Friday, June 24, 2022

LIFE LESSON

 


நம் கடமை   -   நங்கநல்லூர்  J K   SIVAN 

வாழ்க்கையில்  நாம்  கற்றுக்கொள்ளாத  ஒரு பாடம்: ''எது ஸாஸ்வதம், எது அநித்யம்?''
பகவான் எனும் நம்முள் இருக்கும்  ஆத்மா தான் நித்தியமானது ஸாஸ்வதமானது. உலகில் தோன்றும் மற்றதெல்லாம்  மாறுவது அழிவது. இது புரிந்தால் புலன்கள் நம்மை இழுக்காது.
மனது அதனால் அமைதியுறும்.  
ஷட் ஸம்பத்  என்று வேத ஸாஸ்த்ரங்கள் கூறும் ஆறு செல்வங்கள் எது?.
சமம். எல்லாவற்றையும் ஒன்றாக அபேதமாக ஏற்பது.
புலனடக்கம்  இதை தமம்  என்பார்கள். 
புலனின்பத்திலிருந்து விடுபடுவது   உபரதி  என்கிறோம். 
பொறுமை அடக்கம்  தான் திதிக்ஷா என்பது.
பகவானிடம் பக்தி, வேத ஸாஸ்த்ரங்களில் நம்பிக்கை. குருவிடத்தில்  பெரியோரிடத்தில்,  ஆத்மாவிடம் சரணாகதி.  இதை  ஸ்ரத்தை என்கிறோம்.
மனதை ஒருமைப்படுத்தி ஒன்றின் மேல் செலுத்துவது  சமாதானம் 
வேத சாரமான  உபநிஷதங்கள் முடிவை  சிறு வாக்கியங்களாக அமைத்திருக்கிறார்கள் மஹா ரிஷிகள். அவை  மஹா வாக்கியம் எனப்படுபவை. அவற்றை மனப்பாடம் செய்து அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும். 
தியானம் செய்து  பழக்கத்தில் கொண்டுவரவேண்டும்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான் என்று அறிய அப்போது தான் முடியும்.
இதை ஆத்ம தியானம் என்கிறோம்.
எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது என்று  புரிபடும்.
பகவான் நாமத்தை தொடர்ந்து ஜபம் செய்ய வைக்கும். நாம்  இந்த தேகமல்ல, அதன் உள்ளே ஒளிரும் ஆத்மா என அறிவோம். ஸாத்வீக  உணவை மிதமாக உண்போம்.
அஹிம்சை, கருணை, அன்பு பெருகும்.
நாம் ஒரு அடி  பகவானை நோக்கி நடந்தால் அவன் பத்து அடிகள் நம்மை நோக்கி வருவான் என்று புரியும்.
காணும் யாவும் கண்ணனின் பல உருவம் என்று மனதுக்கு புலப்படும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...