Tuesday, June 14, 2022

SANDHYA VANDHANAM

 சந்தியாவந்தனம் -    நங்கநல்லூர்   J K  SIVAN 


சந்தஸ்..

ஸந்த்யாவந்தனத்துக்கு  உயிர்நாடி மூன்று.   'அர்க்கியப் பிரதானம்',  'பிராணாயாமம்','காயத்ரீ ஜபம்'.
இதைத் தவிர  மார்ஜனம்,  பிராசனம்,  உபஸ்தானம்  என்பவை முக்கிய அங்கங்கள்.

 அர்க்கியப்  பிரதானம்  பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
 சூரியனை   நாள்தோறும்  சில  ராக்ஷஸர்கள்  எதிர்ப்பவர்கள். சூரியனை  வணங்கி நாம்  சந்தியாவந்தனம் செய்வதால்  நாம்  காயத்ரீ ஜபம் செய்து  விடும்  அர்க்கியம் ஒரு   வஜ்ராயுதம்  போல் பலம் நிறைந்து சூரியனை எதிர்க்கும் ராக்ஷஸர்களை  முறியடிக்கிறது.
ராக்ஷசர்கள்  என்பது உருவகம்.   நமது அஞ்ஞானம்  தான் ராக்ஷஸன். ஞானம் தான் சூரியன்.   யுத்தம் நடக்கும் இடம் தான் நமது மனம்.  இந்த போரில் ஜெயிக்க வைக்கும்   பிரம்மாஸ்திரம் தான் காயத்ரீ மந்திரம்.  ராக்ஷஸன் திரும்ப  திரும்ப  வருபவன்.  யுத்தம்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.  ஆகவே தான் நாள் தோறும்  மூன்று வேளை  ஸந்த்யாவந்தனம்.

மந்திரங்களின்  அர்த்தம்  அறிந்து,  உணர்ந்து,  நம்பிக்கை,பக்தியோடு உபாசித்தால்  தான் கை மேல் பலன் தரும். நெருப்பின்றி விறகு  தானாக  ரியுமா?  ஞானமின்றி கர்மம் பலன் தராது.  இதை மனதில் கவனம் வைத்து  சந்தியாவந்தன மந்திரங்களின் அர்த்தத்தை வீட்டில்  சிறுவர்களுக்கு உபநயன காலத்தில் இருந்தேசொல்லித்தரவேண்டும்.

ப்ரம்ம ஸ்வரூபியான பராசக்தியை இருதய ஆகாசத்திலும்,  அகண்ட பேராகாசத்திலும்,   நாள் தோறும்  தவறாமல் உதித்து அஸ்தமிக்கும் சூரியனிடத்திலும் வந்தனம்  செய்வது  தான் சந்தியா வந்தனம். சந்தியாவந்தனம் செய்யாதவன் எந்த கருமத்திற்கும்  தகுதியில்லாதவன். செய்தாலும் பலனில்லை. பிறப்பு இறப்புத் தீட்டு காலங்களிலும் பிராணாயாமம் இன்றி மனத்தால்  மந்திரங்களை உச்சரித்து சந்தியா வந்தனத்தை விட்டு விடாமல் செய்ய  வேண்டும்.

காயத்ரீம் ச்சந்தசாம் மாதா இதம் ப்பிரம்ஹா ஜுஷச்வ ந: ||

காயத்ரீ  சர்வ சக்தி வாய்ந்த  பரிசுத்த வேதமாதா, நம்முடைய இந்த  மந்திர வடிவான ஸ்தோத்ரத்தை ஏற்று அனுகிரஹிக்கவேண்டும்  என்ற பிரார்த்தனை. 

சந்தஸ் என்று மேலே சொன்னேனே. அது என்ன?
மந்த்ர சப்தத்தை எப்படி ஒழிக்கவேண்டும் என்ற அளவு.  வேத மந்திரங்களில் எத்தனை அடிகள், அதாவது பதங்கள், அக்ஷரங்கள் எனும் எழுத்துக்கள் இருக்கவேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது.   அதை நிர்ணயிப்பது தான் சந்தஸ் என்பது.  மந்த்ரங்கள் உச்சரிப்பில் வேறுபடுபவை.  அதற்கேற்ப அமைவது சந்தஸ்.
ஏழு சந்தஸ்கள்  நமக்கு பரிச்சயமானவை.
காயத்ரி சந்தஸ்: 3 அடிகள்.  ஒரு அடிக்கு  8 எழுத்து . மொத்தம் 24  அக்ஷரங்கள்  கொண்ட மந்த்ரம்.ண்டது.
ஊஷ்ணிக் சந்தஸ் :  4  அடிகள், ஓர் அடிக்கு 7 எழுத்து.  மொத்தம் 28  அக்ஷரங்கள். .
அனுஷ்டுப் சந்தஸ் : 4 அடிகள், ஒர் அடிக்கு  8 எழுத்து; மொத்தம் 32  அக்ஷரங்கள் கண்ட மந்த்ரம். 
ப்ருஹதி சந்தஸ் :   4 அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, 8,12, 8 எழுத்து.  மொத்தம் 36 அக்ஷரங்கள்.
பங்க்தி சந்தஸ் :   4 -  5  அடிகள்; மொத்தம் 40 அக்ஷரங்கள்..
திருஷ்டுப் சந்தஸ் :  4 அடிகள்  ஓர் அடிக்கு 11 எழுத்து.மொத்தம் 44 அக்ஷரங்கள்..
ஜகதி சந்தஸ் :  4 அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்து.மொத்தம் 48 அக்ஷரங்கள்.
தலை சுற்றுகிறதா.  வேண்டாம் இதற்கு மேல் உள்ளே போகவேண்டாம்.  காயத்ரி மா, மன்னித்தருள்வாய்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...