Saturday, August 8, 2020

GREAT HUMANITARIAN

 

           

  கர்ணனை மிஞ்சியவன்    J K  SIVAN 

கோபாலசாமி  பிரபல கிரிமினல் வக்கீல்.  பத்து கொலை பட்டப்பகலில்  பல பேர்  கண் எதிரில் புரிந்தாலும்  கோபாலசாமி கேட்கும்  பீஸ் fees  கொடுத்துவிட்டால்,  ''இவன் பச்சைக் குழந்தை, பட்டாம் பூச்சிக்கு பறப்பதால்  ரெக்கை வலிக்குமே  என்று கதறி கதறி அழுபவன்''  என்று கொலையாளியை நிரபராதியாக்கி  கோர்ட்டில் நிரூபித்து  விடுதலை வாங்கி கொடுப்பான்.   காசில் அவ்வளவு கெட்டி என்பதால்  இதயத்தை தொலைத்தவன்.


ஒருநாள்  கோபாலசாமி  தன் பெரிய காரில் ஒரு கிராமம்  கடக்கும் போது தெரு ஓரத்தில்  இருவர்  புல்லை  பிடுங்கி  தின்பதை கண்டு காரை நிறுத்தி  கேட்டான்.   
" என்ன  சாப்பிடுறீங்க  நீங்கி  இங்கே ?''
''சாமி  நாங்க  பச்சை ஏன்  புல்லை புடுங்கி   தின்கிறோமையா?.
''ஏன்  சோறு சாப்பிடமாட்டிங்களா?''
"பணமில்லை  உணவு வாங்க.  பல நாட்கள்  இப்படிதான்  புல்லை தின்று  உயிர் வாழ்கிறோம். பழக்கமாயிடுச்சி''
''புல்லு எல்லாம்  மழையில்லாம காஞ்சு போயிருக்கே''
''வேறே வழி இல்லீங்களே''
"அடேடே ,  அப்படியா. சரி என்னோடு காரில் வாயா  என் வீட்டில் நல்லா சாப்பிடலாம்"
"நன்றி அய்யா. அதோ அந்த மரத்தின்  பின்னால்  என் மனைவியும்  மகனும்  புல் தின்று கொண்டு இருக்கிறாங்க. சொல்லிட்டு  வாறன்  "
"அவங்களும்  புல்லு தின்கிறாங்களா.  அப்படின்னா, அவர்களையும்  உன்னோடு அழைத்து வரலாம்"
"அய்யா,   என்  தம்பி  அதோ  இருக்கிறான்யா  புளிய மரத்துக்கு பின்னாலே, அங்கே கொஞ்சம் புல்லு இருக்குதுன்னு அங்கே புல்லை   தின்னுகிட்டு இருக்கிறான் "  
" ஓஹோ.   பரவா இல்லப்பா,    நேரமாச்சு,  சரி,  அந்த ஆளையும்  காரிலே  ஏறச்  சொல்லு"  என் காரில்  அனைவருக்கும்  இடமிருக்கிறது.  என்  வீட்டுக்கு  வரலாம்"

ஏழைகள் குடும்பம் காரில்   கோபால சாமி பங்களாவிற்கு முஜின் வந்து இறங்கியது.  உள்ளே அழைத்து சென்றான்.   பிரம்மாண்டமான மாளிகையை, தோட்டம் எல்லாம் பார்த்து விட்டு வக்கீலிடம் ஏழை சொன்னான்:  

 "ஐயா,  நீங்க  கடவுள்.    தர்ம பிரபு. எங்கள் மாதிரி ஏழைங்க மேல்  எவ்வளவு கருணை,  ரொம்ப  நல்ல  மனசு உங்களுக்கு இல்லன்னா  எங்களை மாதிரி   ஏழைகள் சாப்பிடவேணும்  என்று  நினைக்க தோணுமா, கூட்டிட்டு  வர  மனசு இடம் கொடுக்குமா ?" 

கிரிமினல்  வக்கீல் கோபாலசாமி  சிம்பிளாக  பதிலளித்தான்   : 

"இதுக்கெல்லாம் எதுக்குப்பா  நன்றி  கின்றி . அதெல்லாம்  ஒண்ணு மில்லையப்பா, இதோ பாருங்க   ஆறு ஏக்கர் பங்களா, நிறைய இடம் இருக்கு.   நீங்கள்  எல்லாரும்  ரோடு ஓரத்தில்  அசுத்தமான புல்லை தின்பதை விட  என் வீடு  காம்பௌண்டில்  ஒரு  ரெண்டு அடி  உயரத்துக்கு  நல்ல  புல்லாக  வளர்ந்திருக்கிறதை பாருங்க.  நீங்க எல்லாரும்  ஆற அமர  இங்கே உக்கார்ந்து சாப்பிடலாமே  என்று தான் உங்களை எல்லாம்  கூட்டி வந்தேன். சாப்பிட்டுட்டு  அதோ அந்த கேட் வழியா  வந்த வழிய  பார்த்து நடந்து போங்க. 

ஏழை சுருண்டு விழுந்தான்... அவன் குடும்பம்  ஆ  என்று வாயை பிளந்து வேறு வழியின்றி புல்லின் மேல் பாய்ந்தது. 

தான தர்மம் செய்வதில்  கர்ணன்  வக்கீலுக்கு  ஈடாவானா???

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...