Tuesday, August 25, 2020

LIFE LESSON

 

            நாம்  எல்லோருமே  புண்யகோடிகள்   J K  SIVAN   

''சிவன் சார்,  சாமி  சாமி  ன்னு நிறைய பேசறீங்க, எழுதறீங்க,  சாமியை எனக்குக் காட்டுங்க?''

''தம்பி  புண்யகோடி,,  உன் பேரிலே இத்தனை கோடி  புண்யம் வச்சிருக்கியே  அதிலே முதல்லே  நீ ஒண்ணு  காட்டுவியா?
''இன்னாங்க  இப்படி கேக்கறீங்க?''
''சரி அதை உடு. நான் உன்னை என் கையிலே இருக்கிற கொம்பால் அடிச்சா  நீ என்ன செய்வே? 
''ஆ  வலிக்குது அடிக்காதீங்க?''  
அந்த  வலியை  கொஞ்சம் உன்னாலே காட்டமுடியுமா?''
''வலியை  எப்படிங்க காட்டமுடியும்? அது அனுபவிச்சா  தான்  புரியற விஷயம்''
''அப்படிதாம்பா  சாமி விஷயமும். மனசிலே நம்பிக்கை பக்தி இருந்தா, சாமி நல்லா தெரிவாரு. அவரு 
ஐம்புலன்களுக்கு அப்பால் பட்டவரு ''
''சார்  நான்  விஞ்ஞானம் படிச்சவன்.  ஐம்புலன்களில் எட்டாதது எதுவும் இல்லை.   அதை தவிர வேறே எதுவும் கற்பனையை  என்னால்  நம்ப முடியாது. எதுக்குமே  ஒரு  நிரூபணம் தேவைங்க.  PROOF''

''சரியான ஆளு நீ  புண்யகோடி.  அளக்கமுடியாததை அளக்க பார்க்கறே. விளக்க முடியாததை விளக்கணும் என்கிறே.  அதைக் காண  எங்கும்  இருக்கிறதை எதிலாவது ஒன்றில்  நீ  அறிய  ட்ரை பண்ணனும்..மனமிருந்தால் மார்க்கமுண்டு.'' 

''சார் நான் வெளிநாட்டில் பெரிய கலாசாலையில் படித்தவன். நீங்கள் சொல்வது  விஞானத்தில் பொருந்தாது.''

''புண்யகோடி உன்னை மாதிரி கேள்வி  கேட்பவர்கள் அநேகர்.  ஒரு காலத்தில்  சௌனகர் எனும்  ரிஷி  ஆங்கிரஸ் எனும்  மகரிஷியை சந்தித்து   ''சுவாமி   "Kasmin bhagavo vijnate sarvamidam vijnatam bhavati"-"எதை தெரிந்   துகொண்டால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டதாகும்?'' என்று கேட்டதுக்கு  காங்கிரஸ் என்ன பதில் சொன்னார் தெரியுமா? 

''சௌனகா, நீ  ப்ரம்மவித்யையை அறிந்தால்  சர்வமுமான பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்'' என்று பதில் வந்தது. தங்கத்தை தெரிந்துகொண்டால் சகல தங்க  நகைகளையும் தெரிந்து கொள்வது போல. பேர்  உருவம் தான்  வித்யாசம்.  களி மண்ணை அடையாளம் தெரிஞ்சா, அதுலே பண்ற அத்தனை பொம்மை பேரும் தெரியறமாதிரி''

''ரொம்ப சரி சார். ஆனால்  கண்ணாலே பாக்காததை நம்பமுடியலேயே'' சாக்ஷி இல்லாட்டா  செல்லாதே?''
''ஓஹோ. புண்யகோடி,   பகலிலே சந்திரன் நக்ஷத்திரம் கண்ணுக்கு தெரியலியே   அதனாலே அது  இல்லைன்னு  சொல்வதா?  மேகத்திலே மறைந்து   மழைநாளில்  சூரியன் கண்ணுக்கு தெரியலியே,  அப்போ சூரியன் கிடையாதோ?''

''சார்,  வெத்திலை, பாக்கு சுண்ணாம்பு வேறே வேறே கலர் ஒண்ணா சுவைச்சா  சிகப்பு கலர் மாதிரி  ஐம்புலன்கள் செய்யற வேலை, எல்லாம் தான் உண்மை.  தேகம் தான்  ஆத்மா   என்னைப் பொறுத்தவரை, அதை நல்லா  என்ஜாய் பண்ணனும், ஐம்புலன்கள் ஆட்டுவிப்பதை அனுபவித்து வாழணும் . அவ்வளவு தான். அதுக்கு மேலே வேதாந்தம், ஜபம், விரதம். உபவாசம் எல்லாம்  அவசியமில்லைன்னு தோணுது..''

ஸாரி  புண்யகோடி, நீ இன்னும் புரிஞ்சுக்கலை .  ஐம்புலன்கள் ஆட்டுவித்தபடி ஆடும் தேகம் அழியும். பணம் மட்டும்  எல்லாம் ஆகிடாது.  மனைவி மக்கள், செல்வம், வீடு உறவு   எதுவுமே எல்லாமே  நிரந்தரம் இல்லை. உலகவாழ்க்கையும் அநித்தியம் தான். சுகத்தை அளிக்கிறது என நினைத்து துன்பத்தில்  கஷ்டப்பட வைக்கும்.  நிறைய சிந்தித்தால் தான்  உனக்கு விளங்கும். 

''இல்லை சார், நம்மை சுற்றி சூழ்ந்திருக்கிற  இயற்கை தான் கடவுள். அதுதான் எல்லாமே. இயற்கை இல்லாமே  மனிதன் வாழமுடியாது ''

''புண்யகோடி  இந்த  இயற்கையைத்  தான் மாயை என்பது.  நிஜம்   மாதிரி தோன்றுகிற பொய் . இயற்கை, இந்த பிரபஞ்சமே ஒருவனால் படைக்கப்பட்டது தான். 

''சார்  நீங்க  சொல்ற கடவுளுக்கு அப்படி என்ன தனித்வம் ?

''புண்யகோடி,  கடவுள்  என்றாலே, எங்கும் நிறைந்தவன், எல்லா சக்தியுமானவன், கருணைக் கடல்'' என்று தான்  பக்தர்களின் அபிப்ராயம். 

''சார்  நான்  ஒரே ஒரு கேள்வி கேட்கறேன். பதில் சொல்லுங்க?   ரெண்டு  பக்கம் இருக்கிற  காகிதத்தாளை ஒரே பக்கமாக்கி  காட்ட முடியுமா  கடவுளால்?  ஒருத்தன் தன்னுடைய  தோளிலே  தானே ஏறி நின்னு  குதிக்க முடியுமா?   எல்லாம் செய்ய முடிந்த கடவுளால் இதை செய்ய முடியலேன்னா அவர் என்ன சார்  கடவுள்?   ஹா ஹா ஹா  ?

''புண்யகோடி, பாவ கோடி ஆகாதே.இதெல்லாம் வாதம் இல்லை, விதண்டா வாதம். பிடிவாதம். உன்னுடைய  வாழ்க்கை, நேரம், சக்தி  எல்லாவற்றையும்  இப்படி வீணாக்காதே.  கண்மூடி திறக்கும் நேரத்தில் எதுவேண்டுமானாலும் கடவுள் சக்தியால் நடக்கும். ஊமை பேசுவான், குருடன் பார்ப்பான், முடவன் மலை ஏறுவான்.  அரிது மானிடராகப் பிறத்தல்.  அதைப் புரிந்து இனிமேலாவது   திருந்து.  உன் இதயத்தையும் மனதையும் உள்  நோக்கிப்பார். புரியும். 

''இல்லே சார்,  கருணையுள்ள சாமியா இருந்தா  பாரபட்சமா  ஒருத்தனை ஏழை, இன்னொருத்தன் பணக்காரன்,  ஒருத்தன் வியாதிக்காரன், இன்னொருத்தன்  20 இட்டலி முழுங்குறான்...ஒருத்தன் நாளா இருக்கான் இன்னொருத்தன் மொண்டி, குருடு, கூனு ..செவிடு..... ?

புண்யகோடி, இந்த உலகமே ஏதோ ஒரு தர்ம   ஞாயத்திலே தான்  ஓடுது.  கடவுள் இதெல்லாம் பண்ணலே. நாமாக   உருவாக்கிக்கொண்டது.  நாம்  நல்லது செய்திருந்தா நல்லா இருப்போம். கெடுதல் செய்திருந்தா அதுக்கு பலனா இதெல்லாம் அனுபவிக்கனும். தப்ப முடியாது.  இது கடவுளுடைய தண்டனையோ பாரபக்ஷமோ இல்லை. கடவுளா நம்மை  தப்பு பண்ணச்  சொன்னாரு? ஏன் மீதி பேர் அந்த தப்பை பண்ணலே. நல்லா இருக்காங்களே?
நமக்கு  வருகிற  துன்பம், கஷ்டம்  வலி எல்லாம் கூட நல்லதுக்கு தான். சூடு கண்ட பூனை அப்புறம்  பால் கிட்டே போகாது. மனசு தப்பு பண்றதிலேருந்து நல்லது பண்ண ஓடும். இந்த பிரபஞ்சமே நல்லது கேட்டது ரெண்டும் கலந்தது. உனக்குள்ளே  தேடி தான் சுத்த பிரம்மத்தை  அனுபவிக்கவேண்டும்.    கெட்டது  என்பதை தனியாக தேட முடியாது. நல்லதுக்குள்ளே  ஒளிந்துகொண்டிருப்பதை தேடி  அகற்ற வேண்டும்.  கெட்டவன் நல்லவனாகவும், நல்லவன் கெட்டவனாகவும்  அதனால் தான் மாறமுடிகிறது.  வால்மீகி, அருணகிரிநாதர், கண்ணதாசன் எல்லாம் இப்படித்தான். 
''சார்  இப்படி யாரும் எனக்கு புரியறமாதிரி சொல்லலே. இன்னும் சொல்லுங்க?''

''ஒரே வார்த்தை நீ தான் கடவுள். உன் உள்ளே இருக்கிற ஆத்மா  தான் நீ புண்யகோடி. அதனாலே தான் எல்லோருக்குள்ள்ளேயும் ஆத்மா இருக்கிறதால, எங்கும் எதிலும் கடவுள் இருக்கிறார்னு சொல்றது. உடம்பு ஒரு அடையாளம். தெருவுக்கு  பேர்  மாதிரி. எல்லா தெருவும் ஒரு ஊருக்கு தான் கடைசியிலே கொண்டு விடும். 

''இது தான்  த த்வம் அசி . நீ  அதுவாக இருக்கிறாய். அஹம் ப்ரம்ம அஸ்மி . நான் ப்ரம்மம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...