Saturday, June 4, 2022

RAMANA MAHARISHI

 ரமண மஹரிஷி   -  நங்கநல்லூர்  J K SIVAN

சூரி நாகம்மா 

   
 6  ' வன சமாராதனை ''

அப்பப்போ  பகவான் யாராவது ஒருவரை அனுப்பி அற்புதமான ஞானிகளை  மஹான்களைப் பற்றி யெல்லாம்  பிற்காலத்தில்  நமக்கு அறிவிக்க  எழுதவோ  பேசவோ வைக்கிறான்.  மஹாபாரத்துக்கு ஒரு  சஞ்சயன், வேத வியாசர்,   ராமாயணத்துக்கு ஒரு கம்பன், வால்மீகி, மஹா பெரியவாளுக்கு ஒரு  ரா கணபதி,  ராமகிருஷ்ணருக்கு  ஒரு  M,  விவேகானந்தாவுக்கு  ஒரு சிஸ்டர்  நிவேதிதா அவதரித்தாள்.  ரமண  மகரிஷிக்கு  ஒரு பால் ப்ரண்டன், சூரி நாகம்மா.  இன்னும்  எத்தனையோர் பேர் இது போலதோன்றிக்
கொண்டே இருப்பார்கள்.
சூரி நாகம்மா  தெலுங்கில் கடகடவென்று  273  கடிதங்கள்எழுதினாள் அவள்  சகோதரன்  ஸ்ரீ  D S சாஸ்திரிக்கு. அதில்  ரமணர் வாழ்க்கையை  ஒலியும்  ஒளியும் படம்  போல கண்முன் காட்டுகிறாள். ரமணரை இதைவிட வேறு  புத்தகம் இப்படி  வெளிச்சம் போட்டு காட்டவில்லை என்று நினைக்கிறேன்.

ரமணாஸ்ரமம் ஒரு அமைதிப்பூங்கா.   அங்கே யார்  என்ன செய்யவேண்டும், கூடாது என்ற கண்டிப்பு, கட்டுப்பாடு கிடையாது.   பகவான் ரமணர்  சிலை எதிரே அமர்ந்து   அவரவர்  அமைதியாக  தியானம்  செய்ய வசதி நிறைய இருக்கிறது.  இயற்கையோடு ஒன்றி  சப்தமின்றி  ஆத்ம பரிசோதனையில் ஈடுபட  அற்புதமான இடம்.  வெளிநாட்டவர் உள்நாட்டினர் என்று பலர் நிரம்பி இருக்கிறார்கள்.  சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை  ஆங்காங்கே  பலர் கண்மூடி தன்னை மறந்து தியானம் செய்வதை இன்றும் காணலாம்.  வேத ஒலி மட்டுமே  கேட்கும்.

 न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः ।परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति ॥
na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ.pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti ..  
 ந கர்மணா  ந ப்ரஜயா தநேந த்யாகேநைகே அம்ருʼதத்வமாநஶு: ।பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே யத்யதயோ விஶந்தி ॥

எந்த காரியத்தாலோ,  எந்த வம்ச பரம்பரையாலோ, எவ்வளவு செல்வத்தாலோ கிட்டுவதல்ல.  அல்ல, தியாகம் ஒன்றினாலேயே  கிட்டுவது தான்  அமரத்துவம்.   ஸ்வர்கத்திலும் மேலான  இந்த  அமரத்துவம் தன்னை வெல்பவன் மட்டுமே பெறமுடியும்.

இப்படி தன்னை உயர்த்திக் கொண்டவர்  சூரி நாகம்மா.பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாமல், தெலுங்கு தாயமொழி மட்டுமே தெரியும். 

ஒருநாள்  வழக்கம்போல்  அதிகாலை  ஆஸ்ரமத்தில்  வேதபாராயணம்.   எல்லோரும் அங்குமிங்கும் வேகமாக   ஏதேதோ காரியங்கள்  செய்கிறார்கள்.  சமையல் செய்பவர்கள், தண்ணீர் நிரப்புபவர்கள் , பாத்திரங்கள் தேய்ப்பவர்கள், இடத்தை எல்லாம் பெருக்கி மெழுகி துடைத்துக்கொண்டு சிலர்.  ,இதைச் செய், அதைச் செய் என்று  கட்டளைகள் இட்டவாறு சிலர். 
புளியோதரை, தயிர் சாதம், பொங்கல், வடை, உருளை சிப்ஸ்,  ஊறுகாய், பூரி, கூட்டு என்று என்னென்னவோகமகம என்று மணத்துக்கொண்டு   கூடைகள்  நிரம்பியது. இவ்வளவு செய்ய  முதல் நாள் ராத்திரியே தூங்கவில்லை போலிருக்கிறது.   எல்லாம்  அருணாசல  கிரி  வன சமாராதனைக்கு

வேத பாராயணம் முடிந்து  மஹரிஷி  ஸ்கந்தாஸ்ரமம் கிளம்பிவிட்டார்.  ரங்கசாமி  நந்தி மாதிரி அவர் பின்னாலேயே இருப்பான்.  வீட்டுக்கு நாம் செல்வது போல்  அனாயாசமாக பகவான் ரமணர்  மலையேறி   ஸ்கந்தாஸ்ரமம் சென்றார்.  பக்தர்கள் பின் தொடர்ந்தார்கள்.  
பகவானின் சகோதரி  அலமேலு  சூரி நாகம்மாவோடு நடந்தாள்.  மரத்தடியில் பகவான் அமர்ந்தார். அந்த இடம்  மரங்கள் சூழ்ந்து பத்திரிகாச்ரமம் மாதிரி  மஹரிஷியோடு  காட்சி அளித்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...