இன்று ராமரைப்பற்றிய ராமாயணத்தையும் ,
வள்ளுவனின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறந்த மனிதர் பற்றி சொல்கி
றேன். நான் இதற்கு முன் உங்களுக்கு சுப்ரமணிய சிவா பற்றி எழுதும்போதே என் மனதில்
ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. எல்லோரும் மறந்து போன இன்னொருவர் இருக்கிறாரே. அவர்
பெயர் சொல்கிறேன். உங்களுக்கு தெரியுமா என்று யோசியுங்கள். வராஹனேரி வேங்கடேச
சுப்ரமணிய ஐயர் ... சுருக்கமாக வ.வே.சு ஐயர். ரெண்டு வார்த்தை அவரைப் பற்றி
எழுதாமல் விடுகிறோமே என்று அப்போது தோன்றியது வாஸ்தவம். சரி, தனியாக அவரைப் பற்றி
மட்டும் ஒரு கட்டுரை எழுதிவிடுவோம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். நேற்று
இரவு இதை எழுதும் வரை வரை வ.வே.சு ஐயர் நிரடல் என் நெஞ்சுக்குள் உள்ளூர இருந்தது.
நமது தேசம் சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் நடந்த போராட்டம் நீளமானது. அதில் பங்கு
கொண்ட தியாகிகள் அநேகர். அவர்களில் முக்கியமான ஒருவர் தமிழகத்தை சேர்ந்த வ.வே.சு.
ஐயர். 44 வருஷங்கள் தான் வாழ்ந்தவர் என்றாலும் தனது பெயரை இந்திய சரித்திரத்தில்
இடம் பெற செய்தவர்
போராட்டம் தீவிர வாதம் மிதவாதம் என்று இரு கிளைகளாக செயல் பட்டு
வந்தது. காந்தி போன்றவர்கள் அமைதியாக சுதந்தரம் அடைய விரும்பினார்கள் . ஐயர்
அப்படியல்ல வெள்ளையனின் அராஜகம் அநீதிக்கு பதிலடி கொடுக்க நாம் ஆயுதம் கையில் தூக்க
வேண்டும் என்ற தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்தவர். மயிலே மயிலே என்றால் இந்த
வெள்ளைக்கார மயில் சுதந்திர இறகு போடாது என்று நம்பியவர்களில் ஒருவர். வன்முறையில்
தான் சுதந்திரம் பெற முடியும் என்று நம்பியவர். வெள்ளையர்களின் ஊர் தலைநகரான
லண்டனில் வக்கீலாக இருந்தவர். வீர் சவர்காரை தலைவனாக ஏற்று அவர் வழியில்
வளர்ந்தவர். சவர்க்கர் கைதானபின் எப்படியோ ஐயர் தப்பித்து தாயகம் திரும்பியவர்.
வீரத்தின் இன்னொரு பெயர் வ.வே.சு ஐயர் . தமிழில் நல்ல பாண்டித்யம் உண்டு. தமிழ்
இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு.
கம்பராமாயணத்தில் நல்ல ஆராய்ச்சி. தேர்ச்சி.
சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சிலவற்றை நான் படித்து ரசித்தவன். சுப்ரமணிய பாரதி,
கப்பலோட்டிய தமிழன் வ. உ.சி.யோடு நட்பு கொண்டு சுதந்திரப் போராட் டத்தில்
பங்கேற்றவர். வெள்ளையனிடம் அகப்படாமல் பிரெஞ்சு காலனியான புதுச்சேரியில்
குடியேறியவர்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் BA அப்புறம் சென்னை யில் BL
படித்து வக்கீல். திருச்சி நீதி மன்றத் தில் அரசாங்க வக்கீல். பிறகு ரங்கூன் சென்று
வெள்ளைக்கார வக்கீலுடன் பணியாற்றி, லண்டன் சென்ற பாரிஸ்டர். அங்கே தான் V.D சவர்க்க
ருடன் நட்பு. சுதந்திர தாகம் தணியா மல் ஏற்பட்டது. கவியோகி சுத்தா னந்த பாரதியுடன்
நட்புகொண்டு சேரன் மாதேவி யில் ஒரு ஆஸ்ரமம் நடத்தினார். அவரது சுதந்திர தாகத்தை
கவனித்த பிரிட்டிஷ் அரசு எதிர்ப் புக்காக தேசத்துரோகி பட்டம் கட்டி அவரை கைது செய்ய
துடித்தது. லண்டனிலிருந்து தப்பி ப்ரான்ஸ் தேசத்துக்கு சென்று விட்டார். ஒரு
முஸ்லீம் வேஷத்தில் இந்தியாவுக்கு வந்து புதுச்சேரியில் புகுந்துவிட்டார்.
புதுச்சேரியில் தான் ஐயருக்கு பாரதியார், அரவிந்தர் ஆகியோர் நட்பானார்கள். ஐயரின்
சீடர்களில் ஒருவன் தான் வாஞ்சிநாதன். அவனுக்கு தான் ஆஷ் துரையை சுட பயிற்சி தந்தார்
ஐயர். ஐயர் பார்ப்பதற்கு ஒரு சாமியார் மாதிரி தான் இருப்பார். தாடி, மீசை. ஒற்றை
வேஷ்டி. மேல் துண்டு. அடர்ந்த முடி. குடுமித் தலை. விபூதி குங்குமம். நிமிர்ந்த
நன்னடை. நேர்கொண்ட பார்வை. ஆனால் வீராதி வீரர், துப்பாக்கி சுடுவதில் திறமை சாலி.
ஆஷ் என்கிற வெள்ளைக்கார கலெக்டரை வாஞ்சி நாதன் என்ற இளைஞன் ரயில் மணியாச்சி ரயில்
நிலையம் அருகே வண்டி நிற்கும்போது ஆஷ் குடும்பத் தோடு இருந்த பெட்டிக்குள் நுழைந்து
அவனை சுட்டு கொல்லு வதற்கு முன்பு அவனுக்கு துப்பாக்கியில் சுடும் பயிற்சி
அளித்தவர். 22.9.1914 அன்று ஜெர்மனிய நீர்மூழ்கி கப்பல் எம்டன் சென்னை பக்கம் வந்து
குண்டு போட்டது. இன்றும் சென்னை உயர்நீதி மன்ற சுற்றுசுவரில் அந்த இடம் ஞாபக
சின்னமாக இருக்கிறது. நான் சென்று பார்த்திருக்கிறேன். அதன் பிறகு ஐயர் சென்னை
வந்தார் தேச பக்தன் என்ற பத்ரிகை ஆசிரிய ரானார். 1921ல் வெள்ளையர் அரசாங்கம் அவரை
கைது சிறையில் அடைத்தது. ஒன்பது மாச சிறை வாசத்தின் பொது தான் கம்பராமாயணத்தை
ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதினார்.
சிறுகதை எழுதுவதை அறிமுகப்படுத்தியவர் வ.வே.சு.
ஐயர் தான். ஐயரின் முடிவு சோகமானது அதே சமயம் சாகசமானது. பாப நாசம் நீர்வீஸ்ச்சியில்
அவரது மகள் சுபத்திரா மூழ்கி விட்டாள் . அவளைக் காப்பாற்ற நீரில் குதித்த ஐயர் ஜல
சமாதி அடைந்தார். அன்று தேதி 1925 ஜூன் 3.அப்போது அவர் வயது 44. அவரது மறைவி லும்
துணிச்சல், சாகசம். வ.வே.சு . ஐயர் தான் முதன் முதலில் தமிழில் சிறுகதைகள் எழுதுவதை
அறிமுகப் படுத்தியவர். அவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை நீண்ட கதையாக
இருக்கிறது. சுவாரஸ் யமாக இருந்தது. அதைப்பற்றி தனியாக எழுதுகிறேன்.
No comments:
Post a Comment