சேஷாத்திரி ஸ்வாமிகள்
இவன் என் பிள்ளை .
சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவண்ணா மலையில் வெகுகாலம் வாழ்ந்து மறைந்தவர். 1889ல் நடந்து அவர் திருவண் ணாமலை வந்தபோது அவர் வயது 19. இளம் சன்யாசி. ஏழு வருஷங் கள் எதற்காக காத்திருந்தாரோ அது நிறைவேறியது... 1896 செப்டம்பர் 1ம் தேதி ஒரு சிறு பையன் மார்க்கண் டேயன் போல என்றும் நிலையான புகழ் கொண்டவனாக மதுரையிலிருந்து தட்டு தடுமாறி அருணாச்சலேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தான். சேஷாத்திரி ஸ்வாமிகளை போல் அவனுக்கும் திருவண்ணாமலை தாகம் நெஞ்சில் நிறைந்திருந்தது.
சேஷாத்திரி ஸ்வாமிகள் முதலில் திருவண் ணாமலை வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பு என்ன தெரியுமா?
''யார் இந்த பைத்தியம். எங்கு பார்த் தாலும் சுற்றிக்கொண்டி ருக்கி றது?'' என்று நினைத்தவர்கள், உரக்க சொன்னவர்கள், அருவருப்பாக பார்த்தவர்கள் தான் ஜாஸ்தி. அந்த பையன் வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் அமர்ந்தபோது இதே பேச்சு தான்.
'' அந்த பைத்தியம் தெருவெல்லாம் சுற்றுகிறது. இந்த பைத்தியம் ஒரே இடத்தில் உட்கார்ந்தி ருக்கிறது . அதற்கு பெயர் பெரிய சேஷாத்திரி, இதற்கு பெயர் சின்ன சேஷாத்திரி'' என்றார்கள் .
''ரெண்டு பைத்தியத்தையும் ஒண்ணு சேருங்கடா'' என்று ரமணரை சேஷாத்ரி இருந்த இடம் விரட்டியவர்கள் ஒரு நல்ல காரியத்தையே செய்திருக்கிறார்கள். இளம் யோகியின் தியானம் இதனால் தடை பட்டது. அந்த இளம் துறவி மற்றவர்கள் கண்ணில் படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஒரு வழி கண்டுபிடித்தான்.
அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆயிரங் கால் மண்டபம் அருகே பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி பூமிக்கடியே சுரங்கம் மாதிரி அமைந் திருந்தது. கல்லும் முள்ளும், பாம்பு பல்லி தேள் பூச்சிகள் நிரம்பிய இடமாக இருந்தது. பக்தர்கள் அதிகம் அங்கே இறங்கி தரிசிப்ப தில்லை. அதில் இறங்கி லிங்கத் தின் பின்னால் அமர்ந்து கொண்டான். விஷமக்கார சிறுவர்கள் எங்கே அந்த சின்ன பைத்தியத்தை காணோம் என்று தேடியவர்கள் அவன் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனை நோக்கி மேலே இருந்து கற்களை வீசினார்கள். இளம் துறவி எதையும் லக்ஷியம் செய்யாமல் தியானத்தில் இருந்தான்.
அந்த கோவிலுக்கு வெங்கடாச்சல முதலியார் என்ற பக்தர் அடிக்கடி வருவார். ஒருநாள் காலை அந்த பையன்கள் ஏதோ கற்களை வீசுகிறார் களே கீழே லிங்கத்தின் பக்கம் என்று கோபம் கொண்டு சத்தம் போட்டு அந்த பையன்களை விரட்டினார்.
அப்போது தான் சேஷாத்திரி ஸ்வாமி கள் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியி லிருந்து சுரங்கப்பாதை வழியாக மேலே வந்துகொண்டிருந்தார்.
''இவர் எங்கே இங்கே வந்தார். பாதாள லிங்க குகை கோயிலில் என்ன வேலை இவருக்கு? என்று முதலியார் யோசித் தார்.
ஒரு மஹான் தான் இன்னொருவரை அறியமுடியும். அருணாச்சலேஸ்வரர் ''நீ உடனே பாதாள லிங்க குகைக் கோயிலுக்கு போ '' என்று சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு கட்டளையிட்டு அவர் அங்கே சென்றிருக்கிறார். அருணாச லேஸ்வரனே அங்கே பாலயோகி யாக அமர்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார். அவர் தியானத்தை எவரும் கலைக் கக் கூடாது என்று எண்ணினார். பாலயோகியை நோக்கி பையன்கள் எறிந்த கல்லெல்லாம் தன் மேல் வாங்கிக் கொண்டார். ஓஹோ அம்பாள் அங்கே கோவிலுக்குள் அண்ணா மலைக்காக தவமிருக்கிறாள். இங்கே குமாரசுவாமி தவமிருக்கிறார்'' என்று சொல்வார். தாய் சேயைக் காப்பாற்ற ஓடிவரமாட்டாளா? சேஷாத்திரி ஸ்வாமிகள் காமாக்ஷி ஸ்வரூபம் அல்லவா? அதனால் தான் பால யோகி யை காப்பாற்ற ஓடி வந்திருக்கிறார்.
சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்த முதலியார் '' சாமி, இந்த பசங்க வீசின கல்லெல்லாம் உங்க மேலேயா விழுந்தது?''
சேஷாத்ரி ஸ்வாமிகள் நேரடியாக எதற்கும் எவருக்கும் பதில் சொல்வதில்லை. ''ஹாஹா'' என்று சிரிப்பு. ஆமென்று உணர்த்த தலையை ஆட்டினார்.
''வா என்னோடு '' என்று முதலியாரை மறுபடியும் குகைக்கோயிலுக்குள் அழைத்துச்சென்று பாலயோகியை லிங்கத்தின் பின்புறம் ''அதோ பார் ' என்று ' காட்டினார்
''சாமி யார் அங்கே லிங்கத்துக்கு பின்னால் உட்கார்ந்து இருக்கிறது? இத்தனை நாள் நான் பாக்கலியே?''
' அவன் என் பிள்ளை. இனிமே நீ தான் இவனை ஜாக்கிரதையாக பாதுகாக் கணும்''
வெங்கடாச்சல முதலியாருக்கு வேடிக் கையாக இருந்தது. '' என்னா சாமி இது? உனக்கு தான் இன்னும் கல்யாணமே ஆவலியே. அதற்குள் இவ்வளவு பெரிய புள்ளையா?''
''உனக்கென்ன தெரியும். சொன்னதை செய் போ ''
என்று சொல்லி விட்டு சேஷாத்திரி ஸ்வாமிகள் ஓடிவிட்டார். முதலியார் ஆலயத்தில் இருந்த சிலரை அழைத்து வந்து மெதுவாக அந்த பாலயோகியை வெளியே அழைத்துவந்து பாதுகாத்தனர். உடலெல்லாம் பூச்சிகள் கடித்து, புண்ணாகி, ரத்தமும் சீழும் வடிந்தும் அந்த துறவி கவலைப்படவில்லை. உலகத் துக்கு சேஷாத்திரி சுவாமிகளால் பகவான் ரமண மஹரிஷி கிடைத்தார்..
உலகத்தின் பார்வை ரமண மஹர்ஷி மேல் விழுந்தது. திருவாண்ணாமலை என்றால் ரமணர் என்று இரண்டுபடுத்த முடியாமல் ஒன்றாக நிலைத்தது. இன்றும் ரமணரைத் தேடி அங்கே பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கி றார்களே.
சேஷாத்ரி ஸ்வாமிகளும் 19 வயதில் அங்கே வந்தவர் தொடர்ந்து 40 வருஷங் கள் வாழ்ந்து அங்கேயே அருணா்சலேஸ் வரருடன் ஐக்கிய மானார்.
'
No comments:
Post a Comment