Wednesday, June 15, 2022

SHEERDI BABA

 #மனிதருள்_தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN

ஷீர்டி ஸாய்பாபா

பாபா உதயம்

இரு நூறு வருஷங்களுக்கு முன்பு நமது பாரத தேசம் இன்றைக்கு இருப்பது போல் இல்லை. ஐம்பத்தாறு தேச ராஜாக்கள் என்று கதைகளில் வருமே அது தான் உண்மை. குட்டி குட்டியாக நூற்றுக் கணக்கானவை. அதில் ஒன்று நிஜாம் ராஜ்யம் . அதில் ஒரு கிராமம் பத்ரி. அங்கு குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியின் பெயர் கங்கா பாவாத்யா , தேவகியம்மா. ஒரு குழந்தை பகவான் அருளால் இன்று , செப்டம்பர் 28, (ஆனால் வருஷம் 1835) ஒரு பிள்ளை பிறந்தான். குழந்தை பிறந்த சில நாளில் அப்பா துறவறம் பூண்டார் அம்மாவும் அப்பாவின் சக தர்மிணியாக கணவனோடு காட்டுக்கு சென்றாள்.

ஆகவே அந்த ஊரிலிருந்த சுபி பக்கீரிடம் sufi fakeer குழந்தை வளர்ந்தது. நாலு வருஷம் வளர்ந்தது. பக்கீர் காலமானார். இந்து முஸ்லீம் வேற்றுமைகள் அதிகம் பாராட்டப்பட்ட காலம் அது. பக்கீரின் மனைவி இந்த குழந்தையை வளர்ப்பதில் சிரமப்பட்டாள். அவனைச் சமாளிப்பதும் கஷ்டம். அடிக்கடி ஹிந்து கோவில்க ளுக்கு செல்வான். அங்கே போய் அல்லாவின் மேல் பாடுவான். ''நான் தான் அல்லா , அல்லாவே நம் எஜமான், உயர்ந்தவர்'' என்பான். ஹிந்து கோவில் அர்ச்சகர்கள் பக்தர்கள் சும்மா இருப்பார்களா? அடித்து விரட்டினார்கள். சிலர் ''பாவம், இந்த பையன் ஏதோ உளறுகிறான். திருத்துவோம் என்று முயற்சித்தார்கள். அது மட்டுமா? சில சமயம் அந்த பையன் நேராக மசூதிக்குள் செல்வான். ''ராமர் தான் கடவுள் என்ன சந்தேகம்? அல்லா வேறே யாருமில்லை, சிவபெருமான் தான் '' என்பான். இப்படி அவன் ஹிந்துக்கள் கோவிலுக்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிக்கும் சென்று இப்படி யெல்லாம் மாற்றி மாற்றி வித்யாசம் எதுவுமின்றி சொல்வது அவனைப் புதிரோடு பார்க்க வைத்தது. எல்லோரும் படையெடுத்து பக்கீரின் மனைவியிடம் அவனைப் பற்றி புகார் சொன்னால் அவள் என்ன செய்வாள்? யாருக்கு சாதககமாக பேசுவாள்? ஹிந்துக்களுக்கா, முஸ்லீம்களுக்கா? ஒருநாள்ளா இருநாளா? இந்த பிரச்னை தொடர்ந்தது. இந்த இக்கட்டிலிருந்து மீள அவளுக்கு வழி தெரியவில்லை.

ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு சற்று தூரத்தில் ஒரு முதியவர், ஞானி யின் ஆஸ்ரமம் இருந்தது. வெங்குசா என்று அவருக்கு பெயர். அவரிடம் சென்றாள். அவனைப் பற்றி சொன்னாள் பக்கீர் மனைவி. அந்த பையனைப் பார்த்ததுமே வெங்குசா ''இவனை என்னிடமே விட்டு விடு. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்கிறார் அவர். பையனைப் பிரிய மனமில்லாமல், அதே சமயம்,அவனை சமாளிக்க முடியாமல், வேறு வழியின்றி வெங்குசாவிடம் சென்றுவிட்டான் சிறுவன். பன்னிரண்டு வருஷங்கள் ஓடி விட்டது.

வெங்குஸாவுக்கு தெய்வீகமான அந்த பையனைப் பிடிக்காமல் போகுமா? அவனைப் புரிந்து கொண்டார் வெங்குசா. வெங்குசாவின் ஆஸ்ரமத்தில் இருந்த மற்றவர்களும் இந்த விநோதனை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

1851ல் ஒரு இரவு, என்ன தோன்றியதோ சிறுவன் வெங்குசா ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினான். நேராக சற்று தூரத்தில் இருந்த ஷீர்டி கிராமத்துக்கு நடந்தான்.

இனி அந்த பையன் உலகத்துக்கு ஷீர்டி பாபா என தெரியப் போகிறான். இரண்டு மாதம் அங்கே இருந்தான். பிறகு, ஒவ்வொரு இடமாக செல்லத் துவங்கினான். சில வருஷங்கள் இப்படியே ஓட ஒருநாள் தூப்கேடா என்ற கிராமத்துக்கு வந்தான். அந்த கிராமத்தில் அவன் நுழைந்த நேரம் சந்து படேல் என்பவரின் சகோதரனின் திருமணம் நடந்து கொண்டிருந்தது. கல்யாண கோஷ்டியில் சேர்ந்துவிட்டான் பையன். ஷீர்டிக்கு ஊர்வலம் வந்தது. அந்த இடத்தை விட்டு பாபா பிறகு எங்கும் நகரவில்லை. 1858லிருந்து 1918 வரை ஷீர்டியில் பாபா. அறுபது வருஷங்கள் .

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...