Thursday, August 13, 2020

NARTHANA KRISHNAN


 கால சக்ர கதைகள்     -    '' கண்ணன்''  சிவன் கிருஷ்ணஸ்வாமி 

                                       


             1  நர்த்தன கிருஷ்ணன் 

(என் முதல் மகனுக்கு கிருஷ்ணஸ்வாமி என்று பெயர் வைத்தோம். அவனை நான் கண்ணா என்று தான் இன்றும் கூப்பிடுகிறேன். அவனுக்கும் கண்ணன் மேல் ஈடுபாடு ஜாஸ்தி. அவன் கால சக்ர கதைகள் எழுதுகிறான். நானும் உங்களுடன் சேர்ந்து ரசிக்கிறேன்.-   ஜே கே  சிவன்.)
+++

''ஆவணி மாத  மாலைக் காற்று  இதமாக வீசியது.  வீட்டு வாசலில் இருக்கும் வேப்ப மரத்தடியில் இன்னும்
சுகமாக இருந்தது.  வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலியில் சிவன் மாமாவும் உட்கார்ந்து கதை சொல்லவும் அதை கேட்க அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளும் ரெடியாக இருந்தார்கள்..

"தாத்தா..இன்னிக்கு என்ன கதை சொல்ல போறேள்" என்று ஒருவன் கேட்க,
 
 "நான்  ஒரு தடவை  ஒரு ஊரிலே  ஒரு பழைய கோவிலுக்கு போயிட்டு வந்தேன். அங்கே  இருக்குற குளத்துல கிடைச்ச  அருமையான அழகான கிருஷ்ண விக்ரகத்தை   கோவில்ல பிரதிஷ்டை பண்ணி இருந்ததை பார்த்தேன். அதைப் பத்தி தான் சொல்ல போறேன்".
 
"என்ன சிலை அது?  நவநீத கிருஷ்ணனா?",
 
"இல்ல, அது ஒரு அழகான காளிங்க நர்த்தனகிருஷ்ண  விக்ரகம். அந்த மாதிரி ஒரு அழகான விக்ரகத்தை நான்  இது வரை பார்த்ததே இல்ல".

"கேக்கறதுக்கே, ரொம்ப நன்னா இருக்கே..எங்க இருக்கு அது? எந்த கோயில்ல ", என்றார் அவர் மனைவி.
 
"யாருக்கெல்லாம், ஊத்துக்காடு பத்தி தெரியும்?" என்று கேட்டார் சிவன் மாமா
  
"ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்னு கேள்வி பட்டு இருக்கேன். இந்த ஆடாது அசங்காது வா கண்ணா பாட்டு பாடினது அவர் தானே", என்றான் மணி
 
உரக்க சிரித்த சிவன் மாமா, " ஆமாம் , அவர் ஒரு மகா கவி (1700-1765).  அவருக்கு வேங்கடகவி ன்னு கூட பேரு
300 வருஷத்துக்கு முன்னாடியே ஆயிரக்கணக்கான பாட்டுகள் எழுதி, இன்னிக்கி சில நூறு தான் கிடைச்சு இருக்கு.  ரொம்ப பெரிய கிருஷ்ண பக்தர் .நாரதரே வேங்கட கவியா அவதரிச்சதாக  ஐதீகம்.  அவர் பொறந்த ஊர் தான் இந்த ஊத்துக்காடு. கும்மோணத்துக்கு பக்கத்துல பாபநாசம் தாலுக்கால இருக்கு.  அந்த ஊருக்கு பக்கத்துல தான் திருக்கருகாவூரும் அதுல கர்ப ரக்ஷகாம்பிகை கோவிலும் இருக்கு",

"சரி  மேலே சொல்லுங்கோ"
  
"இந்த காளிங்க நர்த்தன பெருமாள் சந்நிதிலே போய் நின்னாலே மனசு அந்த யமுனை நதிக்கும் அந்த காளிந்தி மடுவுக்கும் தானா போயிடறது.  அஞ்சு வயசு கிருஷ்ணர் அவ்வளவு  பெரிய  நாகம் மேல ஏறி ஒரு கையால  அந்த நாகத்தோட வாலை பிடிச்சுண்டு, இடது கால் அதோட தல மேலயும், வலது கால் காத்துல தூக்கிண்டும்  நிக்கற கோலம் இருக்கே, அது கண் கொள்ளா காட்சி..அதுவும் அந்த கோவில்ல இருக்குற பட்டாச்சார்யார்  கற்பூர ஹாரத்தி செஞ்சு கிட்டக்க காட்டின போது, அந்த வலது கால்ல   காளிங்கன் வால்  அடிச்ச தழும்பு தெரிஞ்சுது. எனக்கு அப்படியே புல்லரிச்சு போயி, அந்த நிமிஷம் நான் ஒரு கோபி மாதிரி ஆகி, கோகுலம்  பிருந்தாவனம் போயிட்டேன்"
  
"  நீங்க  சொல்றதை  கேக்கும் போதே என் மனசும்  அங்கே போயிடுத்து தாத்தா, அப்போ அந்த கோவில் ரொம்ப பா பேமஸ்  famous  ஆகி இருக்குமே " என்றான் சுந்து.
 
"ஆமாம்டா, நெறைய பேர் அந்த கோவிலுக்கு, ராகு தோஷம், சர்ப்ப தோஷம் பரிகார நிவர்த்தி பண்ண
வந்துண்டே இருப்பா. எல்லோரும் கண்டிப்பா ஒரு தடவை போயி பார்க்க வேண்டிய ஸ்தலம் அது", என்கிறார் சிவன் மாமா.

"கண்டிப்பா போகணும், அதுவும் உங்களோட கண்டிப்பா ஒரு தடவை அங்க போகணும்" அதுக்குள்ளே  வேங்கடகவி பத்தி சொல்லுங்கோ.''

மன்னார்குடியில்  பிறந்தவர். வேங்கட சுப்ரமணியன்னு  பேரு . அப்பா  அம்மா   சுப்புக்குட்டி ஐயர், வெங்கம்மா.  ஊத்துக்காட்டுக்கு  தென் கோகுலம்னு பேர். 

''அம்மா  எனக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள ஆசையா இருக்கு. யாராவது  குரு ஏற்பாடு பண்ணும்மா''

''எனக்கு யாருடா தெரியும்.  கோவில்லே நிற்கிறானே  காளிங்க நர்த்தனம் அவனையே கேளு கத்துக்கொடுப்பான்''  என்றாள்  வெங்கம்மா.  அவருக்கு சமஸ்க்ரிதம்  தமிழ் தெலுங்கு  மூணும் தெரியும். நிறைய  கீர்த்தனைகளை எழுதி தள்ளி இருக்கார். கிருஷ்ணன் மேலே தான் ரொம்ப ரொம்ப.  அவர் பாடல்கள் அனைத்துமே கிருஷ்ணன் நர்த்தனம் ஆடறமாதிரியே  இருக்கும் , அதுக்கு ஏற்றமாதிரி  வார்த்தை பிரயோகம்,  பாலத்துக்கு மேலே  ரயில் வண்டி போறமாதிரி வேகமாக நம்மை தலையசைக்க வைக்கும்.  கிருஷ்ணன்  காமதேனுவுடைய குட்டிகள்  நந்தினி, பட்டி  ரெண்டுக்கும் காளிங்க நர்த்தனம் ஆடிக்காட்டி  இருக்கான். அதை நாரதரும் பார்த்திருக்கார். நாமும்  பார்க்க தான் காளிங்க நர்த்தன தரிசனம் தருகிறான் கிருஷ்ணன் .
ஊத்துக்காடு  கோவிலில்.''

தாத்தா  இன்னும்  மேலே மேலே  கதைக்குள்ளே  போகலாம்  ....சொல்லுங்கோ.
 
 "போகலாம், போகலாம், மழை வர மாதிரி இருக்கு, மொதல்ல உள்ள போகலாம் வாங்கோ", என்றபடியே மெல்லிய  தூற்றலை தவிர்த்து  தாத்தா  எழுந்திருந்து செல்ல,  அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்'' 

+++ 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...