Sunday, June 5, 2022

YAKSHAPRASNAM

 யக்ஷ ப்ரஸ்னம்  நங்கநல்லூர்  J  K  SIVAN        


ரொம்ப புராதன கேள்வி பதில்           

 
மஹா  பாரதம் ஒரு ஈடிணையற்ற  இதை ஹாசம். எண்ணில்லாத  உப  கதைகள் அதில்  மனத்தைக் கொள்ளை கொள்பவை.   உயர்ந்த தத்துவங்களும்  அறிவுரைகள் நெறிமுறைகள் சொல்பவை. இப்போது படித்தாலும் புதியவை.   இன்றும்  உபயோகமானவை.   காலத்தால் அழியாதவை.  மஹாபாரதத்தில்  ஒரு சம்பவம்  சொல்கிறேன்.

பாண்டவர்கள் 12 வருஷம்  வனவாசம் சென்றனர்.  காட்டில்  எண்ணற்ற  துன்பங்களை  எதிர்கொண்டனர். ஒருநாள் ஒரு பிராமணனின்  அரணிக்  கட்டையை  கொம்பில் மாட்டி தூக்கி ஓடிச்சென்ற  மானைத் துரத்தும்போது அந்த  மாயமான்  அவர்களுக்கு  போக்கு காட்டிவிட்டு  மறைந்தது.  ஆடி ஓடி  அலைந்து களைத்து  ஆயாசம் மேலிட்டு  ஒரு  இடத்தில்  களைப்பாறினார்கள்.   தாகமும்  பசியும்  வாட்டியது.  

''சஹா தேவா,  நீ போய் ஒரு செம்பில் குடிக்க நீர் கொண்டு வா?  என்ற தருமபுத்ரர்  குடிக்க  நீர் கேட்க, ல்  சகாதேவன்  காட்டின் அலைந்து ஒரு  சிறு குளத்தைப் பார்த்தான்.  அதில் இறங்கி  இருகையாலும் நீர்  மொண்டு  குடிக்க முயன்றபோது  அங்கே இருந்த  நாரை தடுத்தது.

 "இது விஷம் கலந்த நீர். குடிக்காதே.  நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொன்னால்  அதை குடிநீராக மாற்றி தருகிறேன் '' என்றது.  

"முட்டாள்  நாரையே ,  நான்  இங்கே   தாகத்தால்  தவிக்கின்றபோது  வேலை கெட்டுப்போய்  உன்   கேள்விக்கு பதில் சொல்லும்  நிலையில்  நான் இல்லை" .  நாரை சொல் மீறி  சஹாதேவன்  நீர் குடித்தான்.  மயங்கி விழுந்தான். மாண்டான். 

 இப்படியே  அவனைத் தொடர்ந்த மற்ற சகோதரர்களும்   நாரையின் சொல்லை  மீறி நீர் குடித்து மாண்டனர். 

"எங்கே நீர் கொண்டுவர சென்ற  யாருமே  திரும்பி  வரவில்லையே   என்ன  ஆயிற்று? "  என  கவலையோடு  யுதிஷ்டிரர்  அவர்களைத் தேடி   அந்த விஷ நீர் நிரம்பிய  நச்சுப்பொய்கையை  அடைந்து அங்கு  அவர்களின்  சடலங்களை பார்த்தார்.  அதிர்ச்சி யுற்று, முதலில் சிறிது நீரைப் பருகிவிட்டு  விசாரிக்கலாம் என்று எண்ணினார்.    நாரை  அவரையும்  எச்சரித்தது.  

 "நாரையே,   நீ யாரோ தெரியவில்லை,  ஆனால்  நாரையில்லை என்று நிச்சயம் தெரிகிறது.  இருந்தாலும் உன் விருப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு பிறகு  தாகம் தீர்த்துக் கொள்கிறேன் என் சகோதரர்கள் உன் சொல் கேளாமல் மரணமடைந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.  எனினும் உன் கேள்விகளை சட்டென்று கேள்''  என்கிறார் தர்மபுத்திரர்.

நாரை உருவில்  இதுவரை  இருந்த  ஒரு யக்ஷன் தோன்றி   ''யுதிஷ்டரா , நான் இந்த பொய்கையின்  காவலன். இதோ என் கேள்விகளை கேட்கிறேன். பதில் சொல்.  யக்ஷன் அநேக கேள்விகள் கேட்க அத்தனைக்கும் சரியான  பாதையை தர்மன் சொல்ல  யக்ஷன் மகிழ்ந்தான்.

தர்மபுத்திரா,  என் கேள்விகளுக்கு  சரியான பதிலளித்தாய்.  அதற்காக  நான் உனக்கு ஒரு சலுகை கொடுக்கிறேன்.  இறந்து கிடைக்கும்  உன் நான்கு சகோதரர்களில் யாரேனும்  ஒருவனை நான் உயிர் பிழைக்க வைக்க முடியும்.  உனக்கு  யார்  வேண்டும்  சொல்?  என்றான்.
 "நகுலன் ".
"யுதிஷ்டிரா, என்ன  சொல்கிறாய் நீ? மாவீரர்கள்  அர்ஜுனன், பீமனை எல்லாம்  விட்டு விட்டு  நகுலனை ஏன்  மீட்கப்  பார்க்கிறாய்.?
"யக்ஷா,  என்  தந்தை  பாண்டுவிற்கு இரு மனைவியர்கள்.  ஒரு மனைவி குந்தியின்  புதல்வன்   யான் உயிரோடு  இருக்கிறேன்.  மற்ற மனைவி  மாத்ரியின்  மூத்த புதல்வன்  நகுலன்.  "தாய் தந்தைக்கு  ஈமக் கடன் செய்யவாவது ஒரு  புதல்வன் வேண்டாமா சொல்?"

 "யுதிஷ்டிரா , தர்ம புத்திரன்  என்ற  பேருக்கு  பொருத்தமானவன் நீ.  உன்னை சோதனை செய்து மகிழ்ந் தேன். நான் தான் தர்ம தேவதை.  உன்னுடைய  நான்கு  சகோதரர்களையுமே உயிர் பிழைக்க வைக்கிறேன்.   இது என் பரிசு உனக்கு "  என்றான் யக்ஷன்.

 இது தான்  சம்பவம்.  இது முக்யமல்ல.  யக்ஷன்   சட்டென கேட்ட கேள்வியும்  அதற்கு   உடனேயே தர்மன் பட்டென  சொன்ன பதிலும் தான்  ஆச்சர்யமானவை.
அடுத்த பதிவில் அவற்றை அறிவோம்  சில  கேள்விகளை  காலத்துக்கு  ஒவ்வாததென ஒதுக்கிவிட்டு  மற்றவற்றையெல்லாம்  சுருக்கி எனக்குத் தெரிந்த தமிழில் தந்திருக்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...