அறுபத்து மூவர் - நங்கநல்லூர் J K SIVAN
சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கும் திருவாரூருக்கு ரொம்ப சம்பந்தம் உண்டு. நம்பி ஆரூரன் என்று அவருக்கு பெயர்.
ஒரு நாள் திருவாரூரில் தியாகேசன் தரிசனம் செய்ய சுந்தரர் வந்தார். அவரால் சிவனைப் பார்க்காமல் இருக்கவே முடியாதே.
தேவாசிரியன் மண்டபத்தில் அன்று பெரிய கும்பல். எங்கு பார்த்தாலும் வெண்ணீறணிந்த ருத்ராக்ஷம் தரித்த தலைகள். ஹரஹர மகாதேவா என்ற சப்தம். சுந்தரர் வேகமாக வந்தவர் அந்த கும்பலில் முண்டி அடித்துக் கொண்டு சிவதரிசனம் செய்ய முந்தினார்.
யார் இது இப்படி இடித்துக்கொண்டே ஓடுவது? என்று எல்லோரும் பார்க்க அதில் ஒருவருக்கு அதிக கோபம் வந்தது.
''யார் இது?''
''அவர் தான் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்'' சிவனின் தோழர்''என்று பதில் வந்தது.
'' இங்கே குழுமியிருக்கும் சிவனடியார்களை வணங்காமல், லக்ஷியம் செய்யாமல் சந்நிதிக்கு செல்வது எப்படி ஏற்க முடியும்?
''சுந்தரரும் வேண்டாம். அவன் தோழன் இந்த தியாகேசனும் வேண்டாம். நான் போகிறேன். இனி திருவாரூரில் கால் பதித்தாள் யாராக இருந்தாலும் காலை வெட்டுவேன்'' என்று கத்தினார்.
சுந்தரருக்கு விஷயம் தெரிந்ததும் ரொம்ப வருந்தினார். ஆஹா நான் அவசரப்பட்டு விட்டேனே சிவனே, உன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் என் கடமையை மறந்தேன். என்னை மன்னித்துவிடு என்று அப்போதே பாடினது தான் திருத்தொண்ட தொகை என்ற அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய சரித்திர பாடல். எல்லோருக்கும் நான் அடிமை ... தில்லை வாழ் அந்தணர்க்கும் ..... அடியார்க்கும் அடியேன் ... என்று பாடிய அற்புத பாடல். சிவபெருமானே அடியெடுத்து கொடுத்த விசேஷ பாடல்.
இதை ஆதாரமாக வைத்து தான் பிற்காலத்தில் சேக்கிழார் பெரிய புராணம் எழுதி நாம் சுகமாக ரசிக்கிறோம்.
திருத் தொண்டத் தொகைக்கு திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் அர்த்தம் சொன்னார். அவரிடம் இளமையிலேயே வேத ஆகமங்களைக் கேட்டறிந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர்கள் வரலாற்றை திருத்தொண்டர் திருவந்தாதியாக 72 சிவனடியார்களை பற்றி (தொகை யடியார் 9 பேர், +63 சிவனடியார்கள்)எழுதினார் . இதை தொடர்ந்து அநபாய சோழ சக்கரவர்த்தியின் மந்திரி அருண்மொழித் தேவர் என்ற சேக்கிழார் பெருமான் சோழ ராஜெயாவின் வேண்டுகோள் படி “திருத்தொண்டர் புராணம்” பாடி சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்கள் முன்பு சித்திரை மாதம் திருவாதிரை நாளில் அரங்கேற்றினார். நமக்கு பெரிய புராணம் இப்படி கிடைத்தது.
No comments:
Post a Comment