ஆதித்ய ஹ்ருதயம் J K SIVAN
வணங்குகிறேன் சூர்யா - ஸ்லோகங்கள் 13-20
व्योमनाथस्तमोभेदी ऋग्यजुःसामपारगः।
घनवृष्टिरपां मित्रो विन्ध्यवीथीप्लवङ्गमः॥
வ்யோமனாத ஸ்தமோபேதி ருக்யஜுஸ்ஸாம பாரக: |
கனவ்ரிஷ்டி ரபாம்மித்ரோ விந்த்யவீதி ப்ளவங்கம: || 13 ||
ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார். வானவெளி மன்னவனே, இருள் நீக்கி, நான்கு வேதம் உணர்ந்த நிபுணனே, உலகம் ஜீவிக்க உன் ஒளியுடன் மழையும் அளிப்பவனே, வருணனின் நண்பனே, எந்த உயரமான மலைகளையும் தாண்டி உலவுபவனே, உனக்கு நமஸ்காரம்.
आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः।
कविर्विश्वो महातेजाः रक्तः सर्वभवोद्भवः॥
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன: |
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: || 14 ||
சூரியதேவா, நீ உஷ்ணத்தை அளித்தாலும் அதன் தாபத்தையும் போக்குபவன். சக்ரம் போன்ற உருளை வடிவானவன். காலனின் ஒரு உரு. ஹிரண்மயன் எனும் பொன்னன், உயிர்வாழ தீயை அளிப்பவனே, ஞானத்தை அளிக்கும் உன்னைத் தானே ஞான சூரியன் என்று வாழ்த்துகிறோம், உயிர்களின் முதலும் முடிவும் நீயே. பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனே நீ தான், உலகின் ஒளியே, ஒவ்வொருவர் மனத்திலும் உறைந்து ஒவ்வொரு செயலும் நிறைவேற்றுபவனே, சூர்யநாராயணா, உனக்கு நமஸ்காரங்கள்.
नक्षत्रग्रहताराणामधिपो विश्वभावनः।
तेजसामपि तेजस्वी द्वादशात्मन् नमोऽस्तु ते॥
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஸ்வ பாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன் நமோஸ்துதே || 15 ||
ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு உருவிலும் (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். நமஸ்காரம் நமஸ்காரம். சூர்ய நாராயணா நக்ஷத்திர, நவக்ரஹ, புவன மண்டலாதிபதியே , சர்வ பிரகாச காரணா , ஒளிக்கு ஒளியூட்டுபவனே, பன்னிரண்டு ஆத்ம ஸ்வரூபனே எம்மை ஆசிர்வதிப்பாய்.

नमः पूर्वाय गिरये पश्चिमायाद्रये नमः । ज्योतिर्गणानां पतये दिनाधिपतये नमः ॥१६॥16
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||
ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.
சூரிய பகவானே, கிழ்வானம் சிவக்க உதயமாகின்றவனே, அன்றைய பிரயாணம் முடித்து மேலைவானில் செக்கர்வானமாக மறைபவனே, எதையும் பொன்னிறமாக்குபவனே, தினமும் நாம் வழிபடும் தினகரனே ஆதித்யா உனக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः।
नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः॥
ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய நமோ நமஃ |
நமோ நமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய நமோ நமஃ || 17 ||

மிகவும் அதிகமாக பக்தர்களால் உபாசிக்கப்படும் மந்திரம் இது. அன்றாடம் இதை சொல்லி காரிய ஜெயம் பெறுபவர்கள் ஜாஸ்தி. இதை மனப்பாடம் செய்யலாம். ரெண்டே வரி தானே.
''சூர்யா, நீ வெற்றிக்கு காரணமானவன், ஜெயன். ஜெய பத்ரன். பச்சை குதிரை பூட்டிய ரதன் . உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். அதிதி புத்ரா அசகாய சூரா, சூர்யநாராயணா, உன்னை வணங்கும்போதே நெஞ்சில் தைர்யம் நிரம்புகிறதே. எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவனல்லவா நீ.
नम उग्राय वीराय सारङ्गाय नमो न मः । नमः पद्मप्रबोधाय मार्तण्डाय नमो नमः ॥१८॥
''சூர்யா, நீ வெற்றிக்கு காரணமானவன், ஜெயன். ஜெய பத்ரன். பச்சை குதிரை பூட்டிய ரதன் . உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். அதிதி புத்ரா அசகாய சூரா, சூர்யநாராயணா, உன்னை வணங்கும்போதே நெஞ்சில் தைர்யம் நிரம்புகிறதே. எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவனல்லவா நீ.
नम उग्राय वीराय सारङ्गाय नमो न
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நமஃ |
நமஃ பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நமஃ || 18 ||
சூர்யநாராயணா, பாபம் செய்தவர் அஞ்சும் பரிசுத்தனே, ரட்சிக்கும் நாயகனே, வேகத்தில் ஈடற்றவனே, காலத்தை நடத்திச் செல்பவனே, காத்திருக்கும் தாமரை மொட்டுக்களை மொட்டவிழச் செய்பவனே, உயிர்கொடுப்பவனே, உயிர் காப்பவனே, உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.
ब्रह्मेशानाच्युतेशाय सूर्यादित्यवर्चसे । भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नमः ॥१९॥ 19,

ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நமஃ || 19 ||
சூர்யா நாராயணா , சுட்டெரிக்கும் செழுஞ்சுடரே, நீயே பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் தேவனாகவும், அதிதி மைந்தனாகவும், சாஸ்வத பிரகாசனாகவும்,சர்வத்தையும் சாம்பலாக்கும் சக்தி படைத்தவனாகவும்
எதிரிகள் கண்டஞ்சும் பராக்ரமனாகவும் உள்ளாய். இதோ எங்கள் நமஸ்காரங்கள் உனக்கு.
तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने।
कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः॥ 20
தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயா மிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:
தமோகுணம் என்னும் அஞ்ஞான இருளைப் போக்குபவனே, சூர்யதேவா, பனியையும் குளிரையும் அதேபோல் விலக்குபவனே, கெட்டவர்களுக்கும் தீயோருக்கும் நெருப்பானவனே, சூரியமண்டலத்தில் மற்ற கிரஹங்களின் பிரதம தலைவனே, உலகெங்கும் உன் ஒளியால் ஜீவசக்தி அளிப்பவன், உனக்கு நமஸ்காரம்.

No comments:
Post a Comment