Saturday, June 4, 2022

SHEERDI SAI BABA

 மனிதருள் ஒரு தெய்வம் -  நங்கநல்லூர்  J  K SIVAN

ஷீர்டி  சாய்பாபா.

10  பொறுத்தார் பூமி ஆள்வார்.

ஆழ்வார்பேட்டையில், அபிராமபுரம் பக்கம்  வாரன்  தெருவில் ஒரு அமைதியான வீட்டில் ஒரு ஆன்மீக தம்பதியரை சந்தித்தேன். சுந்தரராமன் ஒரு  CA .  chartered அக்கௌன்டன்ட்.  அவர்  மனைவி  ஒரு விஞ்ஞானி பட்டம் பெற்றாலும் எளிமையான மாமி.  இருவரும் ஸாயீ பக்தர்கள். வீடே ஒரு குட்டி  ஷீர்டி-புட்டபர்த்தி  ஆலயம்.  வீடு முழுதும் ரெண்டு பாபாக்களின்  சக்தி மிக்க அருள் பார்வை அந்த ஸ்தலத்தில் உள்ள சகல பாபங்களையும் போக்கிக் கொண்டிருந்தது.  பார்க்குமிடமெங்கும்  பாபாவின் அபய  ஹஸ்தம். கருணை பார்வை.  என் மனம் கவர்ந்த   கிருஷ்ணன் வண்ண சிலையாக ''வா  சிவா  வா '' என்று  புன்னகைத்தான். பூஜை அறையில் பாபாவின் ஆசனம். அவரே அடிக்கடி அங்கு வந்து பிரசாதங்களை எடுத்துக் கொள்கிறார் என்று  அவர்கள் சொன்னபோது மயிர்க் கூச்செரிந்தது. பக்தி இருக்கும் இடம் தானே பகவானின் இருப்பிடம்.  ஷீர்டியிலிருந்து   ஒரு சிவராத்திரி அன்று  நேரடியாக 'பாபாவால்  அபூர்வமாக  கண் இமைக்கும் நேரத்தில் உருவாக்கப்பட்டு  அளிக்கப்பட் ட   ஸ்படிக லிங்கங்களைப்  பார்த்தேன். ஒன்றில் பாபாவின் உருவம் கூட லேசாக தெரிகிறது.  ஷீர்டி பாபாவின் பாத, பாதுகா தர்சனம் எங்கும்..

இந்த  ஆச்சர்யமான அபூர்வ  ஆன்மீக தம்பதியர்  இருவரும்  போட்டி  போட்டுக்கொண்டு எத்தனையோ பள்ளிகளில்,  பால விகாஸ் நிறுவனங்களில் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் போதிக்கிறார்கள். ஸ்ரீ கிருணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் நிறுவனமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு  ஏதாவது சேவை புரியும்.
இது தான் ஸத்ஸங்கம்.  கிட்டத்தட்ட  ஒரு மணி நேரம் அவர்களது   பாபா  லீலா விபூதி அனுபவங்களை ஆர்வத்தோடு கேட்டு அவர் அளித்த ஒரு அருமையான புத்தகத்தோடு  '' ஸ்ரீ ஷீர்டி  ஸாயி ஸஹஸ்ரநாம விரிவுரை'' யோடு  திரும்பினேன். அறுநூறு பக்கங்கள் கொண்ட  அரைக் கிலோவுக்கு மேல்  எடை கொண்ட   அருமையான பதிப்பில் வெளிவந்த அந்த புத்தகத்தின் விலையை தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.   ஆமாம்.  அந்த புத்தகத்தின் விலை '' நான்கு பைஸா .: 1. பக்தி.  2. ஸ்ரத்தை 3. பொறுமை 4. விடாமுயற்சி''   இந்த பைசாக்கள் நம்மில் அநேகரிடம் இல்லையே!  என்பது தான் வருத்தமான விஷயம்.

++, 

 ஸாய்  சத் சரித்ரம்  எழுதிய  தபோல்கர் 1916ல் அரசாங்க உத்யோகத்தில் ஒய்வு பெற்று கிடைத்த பென்ஷன்  குடும்ப செலவுக்கு போதவில்லை.  ஒரு குரு பூர்ணிமா அன்று ஷீர்டிக்கு  சில பக்தர்களோடு  சென்றார். அன்னா சிஞ்சலிகர் என்ற நண்பர்  பாபாவின் அருகே இவர்கள் கைகூப்பி  நிற்கும்போது மெதுவாக ஆரம்பிக்கிறார்.

''பாபா,  இதோ இருக்கிறாரே  ரகுநாத்  தபோல்கர், அவர்  மீது  தங்களது  அருள்பார்வை செலுத்த வேண்டு கிறேன்.  அவர் குடும்பம் பெரியது. அவரது பென்ஷன் வருமானம் போதாது. அவருக்கு ஏதாவது ஒரு வருவாய்  தரும் உத்யோகம் கிடைக்க அருளவேண்டும்''  .  சிஞ்சலிகர் வேண்டுகோளை செவிமடுத்த பாபா தபோல்கரை நோக்கி
' ஹேமாத், உனக்கு வேறு வேலை கிடைக்கப்போகிறது.  அதற்குள் நீ எனக்கு சேவை செய், என்னோடு  சந்தோஷமாக இருப்பாய். உனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும். பக்தி உணர்வற்ற தீயோர்,  நாத்திகர் நட்பு வேண்டாம். என்னோடு இரு.  மனதாலும் செயலாலும் நிதானம், அமைதி,  பொறுமை வேண்டும். என்னை வழிபடு. நிரந்தர ஆனந்தம் கிட்டும்'' என்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...