விண்ணில் பறக்கும் மூவண்ண கொடி '' J K SIVAN
''விண்ணுலகில் மஹாத்மா காந்தி ஒரு ஓரமாக ஒரு மரத்தடியில் அமர்ந்து கைராட்டை சுற்றிக் கொண்டிருக் கிறார். அவரைச்சுற்றி நிறைய பேர் நிற்கிறார்கள் .
''சர்தார், ஏன் இவ்வளவு பேர் என்னை சுற்றி இன்று இங்கே? விசாரியுங்கள்.
''பாபுஜி, நீங்கள் விசாரிக்க சொல்வீர்கள் என்று தெரிந்து ஏற்கனவே விசாரித்துவிட்டேன். நமது பாரத தேசத்தில் இன்று ஆகஸ்ட் 15, இங்கே தான் அந்த மாதிரி வெள்ளைக்காரன் காலண்டர்கள் கிடையாதே... ஒரு புதிய மக்கள் விரோதி கரோனா என்றுஒரு கிருமி க சுற்றுகிறது. அதனால் எவரும் வெளியே வரக்கூடாது என்று வெள்ளையர் நமக்கு 144 போட்டது போல் அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் தடை விதித்து எவரும் கூட்டம் கூடக்கூடாது, வெளியே வரக்கூடாது. தெருவெல்லாம் காலி. சத்தமே இல்லை. சத்தமில்லாத இந்தியா அழகாகத்தான் இருக்கிறது. அதனால்...
''என்ன அதனால்..?
''வந்து பாபுஜி '' என்று ஜவஹர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க,
''போதும் உன் அறிவுரை, விளக்கம் எல்லாம் நிறைய கேட்டுவிட்டேன்'' என்று பாபுஜி தடுக்கிறார்.
''பாபுஜி, இன்று சுதந்திர நாள், நீங்கள் பாடுபட்டு தலைமை வகித்து வாங்கித்தந்த சுதந்திரநாள்.. அங்கே கொண்டாட முடியாததால் நமது ஜனங்கள் இங்கே இருப்பவர்கள் உங்களை தரிசித்து வாழ்த்துரை பெற வந்திருக்கிறார்கள்.
''ஆஹா, சுதந்திரநாளா , மறக்க முடியுமா அதனால் நாடு துண்டானதை, ரத்த வெள்ளத்தை , என் உயிரையே குடித்த சம்பவம் அது... நாடு சுபிக்ஷம் அடையவேண்டும் என்று ஆசைப்பட்டு நம்மை நாமே ஆள்வோம் என்ற நல்லெண்ணத்தில் அடைந்த சுதந்திரம். வெள்ளைக்காரன் தந்திரத்தால், நாடு மூன்றாக பிளவு பட்டு ிநமக்கு சுதந்திரம் கிடைத்ததோடல்லாமல், வேண்டாத பிரச்னைகள் எவ்வளவோ.... தலைமை வகித்தவர்கள்... இப்போது தான் ஒருவாறு கொஞ்சம் மூச்சு விடமுடிகிறது என்று நம்பும்போது எங்கிருந்தோ வந்த கரோனா நாட்டை நாசம் செயகிறது. உயிரைக் குடிக்கிறது. நாடே ஸ்தம்பித்து போய்விட்டதாம்.'' என வருந்துகிறார் காந்திஜி.
எங்கிருந்தோ வந்ததல்ல .. ''இந்தி சீனி பாய் பாய்'' சீனாவில் தான் முளைத்து உலகெங்கும் பரவிவிட்ட நிலையில் சீனா நமது எல்லைகளில் எரியற தீயில் எண்ணையை ஊற்றுகிறதாம்.. ஒருபக்கம் நமது பிரிந்து போன சகோதர்கள் மாறவே இல்லை.. உன் எதிரி என் நண்பன் தோரணை... என்ன சொல்வது ...... நிமிர்த்த முடியாத வால்.
''இதைத்தான் நான் ....''. என்று ஜவஹர் ஆரம்பித்தபோது மீண்டும் பாபுஜி அவரை ''போதும் போதும்'
என்று சைகையால் அமர்த்திவிட்டுப் பேசினார்.
''இங்கு நாம் நமது நாட்டின் சுபிக்ஷத்துக்கு குரல் கொடுப்போம். எங்கே சுப்புலக்ஷ்மி... இங்கே வாம்மா . நீ எனக்கு பிடித்ததை மீண்டும் இங்கே பாடு... இங்கு இருக்கும் எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்.
'' வைஷ்ணவ் ஜனதா......... ஈஸ்வர் அல்லா தேரோ நாம். சப்கோ சம்மதி தே பகவான்' என்று MS சுப்புலக்ஷ்மி பாடும் போது எல்லோரும் ஆனந்தமாக கேட்டுக் கொண்டு பின் பாட்டு பாடுகிறார்கள். அருமையான பஜனை பிரார்த்தனையாக அமைந்துவிட்டது.
''இன்று பாரத தேசம் 74 வது சுதந்திர நாள் கொண்டாடுகிறதால் நமது பாகவதர் குரல் கேட்கட்டும்.. என்கிறார் அப்துல் கலாம்.' எங்கே MK T ...? எம். கே. தியாகராஜ பாகவதரின் கணீர் என்ற உச்சஸ்தாய் குரல் எங்கும் எதிரொலித்தது .
'காந்தியைப் போல் ஒரு சாந்த ஸ்வரூபியை.....''*
*காந்திக்கு ஏதோ காந்தி என்ற தனது பெயர் ஒலிப்பது மட்டும் புரிந்தாலும் அந்த சங்கீத ருசியில் தலையை ஆட்டுகிறார்.
''ஆஹா என்ன குரல், என்ன இனிமை, என்ன அர்த்தம் அவர் பாடுவதற்கு?'' என்று சரோஜினி தேவி கேட்க**
*உங்களைப்போல சாந்தமாக இன்னொருவரை பார்க்கமுடியாது ''என்று தமிழர் ஒருவரைக் கேட்டு அறிந்து கொண்டேன் என்கிறார் நேரு, காந்தியை பார்த்து. சிரித்துக் கொண்டே **
*ஆமாம். வாஸ்தவம் இல்லாவிட்டால் நான் இன்னும் உன் தோளில் கை போட்டுக்கொண்டிருப்பேனா?'' என்பேரில் எத்தனைபேர் உன் வம்சத்தில்.. அடடா.....என சிரிக்கிறார் பாபுஜி**
*நேரு ரொம்ப ஆச்சர்யமான வேடிக்கையான, விந்தை மனிதர்'' என்கிறார் ராஜாஜி.
'ஆம். இல்லாவிட்டால் 73 வருஷங்கள் ஓடியும் பழைய விஷயங்களை நினைக்க வேண்டி இருக்குமா?'' என்கிறார் படேல். ஏனோ கடுகடுவென்று இருக்கிறார்.*
*எல்லாம் நல்லதுக்கே '' என்கிறார் வாஜ்பாயி.**
*'என்ன பூடகமாக பேசுகிறீர்கள் எல்லோரும். நாம் எல்லோரும் பாரதநாட்டு மன்னர்கள். தெரியும் அல்லவா?**
தலைப்பாகை பின்னால் வால் போல் தொங்க மீசையை தடவிக்கொண்டு கருப்புக் கோட்டு பஞ்ச கச்சத் தோடு எதிரே நடந்து வந்தார் பாரதியார்.
*உங்களைப்போல சாந்தமாக இன்னொருவரை பார்க்கமுடியாது ''என்று தமிழர் ஒருவரைக் கேட்டு அறிந்து கொண்டேன் என்கிறார் நேரு, காந்தியை பார்த்து. சிரித்துக் கொண்டே **
*ஆமாம். வாஸ்தவம் இல்லாவிட்டால் நான் இன்னும் உன் தோளில் கை போட்டுக்கொண்டிருப்பேனா?'' என்பேரில் எத்தனைபேர் உன் வம்சத்தில்.. அடடா.....என சிரிக்கிறார் பாபுஜி**
*நேரு ரொம்ப ஆச்சர்யமான வேடிக்கையான, விந்தை மனிதர்'' என்கிறார் ராஜாஜி.
'ஆம். இல்லாவிட்டால் 73 வருஷங்கள் ஓடியும் பழைய விஷயங்களை நினைக்க வேண்டி இருக்குமா?'' என்கிறார் படேல். ஏனோ கடுகடுவென்று இருக்கிறார்.*
*எல்லாம் நல்லதுக்கே '' என்கிறார் வாஜ்பாயி.**
*'என்ன பூடகமாக பேசுகிறீர்கள் எல்லோரும். நாம் எல்லோரும் பாரதநாட்டு மன்னர்கள். தெரியும் அல்லவா?**
தலைப்பாகை பின்னால் வால் போல் தொங்க மீசையை தடவிக்கொண்டு கருப்புக் கோட்டு பஞ்ச கச்சத் தோடு எதிரே நடந்து வந்தார் பாரதியார்.
**பாரதியாரே போதும்...போதும். மன்னர்கள் என்றாலே எனக்கு நடுங்குகிறது......அப்போதே இந்தியாவில் இருந்த எல்லா மன்னர்களையும் ஒன்றாக இணைக்க நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும்'' என்கிறார் படேல்.**
'என் சுதந்திர நாட்டைப் பார்க்காமல் இங்கே வந்த பின் ஒவ்வொரு வருஷமும் நான் விடாமல் மேலிருந்து அந்த நன்னாளை நம் நாட்டு மக்கள் கொண்டாடுவதை, தாயின் மணிக்கொடி வெற்றி எட்டு திக்கும் முரசு கொட்ட பளபளவென்று மின்னிப் பறப்பதை வெள்ளிப்பனியின் மீதிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன்.'' இன்று என்னமோ ஆளில்லாமல் கொடி மட்டும் பறக்கிறது எங்கும். வெள்ளிப்பனி மலையில் இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் அநேகர் குழுமி இருக்கிறார்கள் '' என்கிறார் பாரதி.**
*'நானும் எத்தனையோ கனவுகளுடன் தான் அங்கிருந்து இங்கே வந்தேன் '' என்று ஆமோதித்தார் அப்துல் கலாம். எதிர்காலத்தில் இளைஞர்கள் எப்படியெல்லாம் நமது நாட்டுக்கு பெருமைகள் சேர்ப்பார்கள் என்ற என் கனவு நிச்சயம் நிஜமாகும் பாபுஜி '' என்கிறார் சிரித்த முகமாக கலாம்.**
**சுதந்திரம் என்றால், "நினைத்ததைச் செய்வது, சொல்வது, எழுதுவது ஜாலியாக இருப்பது" என்றல்ல. யாரும் வித்தியாசமின்றி ஒற்றுமையாக ஒரு நாடு ஒரு மக்கள் என்று பலம் வாய்ந்த பாரத பிரஜைகளாக இருக்கவே நான் நினைத்தேன். பிரயாசையோடு பாடுபட்டேன்.எல்லோரும் சமம் என்றபோது யாதொரு வித்யாசமும் கூடாது ' என் வார்த்தைகளுக்கு எனக்கு எனக்குத் தெரியாத தோன்றாத அர்த்தங்களையெல்லாம் சொல்கிறார்களே'' என்கிறார் அம்பேத்கர். அவருக்கு நல்ல ஜுரம். இழுத்து போர்த்திக்கொண்டிருக்கிறார்.**
**ஏன் பாபாஜி புரையேறுகிறது உங்களுக்கு. யாராவது நினைத்தால் தான் அப்படி புரைக்கேறும் என்பார்களே '' என்றார் சுஷ்மாஜி .**
**' வாஸ்தவம் தான். அவரை நமது தேசத்தில் எல்லோரும் இப்போது நிறைய நினைக்கிறார்கள்.. பேசுகிறார்கள் ''என்கிறார் லால் பகதூர் சாஸ்திரி .**
**''என்ன நேருஜி எப்போதும் கலகலப்பாக இருப்பவர் கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கிறார்? என்று காமராஜர் கேட்க**
*ஒருவேளை அவரை குடும்ப பிரச்னையோ, குடும்பத்தால் பிரச்சனையோ, ஏதோ ஒன்று வாட்டுகிறதோ என்னவோ? என்னைப் பொறுத்தவரை நாடும் வீடும் தனித்தனி எல்லையில்லாமல் போனது பெரிய துன்பத்தைத் தந்தது... வீட்டு நலம் நாட்டு நலத்தில் சேர்ந்தால் எப்படியெல்லாம் நடக்கும்'' ம்ம்ம்.. என் . அனுபவம் பேசுகிறது '' என முணு முணுக்கிறார் ஜெயலலிதா. பார்வை அருகே கலைஞர் மீது பாய அவரோ சூரியனைப் பார்க்கிறார். நிறைய பேசியவர் பேசுவதில்லை. 'இந்திராவும் ராஜீவும் பின்னால் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியாக பார்த்துக்கொள்கிறார்கள்.**
**நல்லது என்று நினைத்தோ, தெரிந்தோ ஏதோ ஒன்று செய்ய அது வேறுவிதமாக முடிந்தால்....? விருப்பு வெறுப்பாக த் தானே மாறும்'' எப்போதுமே தன்னிச்சையான உயிராக இருக்கின்றீர்கள், இதுதான் வாழ்வின் அழகு. எனவே உங்கள் விருப்புகளும் வெறுப்புகளும் உங்கள் வேலிகளா அல்லது சுதந்திரமா? உங்களுக்கு பிடித்ததை மட்டுமே நீங்கள் செய்வதென்பது உங்கள் சுதந்திரமா அல்லது சமூக பிணைப்பா? சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன் என்பதுதான் சுதந்திரமா ?**
* வேலையே இல்லாமல், இருந்தும் செய்யாமல் சும்மா இருப்பது தான் சுதந்திரமோ? தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என முழங்கினார் பாரதி.*
கார சாரமாக யார் யாரோ நாட்டு நடப்பை பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் பேசினார்கள். வழக்கம்போல் பார்லிமென்ட் மாதிரி கூச்சல் அங்கேயும் எழும்ப அமைதியை நாடி காந்தி எழுந்து போய் விட்டார்.
**தேவ தூதர்கள் தட்டுகளில் இனிப்பு வழங்க அனைவரும் வாழ்க பாரதம் என்று ஒரே குரலில் முழங்கிவிட்டு கலைகிறார்கள்.
**தேவ தூதர்கள் தட்டுகளில் இனிப்பு வழங்க அனைவரும் வாழ்க பாரதம் என்று ஒரே குரலில் முழங்கிவிட்டு கலைகிறார்கள்.
டிரிங்....ட்ரிங்....டெலிபோன் மணி அடித்து என் தூக்கத்தை விரட்டியது. அடடா என்ன அற்புதமான கனவு இது. இந்தியர்கள் என்னைப்போல் கனவில் வாழ்கிறவர்களா...? I AM ATACHING A DRAWING BY ME AS I AM A FAN OF RK LAXMAN AND AN ADMIRER OF HIS COMMON MAN..TO CELEBRATE INDIA'S INDEPENDENCE DAY.. JAI HIND.
No comments:
Post a Comment