Friday, August 7, 2020

MAHA MRUTHYUNJAYA JAPAM

  மந்த்ர சக்தி J K SIVAN

சமீபத்தில் யஜுர் வேத, ரிக் வேத உபாகர்மாவை ஆவணி அவிட்டத்தன்று அனுஷ்டித்தோம். சாம வேதக்காரர்கள் வேறொரு நாளில் அதை அனுஷ்டிப் பார்கள். வேத அத்யயனம் மாணவர் களுக்கு ஆரம்பிக்கும் நாளாக அது செயல்பட்டது பல நூற்றாண்டு களுக்கு முன்பு. பூணல் போடுவது நமது பிள்ளைகளுக்கு இப்போது யூனிபார்ம் UNIFORM மாதிரி கட்டாயம் அப்போது. ஆவணியிலிருந்து தை மாதம் கற்பது வழக்கம் இல்லை. உத் ஸர்ஜனம் என்று கற்பதற்கு பெயர். அதற்கு பிராயச் சித்தம் தான் காமோகார்ஷித் மந்த்ர ஜபம். தக்ஷிணாயனத்தில். ... அத்யாய உத்ஸர்ஜன அகரண பிராயஸ் சித்தார்த்தம்......'' காமத்தால் உண்டா கும் விருப்பத்தை அறவே விட்டு விடுகிறேன். கோபத்தை அறவே ஒதுக் குகிறேன்'' என்பது தான் காமோ கர்ஷித் ஜப அர்த்தம். நமது பாபங்களை தன் மேல் கிருஷ்ணன் சுமக்கிறான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. உபாகர்மா காமோ கார்ஷித் ெபத்திற்கு பிறகு துவங்கு கிறது. உபாகர்மா எதற்கு? வேதங்களை நமக்கு அளித்த ரிஷிகளுக்கு நன்றி தெரிவிக்க. அவர்களுக்கு '' காண்ட ரிஷிகள்'' என்று பெயர். அவர்களுக்கு ஹோமம், தர்ப்பணம் எல்லாம் பண்ணுகிறோம். ஒவ்வொரு வேதத்துக்கும் ஒரு ரிஷி உண்டு. எல்லா ரிஷிகளுக்கும் சேர்த்து தான் இந்த காண்ட ரிஷி மந்த்ரம்.ஒவ்வொரு வேதத்துக்கும் ஒரு கிளை உண்டு ஒவ்வொரு கிளைக்கும் ஒரு ரிஷி. நாலு வேதத்துக்கும் நாலு காண்டம். அவை என்ன தெரியுமா ? ப்ரஜாபத்ய காண்டம், சௌமியகாண்டம், ஆக்னேய கண்டம், வைஸ்வதேவ காண்டம்.'' எல்லாம் ரிஷிகளின் பெயரில் உண்டானது. பிரஜாபதி, சோமன், அக்னி, விஸ்வதேவ ரிஷிகள் தான் அவர்கள். உபநிஷத்துகளுக்கும் பிரார்த்தனை. சாம்ஹிதி, யாக்ஞகி , வாருணி, ஸ்வயம்பு, ஸதஸஸ்பதி, இவர்கள் மூலம் தான் யஜுர்வேதம் கிடைத்தது. இந்த ஹோமத்தில் காண்ட ரிஷிகளுக்கும் பங்கு உண்டு. நமது நித்ய கர்மாநுஷ்டானத்திலும் இந்த தர்ப்பணம் உண்டு. தர்ப்பை மாதிரி புல்லினால் இடுப்பில் முஞ்சி எனும் பெல்ட் மாதிரி பிரம்மச்சாரிகள் போட்டுக்கொள் வார்கள். மான் தோலுக்கு ஆஜினம் என்று பெயர். பலாச கிளையில் ஆன தண்டம் இதெல்லாம் பூணல் போட்டுக் கொள்ளும்போது தேவையானவை. நாலு முழ வேஷ்டி, மேல் துண்டு தான் பூணல் போட்டுக்கொள்பவன் டிரஸ். காண்ட ரிஷி தர்ப்பணம் பண்ணும் போது முதலில் தலை குளிக்கவேண்டும், தர்ப்பணத்தை ஈரத்துணியோடு புரிவது வழக்கம். பூணல் இல்லாமல் ரிஷி தர்ப்பணம் பண்ண முடியாது. பூணலை மாலையாக போட்டுக்கொள்வது நிவிதம் . கையில் அக்ஷதை, எள் , முதலியவற் றோடு ஜலத்தை சுண்டுவிரல் அடிப் பாகம் வழியாக விடுதல் இந்த தர்ப்பணம். இதை இப்படியே விட்டு விட்டு, இப்போது மஹா ம்ருத்யுஞ்ஜய ஜபம் சொல்வதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். நிறைய பேர் கேட்கிறார்கள். நமது ஹிந்து சனாதன தர்மத்தில் அநேகருக்கு தெரிந்த சின்ன மந்திரம் இது. ''ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्'' (ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உர்வாருகம் இவ பந்தனா அம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ''ǁ) ஓம் என்பது பிரணவ மந்த்ரம். அதை சொல்லாமல் எந்த மந்திரமும் இல்லை. என்றும் இளமையான, திடகாத்ர , த்ரிநேத்ரன், முக்கண்ணன், உன்னை வணங்குகிறோம், நறுமணம் உடைய, திடகாத்திர சக்தி கொண்டவனே, எப்படி பழுத்த வெள்ளரிப்பழம், கொடியிலிருந்து தானாகவே தன்னை விடுவித்துக் கொள்கிறதோ அது போல், என்னை உலக பந்த பாசங்களிலிருந்து மீட்டு, மரணத்திலிருந்து அமரத்வத்தை , மோக்ஷத்தை, நிறைவான அமைதியை அளிப்பாய். இந்த மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தை அளித்தவர் மார்க்கண்டேய ரிஷி. ஒரு தடவை சந்திரன் தக்ஷ ப்ரஜாபதியால் சபிக்கப்பட்ட போது மார்க்கண்டேய ரிஷி இந்த மந்திரத்தை தக்ஷனின் பெண்ணிடம் உபதேசிக்க அவள் சந்திரனை அதை ஜபிக்கச்செய்து, சந்திரன் சாப விமோச்சனம் பெறுகிறான் என்று ஒரு கதை. இந்த மந்திரம் ருத்ர மந்திரம் எனப்படும். மனோ உறுதி, உடல் நலம் மோக்ஷ காரக சாதனம் என சக்திவாய்ந்ததாக வேதங்களால் சொல்லப்பட்டது. காயத்ரி மந்திரம் பரிசுத்தம் அடைய உதவுவது போல், இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்த்ரம் உள்ள உடல் நிவாரணி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...