பாபாஜியும் பாலாஜியும் J K SIVAN
திருப்பதி வேங்கடாசலபதி என்றாலே அதிசயம் ஆச்சர்யம் கலந்த எண்ணற்ற ரகசியங்கள் உண்டு. அவற்றை ஒவ்வொ ன் றாக ஆராய்ந்து விளக்கவோ, தெரிந்து கொள்ளவோ ஒரு வாழ்நாள் போதாது. லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் பொங்கி வழியும் திருமலையில் இப்போது நாம் எங்கு சென்று எதைக் காண்பது அறிவது என்பது இயலாது. சுற்றிப் பார்க்கவோ, ஒவ்வொன்றையும் விசாரித்து தெரிந்து கொள்ள வோ யாருக்கும் நேரமில்லை. ஓடிப்போய் பஸ் பிடிப்பது, சாப்பாடு தேடுவதி லேயே நேரம் தீர்ந்து விடுகிறதே.
வேங்கடேசனின் ஆலயத்துக்கு, திரும லைக்கு, எத்தனையோ கணக்கற்ற மஹான்கள், ஸ்ரேஷ்டர்கள் புண்ய புருஷர்கள் தரிசிக்க வந்திருக்கிறார்கள். .அவர்களை யார் என்றே நாம் இன்னமும் முழுமையாக அடையாளம் காணவில் லை. அவர்களில் ஒருவரான ஹாதி ராம் பாபாவைப் பற்றி கேள்விப் பட்டிருக் கிறீர் களா?
வடக்கே நாகபுரியோ வேறு எங்கிருந் தோ வந்த பக்தர். நானூறு வருஷங்க ளுக்கு முன்பு நடந்தே திருப்பதி திருமலைக்கு வேங்கடேசன் கோவில் எதிரே ஒரு ஆஸ்ரமம் நிறுவிக் கொண்டார். அவருக்கு எந்நேரமும் வெங்கடேசனைத் தரிசனம் செய்து கொண்டே இருக்கவேண்டுமே.
அந்த ஆஸ்ரமம் அவர் சமாதியாக இன்றும் இருக்கிறது. புதுப்பிக்கப்பட்டு ஸ்ரீ வேணு கோபால சுவாமி ஆலயம் அருகே இருக்கிறது.
இதெல்லாம் சரி அப்படி என்ன பாபாஜி ஸ்பெஷல் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள என்ற கேள்விக்கு தான் இந்த கட்டுரை பதில். யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் பாபாஜிக்கு உண்டு.
பாலாஜிக்கும் பாபாஜிக்கும் ரொம்ப ரொம்ப நெருங்கிய சிநேகம். தினமும் இரவில் பாலாஜி யும் பாபாஜியும் பாபாஜியின் ஆஸ்ரமத்தில் அமர்ந்து சொக்கட்டான் விளையாடு வார்கள் என்றால் எவ்வளவு க்ளோஸ் நண்பர்கள்.
ஒருநாள் ஆட்டம் மும்முரமாக நடந்ததில் நேரம் ஓடிவிட்டது. பாலாஜிக்கு ''அடடே, பொழுது விடிந்து விடுமே, என்னைக் கோவிலில் தேடுவார்கள் நான் போக வேண்டும்'' என்று அவசரமாக ஆட்டத் தை பாதியில் முடித்துக் கொண்டு ஆலயத்துக்கு திரும்பியபோது அந்த அவசரத்தில் பாலாஜியின் கழுத்தில் இருந்த ஒரு விலையுயர்ந்த வைர நெக்லேஸ் பாபாஜி ஆஸ்ரமத்தில் விழுந்து விட்டதை கவனிக்க வில்லை. ஒருவேளை வேண்டுமென்றே கூட பாலாஜி ஒரு நாடகமாடி இருக்கலாம்.
விடிகாலை சுப்ரபாத வழிபாடு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க பட்டாச்சார் யர்கள் ஆலய வாசல் கதவுகளை திறந்தனர். பாலாஜியின் கழுத்தில் இருந்த நெக்லஸ் காணோம் என்பதை ஒருவர் கவனித்து சத்தம் போட்டார். எல்லோரும் எல்லா இடத்திலும் தேடி னார்கள். எங்கும் கிடைக்க வில்லை.
இதற்கிடையில் பாபாஜி குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்ப தயாராகும்போது பாலாஜி யோடு சொக்கட்டான் விளையா டிக் கொண்டி ருந்த இடத்தில் பாலாஜி யின் நெக்லெஸ் கிடப்பதைப் பார்த்தார்
''பாலாஜி ஏன் இங்கே இதை விட்டு விட்டு போய் விட்டார். அவர் கவனிக்கவில் லையோ? நாம் கொண்டு போய் கொடுப்போம் ''என்று அதை எடுத்துக் கொண்டு ஆலயத்துக்கு வந்தார்.
அதற்குள் கோவிலில் ஏகப்பட்ட ரகளை. விசாரணை. எப்படி முதல் நாள் இரவு ஆலயம் கதவு சார்த்தும்போது பார்த்த நெக்லஸ் மறுநாள் காலை காணாமல் போகும்? விஷயம் ராஜாவின் காதுக்கு எட்டி விட்டது. யார் திருடியது ? உடனே கண்டுபிடியுங்கள் என்று உத்தரவிட் டான்.. அந்த நேரம் பார்த்து கையில் நெக்லஸுடன் ஆலய வாசலில் நுழைந்த பாபாஜியை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து ராஜாவின் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
''எப்படி பூட்டியிருந்த சந்நிதிக்குள் இருந்து இதை திருடினாய் ?உண்மையைச்சொல்?'
''ராஜா, நான் திருடவில்லை. பாலாஜி தான் என்னோடு விளையாடும்போது இதை மறதியாக கழற்றி வைத்திருக்கிறார் போல் இருக்கிறது. அல்லது அவருக்கே தெரியாமல் இது கழன்று விழுந்திருக்கலாம், அவசரமாக சென்றபோது இதை எடுத்துச் செல்லாததால், நான் இதைப் பார்த்ததும் உடனே எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்க வந்தேன்.''
ராஜா துளியும் பாபாஜியின் பேச்சை நம்ப வில்லை.
என்னடா புருடா இது? வெங்கடேசன் தினமும் இந்த மனிதனுடைய ஆஸ்ரமத்துக்கு வந்து அவரோடு சொக்கட்டான் ஆடுவதாவது, நெக்லஸை கழற்றி வைத்தது, அதை இந்த ஆசாமி பார்த்து நல்லவனாக உடனே அதை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தது
.ஒன்றுமே . நம்பும்படியாகவே இல்லையே கை தேர்ந்த திருடன் இவன். சரியான தண்டனை கொடுக்கவேண்டும்.
உண்மையை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?
''நான் சொல்வது உண்மை தான் மகாராஜா, பாலாஜி என் ஆப்த நண்பன். ''
இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்வாய். உனக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். இதில் நீ தவறினால் மரணம் உனக்கு தண்டனை. உன் நண்பனாக இருந்தால் பாலாஜி உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றட்டும்.''
''மந்திரி, இந்தத் திருடனை பாதாள சிறையில் அடையுங்கள், அவன் உண்மை சொல்லும்வரை அங்கே இருக்கட்டும். அவனுக்கு உண்ண ஆயிரம் கரும்புகளை வண்டியில் ஏற்றி
அனுப்புங்கள். அவன் அவை அத்தனையும் நாளைக் காலைக் குள் ஒன்றுவிடாமல் தின்ன வேண்டும். இல்லையென்றால் கழுவேற்றுங் கள்''
காவலர்கள் பாபாஜியை இழுத்துக் கொண்டு பாதாள சிறையில் அடைத்த னர். அவர் எதிரே ஒரு வண்டி நிறைய ஆயிரம் கரும்புகள். பொங்கல் சமயத்தில் ஒரு சிறு துண்டுக்கு மேல் தின்றாலே நமக்கு திகட்டும். ஆயிரம் கரும்புகள் எப்படி ஒரு இரவில் அவரால் கடித்துத் தின்ன முடியும்? அதுவும் காலை சூரியன் உதயமாவதற்குள்?''
பாபாஜி கவலையே படவில்லை
''வேங்கடேசா , என்னை இந்த இக்கட்டில் ஏன் கொண்டு வைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறாய்? சொக்கட்டான் விளையாடியது போக என் உயிரோடு ஒரு விளையாட்டு உனக்கு விளையாட ஆசையா? அப்படியென் றால் உன் சித்தப்படியே ஆகட்டும். உன் திருப்திதான் எனக்கு முக்கியம்.''
சற்று நேரத்தில் அந்த சிறிய பாதாள அறையில் ஒரு பிளிறல் சப்தம். மிகப்பெரிய காட்டு யானை ஒன்று எப்படி அந்த சிறிய அறைக்குள் பசியோடு வந்தது ? எதிரே இருந்த வண்டியில் அதற்கு பிடித்த கரும்புகள் கட்டு கட்டாக இருப்பதைக் கண்டு ஆனந்தமாக அத்தனை யும் கபளீகரம் பண்ணிவிட்டது. பாபாஜிக்கு தெரிந்து விட்டது. யானை வேறு யாருமில்லை, தனது நண்பன் பாலாஜி தான் என்று'' பாசத்தோடு நேசத்தோடு அந்த யானையை, அது கரும்பு தின்னும் அழகை ரசித்துக் கொண்டி ருந்ததில் பொழுது விடிந்ததை கவனிக்கவில்லை. ''ராம் ராம் '' என்று எப்போதும் போல் கண்மூடி ஆனந்தமாக நாமத்யானம் செயது கொண்டிருந்தார்.
காவலாளிகள் வந்தனர். பாதாள சிறை வாசலில் இருந்த கரும்பு வண்டி காலியாகி விட்டதே. அதில் இருந்த அத்தனை கரும்புக ளும் எங்கே? பயந்து நடுங்கிய காவலர்கள் உள்ளே சிறைக் குள் ஒரு பெரிய யானை நின்று கொண்டி ருந்ததையும் அதன் அருகே சில கரும்பு சக்கைகளையும் பார்த்து திகைத்தனர். யானையின் எதிரே அமர்ந்து ராம் ராம் என்று துளியும் கவலையே இல்லாமல் வழக்கம் போல் தியானம் செய்து கொண்டிருந்தார்.
காவலர்கள் ஒரே ஓட்டமாக ராஜாவி டம் சென்று விஷயம் சொன்னார்கள். எப்படி அந்த சின்ன அறைக்குள் பெரிய யானை புகுந்தது.?
ராஜாவும் பாலாஜி பக்தன் அல்லவா? பாபாஜி சொல்வது உண்மை என்பது விளங்கிவிட்டது அவனுக்கு. ஓடிவந்தான். ராஜாவைப் பார்த்த யானை பிளிறியது. அந்த சிறிய அறைக் குள்ளிருந்து லாகவ மாக வெளியே வந்தது, மறைந்தது. ராம் ராம் என்று ஜபம் செயது கொண்டிருந்த பாபாஜி அதற்கப்பறம் ஹாதி ராம் பாபா ஆகி விட்டார். . ஹாதி என்றால் யானை என்று பொருள். ராஜா பாபாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
திருமலையிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் வேணுகோபால சுவாமி ஆலயம் அருகே ஹாதி ராம் பாபாஜியின் மடம் ஜீவ சமாதி இன்றும் இருக்கிறது. ராஜஸ்தானி யர்கள் வந்து தங்கும் சத்திரம், கல்யாண மண்டபம் இருக்கிறது. அதில் விசித்தி ரமான ரொம்ப அதிசயமான சாளிக்ரா மங்கள் இருக்கிறது. .
No comments:
Post a Comment