பேசும் தெய்வம் நங்கநல்லூர் J K SIVAN
விருந்தாளி பசு
நண்பர் வரகூரான் .. தட்டச்சு வரகூரான் என்று எண்ணற்ற மஹா பெரியவா சங்கதிகளை தினமும் முகநூலில் பகிர்கிறவர். கிழக்கு தாம்பரத்தில் வசிப்பவர். அற்புதமான மனிதர். அவர் சொன்ன மஹா பெரியவா சமாச்சாரம் ஒன்றை திரும்ப சொல்கிறேன்.
மஹா பெரியவா கும்பகோணத்தில் ஸ்ரீ மடத்தில் இருந்த சமயம்.
மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில் உண்டு..
ஒருநாள் ஆச்சர்யமாக ஏதோ ஒரு புது பசு ஏற்கனவே இருந்த கொடுத்து வைத்த மடத்துப் பசுக்களோடு தானும் வந்து சேர்ந்து கொண்டு இங்கிருந்த வைக்கோலை தின்று கொண்டிருந்தது. வயிறு ரொம்பி விட்டது. பிறகு தண்ணிர் குடித்துக் கொண்டிருந்தது.
அது யாருடைய மாடு? அதற்கு எப்படி அங்கே வர தோன்றியது ? இதற்கு பதில் நமக்கு தெரியாவிட்டாலும் மஹா பெரியவாளுக்கு தெரியுமே!
வெகுநேரம் ஆகியும் அந்த புது பசு மடத்தை விட்டு வெளியே நகரவில்லை. அதைப்பற்றி கவலை கொண்டு யாரும்பசுவைத் தேடிக்கொண்டு வரவில்லை. மடத்து சிப்பந்திகள் ஒரு புது பசு வந்திருக்கும் வந்த விஷயத்தை அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.
நாலைந்து நாட்கள் கடந்தன. இதனால் மடத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று யோசித்த நிர்வாகி,
“அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?” என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.
“என்ன சொல்றே நீ. வெளிமாடு எங்கிறதாலே அந்தப் பசு மாட்டை வெளியே துரத்தணும் என்றால் நம்ம மடத்திலுள்ள பல வெளி மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்!.
மடத்தில் எந்தக் காரியமும் செய்யாமல், தான் முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு பலர் உண்டு, உறங்க வந்தவர்கள் சிலர் என்பது எல்லோருக்கும் மட்டும் அல்ல, பெரியவாளுக்கும் நன்றாக தெரியும். ஆனால் கண்டுகொள்ளவில்லை.
“மாடு வாயில்லாப் பிராணி.அதனுடைய எஜமானன் யார் என்று தெரியல்லே. நம்ம மாட்டுக் கொட்டகை யிலேயே இருக்கட்டும். அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை.”
சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பசுமாடு சினைப்பட்டு கன்றும் ஈன்றது.
கார்வார் மறுபடியும் வந்து நின்றார் பெரியவாள் முன்.
“சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு…நல்ல ஜாதி மாடு…புஷ்டியான தீனி….வேளைக்கு நாலு சேர் கறக்கிறது…”
“அந்த மாட்டுப் பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர் கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு.மாடு மடத்துக்குச் சொந்தமானது இல்லை. பால் மடத்துக்கு வேண்டாம்.”
இரண்டு நாட்கள் ஆயின.

“என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை?” என்று கார்வாரிடம் கேள்வி.
“தினந்தோறும் நாலு சேர் பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கொடுக்க ற்பாடு செய்துட்டேன்…” என்றார்.
“என்னிக்காவது அந்த மாட்டுப் பால் தவறுதலாக நமது மடத்து உபயோகத்துக்கு வந்துடலாம் இல்லையா? அதனாலே அந்த பசு மாட்டையும்,கன்றையும் ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு.”
அப்படியே செய்தார் கார்வார்.
ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து பசுமாடுகள் இருந்தன.நிர்வகிப்பது கஷ்டமாக இருந்தது.
பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக் கொண்டு வந்து விட்டார்.
ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக் கடைக்குத் தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.
செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள். பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப் பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.
பசுக்களிடம் எவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு! அப்படியென்றால் மனிஷாள் மேலும்

யென்றால் மனிஷால் மேல் எத்தனை அபிமானம் இருக்கும். அதிலும் பக்தி சிரத்தையாக இருப்பவர்களிடம் எத்தனை மடங்கு கூடுதலாக பெரியவாளுக்கு பிடிப்பு .இருக்கும்.....தாயன்பை அளவிட முடியுமா?
No comments:
Post a Comment