சந்தியாவந்தனம் - நங்கநல்லூர் J K SIVAN
இதன் முக்கியத்தவம் தெரியவேண்டுமானால், இதைதான் மற்ற எல்லா கர்மங்கள் பண்ணும்போதும், எல்லா பூஜா உபாசனைகளிலும் சொல்கிறோம். சகல மந்திரங்களுக்கும் ஆதாரமானது இது. அஸ்திவாரம்.
பூணல் போட்டு வைக்கும் நிகழ்ச்சிக்கு உபநயனம் என்று பெயர். அன்று தான் காயத்ரி மந்திரம் உபதேசத்துடன் ஸந்த்யா வந்தனம் பண்ணுவதும் துவங்கும். அன்று தான் அந்த பிராமணப் பையன் ப்ரம்மச்சாரியாகிறான். இரண்டாவது தடவை பிறக்கிறான். த்விஜன் என்றால் இரு பிறப்பாளன்.
ஒரு உதாரணம். முட்டை கோழியிடமிருந்து வெளிவருவது அதன் முதல் பிறப்பு. முட்டைக்குள்ளே அதன் உலகம் ரொம்ப சின்னது. அடைகாத்து முட்டையிலிருந்து வெளி வந்தபிறகு வெளிஉலகம் பெரியது. வேறுபட்டது. அதுபோலவே உபநயனம் ஆவதற்கு முன் அந்த மனிதனின் உலகம் குறுகியது. சாதாரணமானது. உபநயனம் ஆனபின் அவன் எல்லையற்ற ஆன்ம உலகம் அறிகிறான். அகக் கண் திறக்கிறது. 'உப' என்றால் பிரம்மத்துக்கு அருகாமையில் என்றும் 'நயனம்' அழைத்துக்கொண்டு போவது என்று அர்த்தம். குரு சிஷ்யனை பிரம்மத்தை அறிய வழி காட்டுகிறான். ப்ரம்மோபதேசம் என்றால் பூணல் தரித்தபின் முதலாவதாக காயத்ரி மந்திரம் அறிந்து கொள்வது. உபதேசம் பெறுவது.
ஹிந்து சமயத்தில் மூன்று குலத்தவர் பூணல் போட்டுக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள்.
அதிக பக்ஷம் எட்டு வயதுக்குள் பிராமண சிறுவர்களுக்கு உபநயனம் நடக்கும். க்ஷத்ரியர்கள் 12 வயதுக்குள், வைசியர்கள் 16 வயதுக்குள்ளும் பூணல் போட்டுக்கொள்வார்கள்.
பூணல் கல்யாணம் நிறைய சென்றிருக்கிறீர்களா? உபநயனத்தின் போது மேடையில் குடும்ப வைதிகர், வாத்தியார், அவர் தான் குரு. இப்போது தான் குருகுலவாசம் கிடையாதே. பள்ளிக்கூடத்தில் எந்த வாத்யார் குரு எனப்படுகிறார்?
பையனுக்கு ''வடு'' என்று பெயர். அவனை, அதாவது சிஷ்யனை, ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்க வைத்து ஆசீர்வதிப்பார். என்ன அர்த்தம்?
"இக் கல்லைப் போல் உறுதியான உடலும், நெஞ்சும் நீ பெற வேண்டும். நீ விரதங்கள் செய்யும்போது தடுப்பவர்களை, இடையூறு உண்டாக்குபவர்களை விரட்டி வெல்லவேண்டும். . நீ பிரமர்மத்தை நாடிச் செல்பவன். பிரம்மச்சாரி. சந்தியாவந்தனத்தையும், மற்ற நித்ய கடமைகளையும் விடாமல் பண்ணு . அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானத்தை தேடு''
சந்தியாவந்தனம் பண்ணும்போது ஐந்து பூர்வாங்கங்கள் உண்டு. அதில் 3 அங்கங்கள் ஆசமனம் (आचमनम्), பிராணாயாமம் (प्राणायामः) சங்கல்பம் (सङ्कल्पः), இதெல்லாம் தனித்தனியாக இல்லை. ஒட்டுமொத்தமாக ஐந்து பூர்வாங்கங்கள். ஐந்துக்கும் என்ன பெயர் தெரியுமா :
பிரதம மார்ஜனம். (प्रथममार्जनम्) முதலாவதாக சுத்தம் செய்துகொள்வது.
மந்த்ராசமனம் (मन्त्राचमनम्) வேத மந்த்ரங்கள் சொல்லிக்கொண்டு ஒரு சொட்டு நீர் பருகுவது.
புனர் மார்ஜனம் (पुनर्मार्जनम्) அல்லது த்விதீய மார்ஜனம். மறுபடியும் சுத்தம் செய்து கொள்வது.
பாப விமோசன மந்த்ரம் (पापवि मोचन मन्त्रम्, அகமர்ஷணம் [பாபங்களிலிருந்து விடுதலை.
அர்க்ய ப்ரதானம் (अर्घ्यप्रदानम्), இந்தாப்பா என்று சூரியனுக்கு ஜலத்தை அளித்தல் .
No comments:
Post a Comment