Tuesday, August 4, 2020

RAMA JANMA BOOMI PUJA



                 மன்னவன் வந்தானடி   J K  SIVAN 

ராமர்  பிறந்த அயோத்தியில்  ராமருக்கு  நினைவு சின்னமாக ராமர் கோயில் இருப்பது  நியாயம் தான். உலகெங்கும் ராமர் கோயில்கள்  இருந்தாலும் அவர் பிறந்த இடத்தில் கோவில் என்றால்  மிக  விசேஷம்.

கோவில் இருந்த இடத்தில் மசூதி என்பது இந்திய சரித்திரத்தில் கண்ணீர்க்கரை படிந்த பக்கங்கள், 
ஏன் இந்தியாவில் மசூதி இருந்த இடத்தில் கோவில்கள் இல்லை, கிருஸ்தவ தேவாலயங்கள் இடிபட்டு அங்கே முருகன் விநாயகர்  சிவன்  பெருமாள்  கோவில்கள் உருவாகவில்லை?  அது தான் ஹிந்து சனாதன தர்ம சாத்வீகம். நமக்கு அது அவசியமில்லை.   ராமர் ஜென்ம பூமியில் கோவில்கள்  இருந்தது.  அவை  பல ஆயிரம் ஆண்டுகளில் பாதுகாக்கப்படாமல்  காலத்தால்  கரைந்தது.   பாஹியான்  இந்தியாவில் சுற்றியபோது அயோத்தியில் கோவில்களை பார்த்திருக்கிறான்.  விக்கிரமாதித்யன்  உஜ்ஜையினியை ஆண்டபோது  அங்கே மீண்டும்  ராமர் கோவில்களை புனருத்தாரணம் பண்ணி இருக்கிறான். 7ம் நூற்றாண்டில் ஹுவான்சுவாங் வந்தபோது  விக்ரமாதித்யன் கட்டிய கோயில்களும்  பாழடைந்துவிட்டன.  ராமர் வாழ்ந்தது 7000 ஆண்டுகளுக்கு முன் அல்லவா?  

உத்தரப்ரதேசம் எத்தனை பிற மத  ராஜாக்களை பார்த்திருக்கிறது. அவர்களது ஆட்சியில் என்னென்னவெல்லாம் அட்டூழியங்களை சஹித்திருக்கிறது?   முஸ்லீம்கள்  படையெடுத்து இந்தியாவிற்குள்  வரும் முன்பு   அயோத்தியில்  ராமர்  பிறந்த இடத்தில்  மூன்று கோவில்கள் இருந்தன என்று சரித்ரக்காரர்  FUHRER  சொல்கிறார். அவற்றின் பெயர்கள்  ராமர் பிறந்த ஜென்மஸ்தானம், ராமரின் அந்திமக்கிரியை நடந்த ஸ்வர்கத்வாரம்,  த்ரேதா கே   தாகூர் (ராமர்  நடத்திய யாக ஸ்தானம்).  FUHRER     மேற்கொண்டு என்ன சொல்கிறார் ? 1523ல்   மீர் கான்  என்பவன்  ராமரின் ஜென்மஸ்தானம் இருந்த இடத்தில் பாபரி மசூதி கட்டினான் என்கிறார்.  கோவிலின் சிற்பத்தூண்களை  மசூதி கட்ட உபயோகித்தார்கள் என்கிறார்.  கருப்பு நிற கல் தூண்கள்.  உள்ளூர்க்காரர்கள் அதை கசௌடி என்பார்கள் என்கிறார்.  மீண்டும் அந்த இடத்தில்   ஒளரங்கசீப்  அதே இடத்தில்   மசூதியை புதுப்பித்தும்,  மற்ற இரெண்டு கோவில்கள்  இருந்த இடங்களிலும் மசூதிகள் கட்டினான்.

எது எப்படியோ?  ராமன் கட்டுக்கதை அல்ல.  அவதாரங்கள் கற்பனைகளல்ல.  நாடெங்கும் உலகெங்கும் பல இடங்களில்  ராமன் வாழ்ந்தது    இருந்தது  பற்றிய ராமாயண   சம்பவ  சான்றுகள் இன்றும் போற்றப்பட்டு நினைவு கூறுகிறார்கள்.   ராமன் எத்தனையோ மனங்களில் வாழ்கின்றான்.  அவன் பிறந்த இடத்தில் நமது காலத்தில் மீண்டும் அவன் கோவில் உருவாகிறதை நாளை முதல் பார்க்கப்போகிறோம்.  நான் பாக்கியவான் என்ற சந்தோஷத்தில்  கண்ணை மூடுவேன்.

நல்ல எண்ணம் நல்ல செயகையாக  தான்  வளரும். எதிர்ப்புகள்  ராமர் காலத்திலேயே இருந்தவை.  எதிர்ப்பே இருக்கக்கூடாது என்று எவரும் சொல்லவில்லை. எதிர்ப்பினால் உண்மை மறையாது என்பது தான்  தீர்மானம். சர்க்கரை இருந்த  காலத்திலேயே  உப்பும்  கசப்பும் கூட இருந்ததால்  என்றும்  சர்க்கரை இல்லாமலா போய்விட்டது?  உப்பு கசப்பை விட  அதிகம் எல்லோரும்  விரும்புவது எது? சர்க்கரை தானே?  நம் உடம்பில் சர்க்கரை இருக்கட்டுமே . உள்ளத்திலும் ராமனாக  கிருஷ்ணனாக இதிகாசநாயகர்களாக, அவதாரங்களாக  என்றும் இனிக்கட்டுமே .   

 இந்த நன்னாளில்  தியாகராஜ ஸ்வாமிகள்  தனது வாழ்நாளில் எத்தனையோ கோடி ராம நாமங்களை ஜபித்தவரை நினைப்போம். அவரைப்பற்றி நான் எழுதிய  ''நாத ப்ரம்மம்  '' என்ற ஒரு சிறு புத்தகத்தை எல்லோருக்கும்  E BOOK ஆக இலவசமாக வழங்குகிறேன். என்னால் முடிந்தது இது தான். 
 வேண்டியவர்கள் என்னை  வாட்சப்பில் 9840279080   அணுகவும்.  பிபியில்  PDF அனுப்ப வழியில்லை.   மெயிலில் வேண்டுபவர்கள்  jaykaysivan@gmail .com    என்ற  ஈ மெயில் id யில் என்னை அணுகவும்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...