Saturday, August 22, 2020

LIFE LESSON

 



                        இது தான் இப்போ  நிலவரமா?  J K  SIVAN 

ஆணும்  பெண்ணும்  ஒண்ணா?  இல்லையே,  காளையும்  பசுவும் ஒண்ணா இருக்க முடியாதே.   அது வேறே.  இது வேறே ஸார் பேர்லே இருந்தே இருந்தே ரெண்டுக்கும் வித்யாசம்  ஆரம்பிக்கிறது.   பிரபஞ்ச இயக்கத்தில் பாசிட்டிவ்  நெகட்டிவ் ரெண்டும் அவசியம்.  சக்தியும்  சிவனும்.   கடவுள்  இரவு பகல், சுகம் துக்கம்,  குளிர் சூடு, மழை வெயில், இனிப்பு கசப்பு, பிறப்பு  இறப்பு என்று  ரெண்டு சக்திகளாக படைத்தது  ஸ்ருஷ்டி  ரஹஸ்யம். ஆணுக்கு ஒரு கடமை, பெண்ணுக்கு ஒரு கடமை உண்டு.   உலகில் ரெண்டும்  ரொம்ப  அவசியம்.  பெண் தான் தாயாக முடியும், அவள்  தந்தையாக முடியாது.

ரெண்டு   பேருக்கும் ஒரே விதமான படிப்பு, வேலை, சம்பளம், டிரஸ், அவர்களை  ஒன்றாக மாற்றாது. முயல்வது கனவைத் துரத்துவது.   நமது  சாஸ்திரங்கள்  இருவருக்குமான  ஒழுக்கங்கள், கட்டுப்பாடு, கடமை எல்லாம் சொல்கிறது. சிலது காலத்துக்கு ஏற்றவாறு மாறலாம். எல்லாமே  தப்பு கிடையாது.  ஆணாதிக்கம், வன்முறை எல்லாம்  தவறு தான். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ரொம்ப அவசியம்.  அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள வேண்டும்.  உண்மையான அன்பு, பாசம்  நேசம் இருவரையும் இணைக்கவேண்டும்.  நமது சாஸ்திரத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதை உணர்ந்து அணுகவேண்டும்.

பெண்கள்  வேலைக்கு வேலைக்கு போக ஆரம்பித்தது முதல், வெளிநாடு தனியே சென்று அங்கேயே மணம் முடிந்து தாயநாட்டை மறப்பது, தொன்று தோட்ட கலாச்சாரத்தை மறுப்பது, பாரம்பரியத்தை  வெறுப்பது  உறவை மறப்பது, போன்றவை அனர்த்தத்தில் முடிகிறது.  பெண்களுக்கு திருமணம் என்பது  தற்போதைய நிலையில்  ஆண்களுக்கு விதிக்கும்  கண்டிஷன்களாக மாறி வருவது சுயநலத்தில் பிடிவாதத்தில், துவங்கி, திருமண முறிவுகளில் முடிகிறது.  பெண்கள் கிடைக்காமல் அநேக  ஆண்கள் பீஷ்மராக மாறிவருவது காலத்தின் கொடுமை. ஆணோ பெண்ணோ இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.  பெற்றோர்களுக்கு இதில் பெரிய பொறுப்பு உண்டு.

பாரம்பரியத்தை மறுப்பதால்,  வம்சம் அடையாளம் இழக்கிறது. கலப்பு மணத்தால்  விபரீதம் விளைகிறது. குலதெய்வங்கள், முன்னோர் வகுத்த வரைமுறை எல்லாமே  காற்றில் பறக்கிறது.   வேண்டாம். பணம் ஒன்றே பிரதானம் அல்ல. வாழ்க்கையில் எத்தனையோ  அற்புதங்கள், அதிசயங்களை  நமது முன்னோர்கள், பெற்றோர்கள் கண்டு களித்திருக்கிறார்கள் . அவற்றை  இழக்கவேண்டாம்.  அடுத்த தலைமுறை  அங்குமில்லை இங்குமில்லை என்று திரிசங்கு சொர்க்கத்தில் தள்ளப்படுகிறது.  இது  குடும்பத்துக்கு விளைக்கும் துரோகம். 

மனதில் திருப்தி வேண்டும்.  இருப்பதை வைத்துக்கொண்டு இல்வாழ்க்கை வாழ்வது  என்று நாம் சிக்கனமாக   வளர்ந்தவர்கள்.  அதிக பணம் தேடி  அகலக்கால் வைத்து  அவஸ்தையில் நிம்மதி இழந்தவர்கள் அநேகர். வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்.

கொரோனா வந்ததில்  எத்தனையோ நன்மைகள் விளைந்திருக்கிறது. வீட்டுச் சாப்பாடு. சுகாதாரம், சுய கட்டுப்பாடு, வீட்டிலிருந்தே  விஞ்ஞான வளர்ச்சியால்  பொருள் ஈட்டுவது, கணினி நிறைய  வழி காட்டுகிறது. பெண்கள்  வேண்டாத விஷயங்களில் மனதை செலுத்தாமல்   விடி, பட்டிமன்றம், சினிமா, அக்கப்போர்  என்று  நேரம் வீணாக்காமல்  தானும் கற்று குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்தி  அவர்கள் வளமாக வாழ,  வழி வகுக்கலாம்.  எண்ணற்ற வழிகள் பிழைக்க உண்டு.

வேண்டாத  சில  விஷயங்கள்  தற்போது  திருமண வாழ்க்கை நிலையை மாற்றிக்கொண்டு வருகிறது.  எவ்வளவு எடுத்துச் சொல்லியும்  குறையவில்லையோ என்று பயப்பட வைக்கிறது.

மாப்பிள்ளை  பெண்ணைவிட நிறைய படித்திருக்கவேண்டும்,  நிறைய சம்பாதிக்கவேண்டும்,  அமேரிக்கா ஆஸ்திரேலியா  பையன் தான் வேண்டும். அவன் தான் சமைக்க வேண்டும். பெண்ணுக்கு சமைக்க தெரியாது.  அவளை எதிரித்து பேசவோ அவள் சுதந்தத்திரத்தில் தலையிடவோ கூடாது.  பெண் வீட்டருக்கான உரிமையை பிள்ளை வீட்டார் எதிர்பார்க்க கூடாது.  அவர்கள் தலையீடு எதிலும் அவசியமில்லை..
பெண்ணுக்கு பஞ்சாங்க, சாஸ்திர, சம்பிரதாயங்கள் பிடிக்காது, நாங்கள் அவளை அப்படி வளர்க்கவில்லை. இதெல்லாம் தேடும் மடிசஞ்சி மாப்பிள்ளை வேண்டாம். 

ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன்.  ஒரு நல்ல உத்யோகத்தில் இருக்கும் நல்ல சாஸ்த்ரோக்தமான குடும்ப பிள்ளை. அவனுக்கு ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணி, ஒருநாள் அந்த பெண் அவனோடு பேச போன் பண்ணியபோது பையனின்  அம்மா எடுத்தாள் . '' பையன் சந்தியாவந்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறான், முடிந்ததும் பேச சொல்கிறேன்''  என்றாள் .  பெண் தனது அம்மாவிடம் ''இந்த கட்டுப்பெட்டி, சாஸ்திரிகளை என்னால் கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது, இந்த கல்யாணம் வேண்டாம்'' என்று சொல்லி கல்யாணம் நின்றுபோய்விட்டது... இதில் யார் தப்பு செய்தது?''


இது எல்லாமே பெண் வீட்டார் மேல் சுமத்தும் குற்றம் என்று கருதவேண்டாம்.  மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் அதிகப்ரசங்கிகள் தான்.  எங்க பையன் இங்கிலிஷ் தான் பேசுவான். பெண் இங்கிலிஷ் லே தான் பேசணும்.  அவன் எதை சாப்பிடுறானோ அதை சாப்பிடணும் குடிக்கணும்.. பார்ட்டிக்கெல்லாம் கூட்டிப்போனால் அவளும்  சகஜமாக எல்லோரோடும் கட்டிப்பிடித்து  டான்ஸ் ஆடணும்......

 இதற்கு மேல் நான் லிஸ்ட் போட பிடிக்கவில்லை.    கலியுகத்தில்  இன்னும் நிறைய அனுபவிக்க பாக்கி இருக்கிறது. இப்போது கலியுகம் கால் பாகம் கூட முடியவில்லையே... முக்கால் ஆகும்போது நல்லவேளை நாம் இருக்க மாட்டோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...