Wednesday, June 22, 2022

SWAMI DESIKAN

 சுவாமி தேசிகன் -- நங்கநல்லூர்  J.K. SIVAN

அடைக்கலப்பத்து பாசுரங்கள் 4 & 5

காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
நாகமர னயன்முதலா நாகநக ரார்த்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே.. 4

ஸ்வாமி  தேசிகன்  இந்த பாசுரத்தில் அதி அற்புதமாக ஒரு விஷயம் சொல்கிறார் பாருங்கள்.

''அப்பா வரதராஜா, நான் உன் அடிமை.  நினது சரணாரவிந்தத்தில்  எனக்கு முக்தி அளிக்கிறாயா? என்று கேட்கிறார்.  சரணாகதி யை அற்புதமாக விவரிக்கும் ஸ்லோகங்கள். ஒருவேளை  உனக்கு கிடையாது என்று மறுத்துவிடக் கூடாது மறந்து போய்க் கூட  என்பதற்காக  பகவான் யார் யாருக்கெல்லாம் இதற்கு முன் இரக்கம் காட்டி அருள் புரிந்து சரணாகதி பெற்று மோக்ஷம் அருளியிருக்கிறார் என்று ஒரு சின்ன லிஸ்ட் போடுகிறார். 

வரதராஜா , சொல்கிறேன் கேட்டுக்கொள், நீ சம்சார போகம்  மோக்ஷம்  ரெண்டையும்  அருளி அதனால் முக்தி யடைந்தவர்களில் ஒருவன் காகாசுரன் சீதைக்கு துன்பம் விளைவித்து ராமபாணம் அவனைத் துரத்த எங்கெல்லாமோ ஓடி அலைந்து கடைசியில் ராமனிடம் அடைக்கலம் புகுந்தவன், சீதையை காலில் விழுந்து  சரணடைந்து உயிர் தப்பியவன், இன்னொருவன்  அண்ணன்   தப்புசெய்ததை  திருத்த முயன்று நாடிழந்து வீடிழந்து  ராமனையே சரணடைந்த  விபீஷணன், அடுத்தவள் எனக்கு இனி என்னைக் காத்துக்கொள்ள எந்த சக்தியும் உன்னையன்றி வேறு அல்ல என்று  சரணடைந்த திரௌபதி, இன்னொன்று  ஆதிமூலமே நீயே துணை என சரணடைந்த கஜேந்திரன்,  இன்னொரு உதாரணம்,   இனி நான் திருந்தியவன் என்று உயிர்ப்பிச்சை பெற்று யமுனையை விட்டு வெளியேறிய  காளிங்கன் எனும் சர்ப்பம் அப்புறம்  தவறான வாழ்க்கை வாழ்ந்து ஒரு ரிஷியால்  கோவிந்தா என்ற அக்ஷரத்தை அறிந்து அதையே உச்சரித்து  மோக்ஷமடைந்த க்ஷத்ர பந்து போல  எனக்கும் அருள் புரிவாய்  என்கிறார். சுவாமி தேசிகன்.

அடைக்களப்பத்து 5 
''உகக்கும் அவை உகந்து, உகவா அனைத்தும் ஒழிந்து, உறவு குணம்
மிக துணிவு பெற உணர்ந்து, வியன் காவலன் என வரித்து,
சகத்தில் ஒரு புகல் இல்லாத், தவம் அறியேன் மதிட்கச்சி,
நகர்க் கருணை நாதனை, நல் அடைக்கலமாய் அடைந்தேனே ||5||

சுவாமி தேசினைன் பாடல்களில் காஞ்சி  வரதராஜனைப் புகழ்வதை ரசித்து ருசிக்கலாம்.அர்த்த பாவத்தோடு ஆழ்ந்த பக்தி மணம்  வீசுபவை. அத்திகிரி என்று  அவனை  அழைக்கிறார். மதில் சூழ்ந்த  காஞ்சிநகர்  காவலன் என்று போற்றி  நாக மலை நாயக்கனார் என்று  நாமகரணம் சூட்டுகிறார். அவனது தாமரை மலர் தாள்களைச் சரணடைவது  மனநிறைவு தருவது பற்றி பாடுகிறார். 

நமது கடமை என்ன? கொள்ளவேண்டியவற்றைக் கற்றுக் கொண்டு தள்ள வேண்டியவற்றை தள்ளி அவன் 'பாதகமலங்களை' ப்பற்றி, நமது 'பாதக மலங்களை'  ப்போக்கிக் கொள்ளவேண்டும் அல்லவா? அவன் திருவடி சேரும் வழியில் எந்த தடை இருந்தாலும் அதை நீக்க அவன் அருளே பெறவேண்டும். விடா முயற்சி வேண்டும். ஜீவாத்மா பரமாத்மா தத்வம் புரியவேண்டும். பாமரன் பரமனை அடையவேண்டும். இதற்கு தளரா நம்பிக்கை, . மனோ தைர்யம், பூரண சரணாகதி அவனைவிட வேறெதுவுமே இல்லை என்ற விடாப்பிடி, பெருமிதம், நெஞ்சில் வேண்டும். கருணாசாகரன் கச்சி வரதன் கை விடமாட்டான்.
தொடரும்  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...