Sunday, August 2, 2020

upakarma




யக்னோபவீதம்   J K SIVAN

இந்த வருஷம் ஆவணி அவிட்டம் ரொம்ப புதுமையானது.
வழக்கமாக ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி கொண்டாடப்போவதில்லை.  அவரவர்  வீட்டுக்குளேயே
உபாகர்மா  என்றால் வருஷா வருஷம்  ஆரம்பிப்பது.  அதை ஆவணி அவிட்டம் என்கிறோம்.  அன்று பூணலை புதுப்பித் துக் கொள்வது. இதற்கு சில விதி முறை கள்.  ஆடி, பௌர்ணமி  அவிட்ட நக்ஷத்ரம். 1008  காயத்ரி மந்த்ர  ஜபம் ஒரு நாளாவது முழுக்க சொல்வது அடுத்த நாள் காயத்ரி ஜபம்  அன்று.  இந்த சடங்கு  சாமவேதத்தினருக்கு வேறுநாள் வரும்.  ஆவணி பிறப்பதற்கு முன் வரும் பௌர்ணமி அன்று தான் யஜுர்வேதக் காரர்களுக்கு  உபாகர்மா.
மஹா விஷ்ணு  ஹயக்ரீவராக  குதிரை முகத்தோடு  ப்ரம்மதேவனிடமிருந்து  வேதங்களை திருடிக்கொண்டு சென்ற  மது கைடபர்களை வென்று  வேதங்களை மீட்ட நாள் என்பது ஐதீகம்.
பிராமண குழந்தைகளுக்கு  எட்டு வயதில் உபநயனம் செய்யும் வழக்கம் விட்டுப் போய்விட்டது. கல்யாணத் தன்றே பூணல் போட்டுக்கொள் பவர்கள் அநேகர் இப்போது. வேண்டும்.  வேத காலத்தில் அதி  புத்திசாலி யாக, மஹா மேதாவி யாக ஞானம் நிறைந்த குழந்தை களுக்கு  ஐந்து  வயதில் உபநயனம் செ
ய்வித்தார்கள். இந்த ரகம் முக்கால் வாசி ரிஷி குமாரர்கள்.
உபநயனம் என்பதில்   ரெண்டு கார்யங் கள் இருக்கிறது. ஒன்று பூணூல் தரித்த பின்  ஆசாரம், ஒழுக்கம் கண்டிப் பாக பின்பற்ற வேண்டும்.  இந்த  ஸம்ஸ் காரம் ஒருவனை ஆன்மீக உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது
 ரெண்டாவது  உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொண்டவன்  ஒரு பெரியவரிடம், அப்பாவிடம்,  குருவிடம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை  ஜபிக்க முற்படுவது.    உள்ளும் புறமும் சுத்தமாயும், பவித்ர மாயும் பூணூல்  போட்டுவைத்தார்கள்.  இது தான் சார்  உபநயனம், ப்ரம்மோ பதேசம் . உப நயனம்  என்ற வார்த்தை களுக்கு    காயத்ரீ  மந்திரத்தை கற்றுக் கொள்ள   குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல்  என்று அர்த்தம்.    வேதம் படிப்பதற்கு  தக்ஷிணாயனம் என்று  ஆறுமாச காலம்ஒதுக்கப்பட்டது. 
வேதத்தை ஓதி  தர்ம சாஸ்திரங்கள் அர்த்தம் புரிந்து கொள்ள  தெரிந்து கொள்ள  உத்தராயணம் ஆறுமாச காலம். . தை மாதத்திலிருந்து  ஆணி வரை  உத்தராயணம்.  ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம்.   ஆவணி மாசம் அவிட்ட நக்ஷத்ரம் ஆவணி அவிட்டம்.  ஆடி அமாவாசைக்கு பிறகு    ச்ராவண மாசம்.  ஆவணி  மாசம் என்று கணக்கு . பௌர்ணமி  அன்று ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்வது வழக்கம்.   

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம்  அன்று  உபா கர்மா.  ருக் வேதம் தான்  ஆதாரம் .அந்த ஆவணி அவிட்டத்'தையே எல்லோரும்  உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள்.
வேத சாஸ்திர பாடங்களை  மேலே சொன்ன காலத்தில் ஆரம்பித்து முடிக்காமல்  போய் விட்டால்  என்ன பரிகாரம்?
அது தான்  "காமோகார்ஷீத்" ஜபம்  . 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று  ஒரு பழக்கம்  புகுந்து விட்டது. அது தப்பு.  வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை  மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அப்போது இடமில் லாமல் போகிறது. பூணூல் மாற்றிக்  கொள்வது மட்டும்  உபா கர்மா ஆகாது.   வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதற்காக   பூணூலை  மாற்றிக் கொள்கிறோம்.  வேத ஆரம்பம் செய்யவேண்டும். அதற்காகத்தான்   "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது .பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் அதற்காகவே உண்டா னது.  ஆவணி அவிட்டத் தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத் தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து  இருக்கிறார்கள்.  பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் பண்ண வேண்டும் என்று தவறாக எண்ணு கிறார்கள்.

வாழ்க்கை யிலேயே தினந்தோறும்  சந்தியா வந்தனம்,  காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி  இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ   மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.   பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் கூட இருக்கிறது.  ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ   ஜபத்தை  நிறைய   உச்சரித் தால் தான் அது நிறைவேறும்.  மற்ற ஜபங்களும்  பலன்  அளிக்கும் ,  காயத்ரீ மந்திரம் ஒன்று தான்  வேதத்திலிருந்து பிறந்தது.
மற்றவை புராணத்திலிருந்து வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங் களை  ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப் பட்டு   இருக்கிறது.
இப்படி சொல்பவர் மஹா  பெரியவா.   காயத்ரீ மந்தி ரம் ஜபித்த எல்லோரு கும் ஒரே பலன் மனத்தூய்மை தான். மனோபலம்தான். மனோ பலத்தையும், மனத் தூய்மையும்  வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.  
இன்றைக்கு மனோ பலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே   காயத்ரீ அனுஷ்டானம் குறைந்து இருப்பதுதான். சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசை கள் வருவதினால்  தோஷமா தலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள் செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே  வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...