கிருஷ்ணா நீ பேகனே பாரோ..J K SIVAN
இதே நாளில் (ஆங்கில தேதி அல்ல ஸார். ஸ்ராவண மாசம், (ஆவணி) கிருஷ்ண பக்ஷம், அஷ்டமி திதி , ரோகிணி நக்ஷத்ரம் கோகுலத்தில் 5248 வருஷம் முன்பு கண்ணன் பிறந்தான் . அஷ்டமி அன்று கன்னங்கரேல் என்ற இருட்டில், நடு ராத்ரி பிறந்தான். அவனும் கருப்பு. மதுராவில் இருட்டு சிறைச்சாலை அறைக்குள். கேட்கவேண்டுமா ! கருப்புக்கும் இருட்டுக்கும் பஞ்சமே இல்லை. கிருஷ்ணனோடு ஒன்றியவை. அதனால் தான் அவன் பெயர் கிருஷ்ணன். கிருஷ்ணா என்றால் கருப்பு.
சந்திரனின் அசைவு மாற மாற நக்ஷத்ரம் தள்ளிப்போகும். நமக்கு 11.8.2020 ரோஹிணிக்கு பதிலாக நாளை பரணி . ஆவணிமாசம், கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி போதும் கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி என்று எல்லாம் அவன் பிறந்தநாளை நினைத்து வணங்க. கோகுலாஷ்டமி , ஜென்மாஷ் டமி, அல்லது கிருஷ்ணாஷ்டமி என்றும் கொண்டாடு கிறார்கள்.
மஹாவிஷ்ணுவின் மிகச் சிறந்த எட்டாவது அவதாரம் கிருஷ்ணன். எப்படி அவனை விஷமக்காரனாக, கன்றுகள் ஆநிரை மேய்க்கும் கோ பாலனாக, இனிமையான புல்லாங் குழல் மன்னனாக, அன்பு பிரேமை பாசத்துக்கு உதாரணமாக எளிய யாதவ சிறுவனாக, சிறந்த ராஜதந்திரியாக, மஹா வீரனாக, யோகேஸ் வ ரனாக, ஆச்சார்யனாக, நல்ல நண்பனாக, ...... நிறைய சொல்லிக் கொண்டே போவா னேன், ''எல்லாமும் ஒன்றான'' ஒருத்தி மகனாக , பார்க்கிறோம் ஆச்சர்யமானவன் கண் ணன். தேவகிக்கு பிறந்து யசோதையிடம் வளர்ந்தவன்.
கிருஷ்ணன் என்பதே ஒரு உயர்ந்த தத்வம் என்பார்கள். அவனைப் பெற்ற தேவகி அவன் தாய். தேவகி நமது உடலை குறிக்கிறாள். உயிர் கொடுத்த தந்தை வாசுதேவன் தான் நமது பிராணன், உடலும் உயிரும் இணைந் தால் தான் ஆனந்தம். ஆனந்தத்தை கெடுப்பது தான் அஹங்காரம் எனும் கம்சன். ஆனந்தம் இருக்கும் இடத்தில் அஹங்காரத்துக்கு வேலை இல்லை. கண்ணன் இருக்கும் இடத்தில் கோபியர் கோபர்கள் ஆநிரை, பறவைகள், எல்லாமும் ஆனந்தமாக இருந்தது , அவன் ஆனந்த ஸ்வரூபன் என்பதால் அவனைச் சுற்றி வெளிப்பட்ட ஆனந்தத்தால் மகிழ்வதில் ஆச்சரியம் இல்லை.
சிறையில் கண்ணன் பிறந்தபோது காவலர்கள் எல்லோரும் உறங்கி விட்டார்கள், என்றால் என்ன அர்த்தம்? பக்தி பிரேமை உடலில் தெய்வீகமாக, ஆனந்தமாக பரவும்போது, ஐம்புலன் களும் இருக்கும் இடம் தெரியாமல் அடங்கிவிடும்.
கண்ணன் பிறந்த நாளை பல ஆராய்ச் சியாளர்கள் இன்னமும் இரவு பகலாக கணித்துக் கொண்டிருக்கிறார்
கள். அருண் பன்சால் எனும் கம்ப்யூட்டர் ஜோஸ்யக்காரர் கஷ்டப்பட்டு எதெல் லாமோ தேடி, கூட்டி கழித்து வகுத்து, கிருஷ்ணன் பிறந்தநாள் ஆவணி தேய்பிறையில் ரோகிணி நக்ஷத் திரத்தில், ஜூலை 21, 3228 (அதாவது 2020+3228): 5248 வருஷங்களுக்கு முன்பு என்கிறார்.
என்னைப்பொறுத்தவரை கிருஷ்ணன் நாம் எல்லோரும் பிறக்கும்போது நம்மோடு பிறப்பவன். ஒவ்வொரு பிறவியிலும் நம்மோடு இருப்பவன். அவனை நினைக்கும் ஒவ்வொரு கணமும் ஸ்ரீ ஜெயந்தி தான். உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் கிருஷ்ணன், ராதை தான். துளியும் சந்தேகமில்லை.
நாட்களை, கிரஹங்கள் அசைவை, துல்லியமாக கணிக்க இப்போது ஆரியபட்டாக்கள் இல்லை.இங்கிலிஷ் காலண்டர் கணக்கும் சாஸ்த்ரோக்த பஞ்சாங்கமும் ஒன்று சேராது. நாட்கள் மாறி மாறி வரும். ஒரு ஆங்கில தேதியில் வந்த பண்டிகை அடுத்த வருஷம் அதே நாளில் வருவதில்லை. அதனால் தான் நாம் ரெண்டு பிறந்தநாள் கொண்டாடு கிறோம்.
''சார் என் இங்கிலிஷ் பெர்த் டே வேறே, தமிழ் பஞ்சாங்க படி வேறே நாள்.'' என்கிறோம். .! அதனால் தான் கோவில் களில் அர்ச்சனை பண்ணும்போது ஜென்ம நக்ஷத்திரத்தன்று கொண்டாடுகிறோம். ஆங்கில தேதி யாரோ பிறந்ததை காட்டும் அன்று. நூறு வருஷங்கள் கூட தாண்டாத நமக்கே இந்த வேறுபாடு என்றால் 5248 வருஷங்களில் எத்தனை வேறுபாடு களோ!! மாறுதல்களோ.
கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு தேரோட்டி யாக மஹாபாரத யுத்தத்தில் பங்கேற்றபோது கிருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் 90 வயது. கிருஷ்ணன் அதற்குப் பிறகு 35 வருஷங் கள் வாழ்ந்து 125 வது வயதில் அவதாரத்தை பூர்த்தி செய்தான் என்று அறிகிறோம்
ஒரு விஷயம் கவனத்தில் வையுங்கள். பாரதப்போரில் கிருஷ்ணனுக்கு 90 வயதா எப்படி 18 நாள் யுத்தகளத்தில் காலை முதல் இரவு வரை தேரோட்டினான், அர்ஜுனன் யுத்தம் புரிந்தான்? என்று மலைக்க வேண்டாம். நமது 90 அவனுக்கு 30-35 வயது என்று கொள்ளவேண்டும். நமது ஆயுள்காலத் தில் நாம் அநேகர் 90 வயதை எட்டுவ தில்லை. இதை அதோடு கம்பேர் COMPARE பண்ணக்கூடாது.
மஹா பாரத யுத்தம் ஆரம்பித்த நாள் தோன்றிய ஒரு வால் நக்ஷத்ரம் கிருஷ்ணன் மறைந்த நாள் அன்று மீண்டும் வானில் தோன்றியதாம்.
கிருஷ்ணனை பற்றி எழுத எனக்கு வாழ்நாள் போறாது ஸார். இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்.
No comments:
Post a Comment