கீதாஞ்சலி J K SIVAN
தாகூர்
66. காத்திருப்பாள் கமலக்கண்ணி.
66. She who ever had remained in the depth of my being, in the twilight of gleams and of glimpses;
she who never opened her veils in the morning light, will be my last gift to thee, my God, folded in my final song.
Words have wooed yet failed to win her;
persuasion has stretched to her its eager arms in vain.
I have roamed from country to country keeping her in the core of my heart,
and around her have risen and fallen the growth and decay of my life.
Over my thoughts and actions, my slumbers and dreams, she reigned yet dwelled alone and apart.
many a man knocked at my door and asked for her and turned away in despair.
There was none in the world who ever saw her face to face,
and she remained in her loneliness waiting for thy recognition.
நான் ஆணோ, பெண்ணோ, ரெண்டுமோ, ரெண்டுமில்லையோ, ஆத்மாவுக்கு ஏது இந்த வித்யாசமெல்லாம்?
கிருஷ்ணா, நான் இப்போது ஒரு பெண்ணாகவே கருதி, இதை, என்னை, சமர்ப்பிக்கிறேன். ஏற்றுக்கொள் .
இந்தப் ''பெண்'' என் மனதில் ஆழ்ந்து பதிந்தவள். எவருமே பார்த்ததில்லை, என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன், அதுவும் இந்த மங்கலான அந்தி நேர வெளிச்சத்தில், ஏதோ அவசரமாக கொஞ்சம்
பார்த்தாலும் உற்றுப்பார்த்தாலும் காணமுடியாதவள். முக்காடை விலக்காதவள் , சூரிய வெளிச்சம் பார்க்காதவள்.
இந்த என் ''மனப்பெண்'' தான் கிருஷ்ணா உனக்கு என்னுடைய கடைசி பரிசு. அவள் தான் என் பாட்டில் தலைவி. என் வார்த்தைகளை லக்ஷியம் செய்யாதவள் . எனக்கு கிடைக்காதவள். அவளை ஏற்க நீட்டிய என் கரங்கள் இன்னும் அவளைத் தொடவில்லை. நான் சுற்றாத ஊரில்லை , எங்கும் அவளை என் மனதில் தூக்கிக்கொண்டு தாங்கிக்கொண்டு தான் சென்றேன். அவளைச் சுற்றி சுற்றியே நான் வளர்ந்தேன், தேடினேன், கிடைக்காமல் கிழவனானேன்.
கிருஷ்ணா, என் ஒவ்வொரு எண்ணமும் செயலும் என் கனவும், நினைவும் எதிலும் அவள் தான் என் மன ராணி. என்னோடு இணையாத தனித்வமானவள்.
நான் மட்டுமல்ல எத்தனையோ என் போன்றவர்கள்....கதவை தட்டிக்கொண்டு கால் கடுக்க வாசலில் நின்று முகத்தை தொங்க போட்டுக்கொண்டு போனவர்கள்.... என்னையும் சேர்த்து இந்த பூவுலகில் அவள் முகத்தை பார்த்தவன் எவனுமில்லை. அவள் இப்படி தனிமையில் காத்திருந்தது யாருக்காக? கிருஷ்ணா உன் கடைக்கண் பார்வை மேலே படுமா என்று எதிர்பார்த்து..... நானே என் மனம், அதில் நானே அந்த பெண்... காத்திருப்பது உனக்காக. உன் கடைவிழி பார்வைக்காக......
No comments:
Post a Comment