Tuesday, August 18, 2020

DWARKA UNDER SEA

 


                  கிருஷ்ணனும்  துவாரகையும்   J K  SIVAN  


சில வருஷங்களுக்கு முன்.....

சென்னை கடற்கரையில்  ஒரு  டிசம்பர் நாளில்  திடீரென்று சுனாமி ராக்ஷஸன் பொங்கி எழுந்து எத்தனையோ உயிர், உடைமைகளுக்கு  சேதம் விளைவித்தானே அதை   நேரில் பார்க்க நேர்ந்தவர்கள்  ஜென்மத்தில் அதை மறக்க முடியாது. அப்படித்தான்  அர்ஜூனன் துவாரகையில் கண்டான்.   பார்க்கமுடியாத படி  கண்ணீர் திரை பார்வையை மறைத்தது.  அர்ஜூனன்  இப்போது  பழைய  மஹா வீரன் இல்லை....பெருங்காய பாண்டம். அவன் சக்தி  கிருஷ்ணன் இனி இல்லையே....

எத்தனை தரம் துவாரகை வந்திருக்கிறான். அதோ தெரிகிறதே  அந்த கிருஷ்ணன் மாளிகையில் கிருஷ்ணன் இருந்தபோது எவ்வளவு முறை அவனோடு   சிரித்துப் பேசி இருக்கிறான், சேர்ந்து சாப்பிட்டு இருக்கிறான்.

 கிருஷ்ணன் முன்னெச்சரிக்கையாக  உத்தவன் மூலம் சேதி அனுப்பி விட்டான். துவாரகையிலிருந்து எல்லோரும் வெளியேறுங்கள் என்று.   எல்லோரும்  போயாகிவிட்டது....எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது.   கடல் ஏன் இப்படி பொங்கிக்  கரையை விழுங்குகிறது.  கிருஷ்ணனைவிட  இயற்கை சக்தி வாய்ந்ததா?  கிருஷ்ணனே  ஒருவேளை  இப்படி இயற்கையாக  வந்துவிட்டானோ? துவாரகை தெருவெல்லாம்  நீரில் மூழ்கிவிட்டது. எவ்வளவு அற்புதமான கட்டிடங்கள், கிருஷ்ணன் மாளிகை எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக  நீரில் மூழ்கி மறைய ஆரம்பித்துவிட்டது.   ஆபத்தான  அந்த இடத்தை விட்டு வேகமாக அர்ஜுனன் வெளியேறுகிறான். போவதற்கு முன் ஆசை ஆசையாக ஒருதரம் கிருஷ்ணன் மாளிகையை திரும்பி பார்க்கிறான்.    தூரத்தில்  அது தெரிகிறது.. ஆஹா  எவ்வளவு  மறக்கமுடியாத இடம். கண்ணனோடு சேர்ந்து உலவிய பேசிய, வாதம் செய்த  ஒன்றாக உண்ட, உறங்கிய  இடம்...  இதோ  முழுதும் நீரில் மறைந்துவிட்டது. கிருஷ்ணனே  போய்விட்டான்.... இனி மாளிகை இருந்தென்ன இல்லாவிட்டால் தான் என்ன?
 ஹும் ..  எல்லாவற்றையும் விழுங்கிய கடல் இப்போது  உண்ட மயக்கத்தில் நீண்ட  அகலமான  ஏரியாக காட்சி அளிக்கிறது.  அசைவில்லாத நீர் பரப்பு. அடியில் அத்தனையும்....
இனி துவாரகை  ஒரு நினைவு மட்டுமே..

 கிருஷ்ணன், ராமன்  இவர்கள்  எல்லாம் எங்கேயப்பா இருந்தார்கள்.  எல்லாம் கற்பனை..? இப்படி சொல்பவர்கள் இருந்தபோதிலும்  அவர்கள் இருந்ததை புராணங்கள், நூல்கள் சொல்கிறது... அதை  இப்போது விஞ்ஞாநிகள்   ஆராய்ச்சி யாளர்கள் அதை ஆமாம் என்று  தடயங்களோடு நிரூபிக்கிறார்கள்.. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கிருஷ்ணன் ரெண்டு நாளுக்கு முன்னாள் பிறந்ததை  ஆவணி மாதம்  கிருஷ்ண பக்ஷம்  அஷ்டமி திதி   நினைவு படுத்தி எத்தனை ஆயிரம் லக்ஷம் வீடுகளில் கிருஷ்ணன்  மா வில் கால் பதித்திருக்கிறான் .  இது கல்ப கோடி காலம் தொடரப்போகிறது.

காற்றில் புல்லாங்குழல் ஒலிக்கும்போதெல்லாம் கிருஷ்ணன் கண்முன்னே நிற்கத்தான் போகிறான்.  நாம்  தான்  வெள்ளைக்காரன் எழுதி தந்த பொய்யான சாஸ்திரங்களை, வேத புத்தகங்களை நம்புகிறவர்கள். என்றைக்கு நமது ரிஷிகளை மதித்தோம்?. அவர்களைப்  புரிந்து கொள்பவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறார்கள் என்பதே  புனரபி ஜனனம்  சமாச்சாரம் தான்.  

உலகத்தின் முதல் நாகரிகம் தோன்றிய நாடு பாரத தேசம். இங்கு கல்வி கேள்விகளில் தேர்ந்தவர்கள் வாழ்ந்தபோது மேலை நாடுகள் காட்டுமிராண்டிகள்  வாழும் இடமாக இருந்ததை  வெள்ளைத்தோல் ஒப்புக்கொள்ளுமா? அதனால் நமது  உண்மை நிலையை  கற்பனை என்று வர்ணம் பூசி விட்டது.  அதை ஒப்புக்கொள்ளும் நம்பும் நம்மவர்கள் தான்  குற்றவாளிகள்.

வானசாஸ்திரம், மருத்துவம், புவியியல், வேதியல் எல்லாவற்றிலும் நமது  சாஸ்திரங்கள், ஓலைச்சுவடிகளை மறுத்து
விட்டார்கள்.  எல்லாவற்றிலும் சிறந்து முதன்மையாக இருந்தவர்கள் நாம்.   எவ்வளவோ அழிந்துவிட்டது. எங்கோ எவரோ  கஷ்டப்பட்டு  சிறு துகள்களாக அவற்றை மீட்கிறார்கள். அவர்கள் வாழ்க.  பழைய வேதமான  ரிக்வேதம் சரஸ்வதி நதியை  ஐம்பதிற்கும் மேலான இடங்களில் சொல்லி இருக்கிறது. அந்த நதி மறைந்துவிட்டது. பூமிக்கு அடியே  அந்தர்வாஹினியாக சென்றுவிட்டது.   அமெரிக்க  விஞ்ஞானிகள்  சாட்டிலைட் மூலம் சரஸ்வதி   இமயமலையிலிருந்து  அரபிக்கடல் வரை அது ஓடிய  இடங்களை, தடயங்களை கண்டுபிடித்து  விட்டார்கள்.   அந்த நதியை  மீண்டும் புதுப்பிக்க   தரையில் ஓடவிட முயற்சிகள் நடக்காமலில்லை. 

வெள்ளைக்காரன் புகுத்திய   கல்வி முறையில் ஆங்கிலேய சாம்ராஜ்ய விஞ்ஞான  வளர்ச்சி  தொழில் வணிக  அரசியல் விஷயங்களை  மட்டுமே  காட்டி,   நமது புராதன  மஹத்வத்தை  இருட்டடிப்பு செய்தன.  இதை  ஏழெட்டு  தலைமுறை  ஆங்கில மோகத்தில்  நமது உண்மையான சரித்திரத்தை அறியாமல்  கற்று  வளர்ந்தது  நமது துரதிர்ஷ்டம்.

கிருஷ்ணன் மறைந்த செய்தி ஹஸ்தினாபுரத்தில்  யுதிஷ்டிரனுக்கு  கிடைத்ததும்  பதறினான், கதறினான்.  

''அர்ஜுனா  மோசம் போய்விட்டோமடா  உடனே ஓடு துவாரகைக்கு....''  

அர்ஜுனன் தேரை எடுத்துக்கொண்டு கன வேகமாக துவாரகை சென்றபோது தான் முதல் பாரா  சம்பவம். 

இப்போது நாம்   காணும் துவாரகை, சௌராஷ்ட்ரா பகுதி. பழைய துவாரகை இல்லை.  பூமிக்கடியில்  கிருஷ்ணன் இருந்த துவாரகை நான் யூடுயூப்பில் பார்த்தேன். அதை இணைத்திருக்கிறேன்.  நான் எழுதுவதை விட  படங்கள்  நன்றாக பேசும் விஷயத்தை அழகாக புரிய வைக்கும். இல்லையா?   கொடுத்திருக்கும்  லிங்க்   கிளிக் செயது பார்க்கவும்: 
https://youtu.be/QTHA08Cuy-4

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...