Wednesday, November 4, 2020

PESUM DEIVAM

பேசும் தெய்வம்     J K  SIVAN  

                                     
             ஆசார்யாளும்  அரியக்குடியும்.  8

''தேவ  கோட்டை''   தான் உண்மையில்  அந்த  சிறிய  அறை .  அன்று அந்த  அறையின் அருகே இருந்து மஹா பெரியவாவின் உபன்யாசத்தைக்  கேட்டவர்கள்  தேவர்கள் தான்.  அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தான்  தேவாதி தேவன்.  பரமேஸ்வரன் அவதாரமான ஸ்ரீ மஹா பெரியவா  மேற்கொண்டு  ''ஸ்ரீ சுப்ரமண்யாய''  கீர்த்தனைக் கு அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாமும் கேட்போம்: 

''அப்புறம்  அடுத்த அடியிலே  தீக்ஷிதர்  எதுக்கு வரார் தெரியுமா?  '
வரேண்யாய''  இதுக்கு என்ன அர்த்தம் ? ''மிகச்சிறந்த''.   காயத்ரி மந்திரத்தில் வருமே  அது. சுப்ரமண்யனை பற்றி சிறப்பாக சொல்ல  இந்த வார்த்தையை பிரயோகப்படுத்தறார்  தீக்ஷிதர்.  இந்த வார்த்தை  வேதங்களின் சாரம்.  முன்பே சொன்னேனே  சந்தமாக ,  அந்திய பிரகாசமாக  '....'ண்யாய'' என்று இதிலும் வருகிறது. அனுபல்லவியின் உச்சியில் இந்த வார்த்தையை வைக்கிறார்.   ''ஸ்ரீசு ,  பூசு,   வாச,  தாச''   எல்லாம் ஒவ்வொரு வரியிலும்   எதுகை ப்ராஸங்கள் பார்த்தோமே.

''ரசனா''   rachanaa   என்றால்  வார்த்தை தொடுப் பின்   அழகு.  சப்தம் அர்த்தம் ரெண்டுமே அருமை.   சொல்லழகு, பொருளழகு. மிகச்சிறந்த கவிஞர்களின்   ''ரஸனை''  அவர்கள் உபயோகிக் கும்  ''ரசனை'  'யில்  வெளிப்படும்.    
''தாஸஜனாபீஷ்டப்ரதக்ஷ தராக்ரக ண்யாய ''  மேலே  மேலே  அதிகமாக சுப்ரமண்யனின் பக்தர் கள் மேல் கொண்ட  கருணையின்  உயர்வு,  புகழை  எடுத்துக்   கூற  இப்படி  சொல்கிறார்.

 ''தாஸஜனாபீஷ்டப்ரத''  என்றால்  பக்தர்களின் அபிலாஷையை,  வேண்டுகோளை, விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவர் '' இதோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. தீக்ஷிதர் விடுவாரா?  மேலும்  ''தக்ஷ'', ''தர''  dhara ,  ப்ரதா , அக்ர,  ... என்று  அடுக்கிக்கொண்டே போகிறார்.  'தக்ஷ தர'' என்றால்   பக்தர்களின் விருப்பத்தை நிறை வேற்றுபவர்களில் மிக உன்னதமான , உயர்ந் தவன்.''   கடவுள்.   சங்கீதம்  ரெண்டுமே   ஒற்றுமை, அமைதி, மனா சாந்தி தருபவை.  ஆகவே  சுப்ரமண்யன்  கடவுள்களில் அதி அற்புதமாக அன்பை, கருணையை பொழிபவன்  என்கிறார் முத்து சாமி தீக்ஷிதர். ''அக்ர''என்றால் முதலில் . ''கண்யாய''  ganyaaya   உன்னதமான, உயர்ந்த.  

''தாரக சிம்ம முக  சூர பத்மாசுர ஸம்ஹாரத்ரே, தாபத்ரய ஹரனாணிபுனா  தத்வோபதேச கர்த்ரே,  விரனு குருகுஹாயா ஞான த்வாந்த ஸவித்ரே,  விஜயவல்லி பர்த்ரே,  சக்தியாயுத தர்த்ரே,  தீராய  நடவிதாத்ரே,  தேவராஜ  ஜாமாத்ரே, பூராதிபுவனபோக்த்ரே , போகமோக்ஷ ப்ரதாத்ரே '' 

 கடகடவென்று  ரயில் வண்டி  தண்டவாளத்தில் போகிறமாதிரி  வார்த்தைகள் பிரயோகம்! 

tAraka simha mukha shUra padmAsura samhartrE
tApatraya haraNanipuNa tatvOpadEsha kartrE
vIranuta guruguhAyAjHnAna dhvAnta savitrE
vijayavallI bhartrE saktyAyudha dhartrE
dhIrAya natavidhAtrE dEvarAja jAmAtrE
bhUrAdibhuvanabhOktrE bhOgamOkSapradAtrE
'thAraka simhamukha sUrapadmAsura samharthrE' -

இதன் அர்த்தம்  சாராம்சம்:  தாரகாசுரனை,  சிங்கமுகனை,  சூரபத்மனை  ஸம்ஹாரம் செய்தவன் ..மேலே சொன்ன அசுரர்கள் சகோதரர்கள். .தாரகன் யானைமுகத்தவன், மற்றவன் சிங்கமுகன்,  சூரபத்மன், கொடிய  ராக்ஷஸ முகத்தவன்.  தெற்கே நாம் சூர ஸம்ஹாரம்  வருஷா வருஷம் நிகழ்த்துகிறோம்.  வடக்கே  தாரகனை   பிரதானமாக முதல் இடத்தில் வைக்கிறார்


கள்.
   காளிதாசன் கூட  அவனது  குமாரசம்பவத்தில் சுப்ரமண்யன்  தாரகாசுரனை அழிக்க தோன்றியவன் என குறிப்பிடுகிறான்.   சுப்ரமண்ய  புஜங்கத்தில்  ஆதி சங்கரர் மூவரையும்  சொல்கிறார்.   தீக்ஷிதரும்  தெற்கு பழக்கத்தை கையாள்கிறார்.
தீக்ஷிதர்  சுப்ரமண்யனின் அழகையும் , வீரத்தையும்  அற்புதமாக சொல்லிவிட்டார் அல்லவா? அடுத்து? தனது முத்திரை  ''குருகுஹா''வை வைக்கிறார்.  அதுவும் பொருத்தமாக  அமைந்துவிட்டது.   சுப்ரமண்யன் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.  மோக்ஷ மார்கத்தை காட்டும்  குரு  அந்த குகன்  என்கிறமாதிரி உள்ளது. அப்பனுக்கே  பாடம் சொன்ன சுப்பையா.   தகப்பன் சுவாமி.  அருணகிரி  ''குருவாயெவர்க்கும் உபதேசம் வைத்த '' என்று பாடுகிறாரே .  ஸ்வாமிநாதஸ்வாமி.  ஞானபண்டிதசுவாமி. 

''தாபத்ரய ஹரனாணிபுனா  தத்வோபதேச கர்த்ரே'' thApa-thrya harana nipuna thathvOpadEsa karthrE'   இதற்கு என்ன என்ன அர்த்தம்?    இந்த  ஜீவாத்
மாக்கள்  நமக்கெல்லாம்  மூன்று  ஆசைகள்,  தாப த்ரயம்.  அதாவது  ஆத்யாத்மீகம், ஆதி பௌதி கம்,  ஆதி தைவீகம் ,  மூன்றுமே  ஏதாவது துன்பத்தில் ஆழ்த்துபவை.  முதலாவது  ஆத்மா இருக்கும் நமக்கு  உள்ளேயே புழுங்குவது,  இரண்டாவது  வெளியே  மற்ற மனித, மிருகங் களால் ஏற்படுவது, கடைசியாக  தெய்வானுக் கிரஹத்தால் ஏற்படுவது. விதி,  இதெல்லாம் எப்படி மீண்டுவருவது  என்பதை ஸ்ரீ சுப்ர மண்யன்  உபதேசிக்கிறான். 
மேலே  பார்ப்போம்.
தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...