெருமாள் இன்றும் உள்ளார். கனக நாயக் ராஜாவின் சேனாதிபதி என்பதால் அடிக்கடி ராஜாவுடன் வேட்டைக்கு போய் மிருகங்களை சாதுரியமாக வேட்டை யாடுவான்.
ஆதிகேசவ பெருமாளை ஒவ்வொரு நாளும் வணங்காமல் எந்த வேலையும் ஆரம்பித் ததில்லை.
ஒரு நாள் கனவில் ஆதிகேசவ பெருமாள் ''கனகா, நீ எனக்கு தாசனாக இரேன் ?'' என்றார்.
'ஆதிகேசவா,, நான் இங்கே ராஜாவிடம் சௌக்யமாக இருக்கிறேனே. நான் எதற்கு இதெல்லாம் விட்டு விட்டு உனக்கு தாசனாக வேண்டும்?''
காலம் உருண்டது. கனகனின் பெற்றோர் மறைந்தனர். அரண்மனை உத்தியோகமும் முன்பு போல் திருப்தி அளிக்கவில்லை. அவ்வப்போது ஆதிகேசவனை தரிசிப்பான்.
மீண்டும் ஒரு இரவில் ஆதிகேசவன் தோன்றி னான் . ' கனகா, 'நீ எனக்கு தாசனா வாயா?'' . அதே பதில் .
மாதங்கள் பல கடந்தன. ஒருநாள் எதிரிகள் விஜயநகரத்தின் மேல் படையெடுத்தனர். கனகன் படையை விட எதிரிப்படை பலம் வாய்ந்தது. இருந்த போதிலும் சாகசமாகவும் வீரமாகவும் கனகன் போரிட்டான். உடலெங் கும் காயம். மூர்ச்சையாகி தரையில் சாயப் போகும் நேரம் மனம் ஆதிகேசவனை நினைத் தது. அவனையறியாமலேயே '' ஆதி கேசவா'' என்று அடிவயிற்றிலிருந்து தீனமாக கூவினான். விழுந்தான். கனகன் படை நிர்மூலமாக அழிந்ததாகவும் கனகன் மயங்கி விழுந்ததை இறந்து விட்ட தாகவும் கருதி எதிரிகள் சென்றனர்.
பிணம் தின்னும் கழுகுகள் மேலே வட்டமிட் டன. பிணங்களுக்கு இடையே குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த கனகனை யாரோ ஒருவன் அவனைக் கவனித்து சிஸ்ருஷை செய்தான். மடியில் போட்டுக்கொண்டு மயக்கம் தெளிய வைத்தான். நீர் கொடுத்தான். கண்கள் திறந்தன. தெம்பு வந்தது. மெலிதாக பேச்சும் வந்தது.எதிர்பாராமல் வந்து உதவியவனை கையெடுத்து வணங்கினான் கனகன்
''என் உயிரைக் காப்பாற்றின நீங்கள் யார் ?''
''என்னை மறந்துட்டியா?'
''யார் தெரியலியே''
'' உனக்கு தெரிந்தவன் தான். ஒரே ரத்த வெள்ளமாக இருக்கிறாயே. இனிமேயாவது ஹரி தாசனாக மாறிவிடு''
''ஆஹா ஆதிகேசவனல்லவா நீ. என் தெய்வமே. நீயா வந்து என்னை காப்பாற்றி னாய். உன் விருப்பப்படியே செய்கிறேன். முதலில் உடல் குணமாகட்டும்''
ஆதிகேசவன் கனகனின் உடலை தடவி கொடுத்தான். காயங்கள் உடல் வலி அனைத் தும் மறைந்தன.
''சுவாமி நான் நினைக்கும்போதெல்லாம் நீங்கள் என் முன் தோன்றுவதா யிருந்தால், சம்மதித்தால் நான் ஹரி தாசனாகிறேன் ''
''ஆஹா அப்படியே கனகா, நீ சொன்னதற்கு சம்மதம்.''
கனகன் முன் ஆதிகேசவர் சங்கு சக்ரதாரியாக தோன்றினார். அவர் கால்களில் தடால் என்று விழுந்த கனகன் எழுந்திருக்கும்போது திம்மப்பா இல்லை. அவர் இனி கனகதாசர்..
''கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, என்ற ஒரு கன்னட பாடல் அவரிடமிருந்து புறப்பட்டது. இது விஷ்ணுவை 24 நாமாக்களில் போற்றிபாடப்பட்ட தேவர் நாமா. சிறந்த மாத்வ குருவான வ்யாசராஜரிடம் சிஷ்யராக வேண்டியபோது குருவுக்கு தெரிந்து விட்டது இவர் யாரென்று. கனகதாசர் யமதர்மனின் அம்சம்.
கனகதாசரிடம் குரு வியாசராஜர் விசேஷ அபிமானம் வைத்திருப்பதில் மற்ற சிஷ்யர் களுக்கு அதிருப்தி. இது குருவுக்கு தெரிந்தது. ஒரு நாள் அவர்கள் அனைவரிடமும் ஆளுக் கொரு பழம் கொடுத்து 'இதை யாரும் பார்க் காத இடத்தில் சாப்பிட்டு விட்டு வாருங்கள் '' என்றார்.
அனைவரும் திரும்பினர். கனகதாசர் கையில் மட்டும் பழம் அப்படியே இருந்தது.
''கனக தாசா ஏன் நீ பழத்தை உண்ண வில்லை?' '
''யாரும் பார்க்காத இடம் எது என்று எனக்கு தெரியவில்லை குருநாதா ''
''ஏன் தனி இடம் எதுவும் கிடைக்கவில்லையா உனக்கு. இதோ மற்றவர்கள் அப்படித்தானே யாரும் பார்க்காத இடத்தில் பழத்தை சாப்பிட் டிருக்கிரார்கள். ''
''குரு தேவா, யாரும் பார்க்காத இடம் எங்குமே இல்லை சுவாமி. எங்கும் என்னை எப்போதும் ஸ்ரீ ஹரி , ஆதிகேசவன் பார்த்துக்கொண்டே இருக்கிறானே. நான் எப்படி சாப்பிடுவது?''
மற்ற சிஷ்யர்கள் அசந்து நின்றனர்.
''இப்போவாவது கனக தாசரைப் புரிந்து கொண்டீர்களா'' என்றார் குரு.
கனகதாசர் விஷ்ணுவை தரிசிக்கும் பாக்கியம் கொண்டவர் என்று அறிந்த சிஷ்யர்கள் தங்களுக்கும் தரிசனம் செய்து வைக்க வேண்டினர். கனகதாசர் குருவை நோக்க அவரும் ''அப்படியே செய்வாய்'' என்று ஆசி வழங்கினார். அவர்கள் ஆசையை நிறை வேற்ற வேண்டி அனைவரும் குழுமி இருக்க கனகதாசரும் குருவும் பூஜையில் ஈடுபட்டனர். நேரமாகியது. இருவரும் பூஜையில் த்யானத் தில் இருக்கும்போது எங்கிருந்தோ ஒரு தெரு நாய் கதவு திறந்திருந்ததால் உள்ளே வந்து விட்டது. சீடர்கள் அதை அடிக்காத குறையாக விரட்டி கதவை சாற்றினார்கள். பூஜையெல் லாம் முடிந்து கனகதாசரும் குருவும் சந்தோ ஷமாக சிஷ்யர்களை பார்த்தனர். சிஷ்யர்கள் ஏமாற்றமடைந்தனர்.
''எங்கே நாராயணன் வரவில்லை யே, எங்க ளுக்கு தரிசனம் தரவில்லையே?''
''தரிசனம் தந்தவரை நீங்கள் அடித்து விரட்டி விட்டீர்களே'' என்றார் குரு.
''அடடா கடவுள் நாய் வடிவத்திலும் வருவார் என அறியாமல் போய்விட்டோமே ''என்று அவர்கள் வருந்தினர்.
மறுநாள் பூஜை முடிந்து ஒரு கரு நாகம் உள்ளே நுழைந்து குரு இட்ட பாலை குடித்து விட்டு சென்றது. சிஷ்யர்கள் பாம்பைப் பார்த்து ஓடி வெகு நேரமாகி இருந்தது. இது போன்ற பல நிகழ்ச்சிகள்.
கிருஷ்ணனை தரிசனம் செய்ய அவரது ஆவல் அவரை சுண்டியிழுக்க உடுப்பி சென்றார். கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்ல அனுமதி யில்லை. ஏன்? இடையர் பிறவி தாழ்ந்த வகுப்பு என்று சிலர் உள்ளே அனுமதிக்கவில்லை.
''கிருஷ்ணா என் மனத்தில் உள்ள உன்னை வெளியே இங்கு கோவிலில் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்று கனகதாசர் பிரயாசை பட்டார். உள்ளே செல்ல முடியாது. எப்படியோ மெதுவாக உள்ளே நகர்ந்துவிட்டார். யாரோ பார்த்து முறையிட நிரவாகத்தார் குற்றம் செய்ததற்காக அவர் விழிகளை குருடாக்க கட்டளை யிட்டனர். அவரது தேனினுமினிய பாடல்களை கேட்டு தண்டனையின்றி அவரை கோவிலை விட்டு வெளியேற்றினார்கள்.
அவர் கோயிலின் பின்னே சென்று சுவற்றின் பின் நின்று “ஹே. கிருஷ்ணா! “நான் உன் பக்தனல்லவா? எனக்கு உன் தரிசனம் கிடைக் கவில்லையே. பிறவிப்பயன் என்னை உன் தரிசனம் கிட்டாமல் செய்கிறதே!” என குமுறினார். இங்கு தான் இப்போது தான், அந்த அதிசயம் நிகழ்ந்தது. கிருஷ்ணன் கர்பக்ர ஹத்தில் கிழக்கே வாசலை பார்த்து நின்றவன் மேற்கு பக்கமாக திரும்பி சுவற்றை பார்த்து நின்று கொண்டான்.. கர்பக்ரஹ பின் சுவர் பிளந்தது. பிளவின் வழியே சுவற்றுக்கு பின்னால் விரட்டப்பட்ட கனக தாசரை பார்த்தவாறு கிருஷ்ணன் நின்று கொண்டான். கனகதாசருக்கு திவ்ய தரிசனம் கிட்டியது. பிளந்த சுவர் ஒரு ஜன்னலாக மாற்றப்பட்டு (கனகன கிண்டி என்று பெயர்) இன்று வரை கிருஷ்ணனை உடுப்பியில் அந்த ஜன்னல் வழியாகவே தரிசனம் செய்கிறோம்.
தவறு செய்த அனைவரும் கனகதாசர் காலடி யில் விழுந்தனர் என்பது எல்லா கதைகளிலும் வரும் ஒரு வழக்கமான வாக்கியத்தை நானும் காப்பி அடிக்கிறேன். ஆனால் அன்று முதல் நினைத்த போதெல்லாம் கிருஷ்ணன் கனக தாசர் முன் தோன்றினான். நாம் எப்படி ஒருவரை யொருவர் பார்க்கிறோமோ அவ்வாறே கிருஷ்ணனும் பக்தரும் சந்திப்பது வழக்கமாயிற்று.
No comments:
Post a Comment