தக்ஷிணாமூர்த்தி -- நங்கநல்லூர் J K SIVAN
சனகாதி முனிவர்களுக்கு ஞானம் வழங்கி மேதா தக்ஷிணாமூர்த்தி என்று பேர். விஷயங்கள் ஏதோ கொஞ்சம் தெரிந்தாலே ஒருவனை மேதாவி என்கிறோம். சர்வமும் அறிந்த சிவனை மேதா தக்ஷிணா முர்த்தி என்பதில் என்ன ஆச்சர்யம். உபநிஷதுகளின் குரு. ரிஷிகளுக்கே பிரம்மத்தை உபதேசித்த ஞானி. ஹிந்து சனாதன தர்மத்தின் உன்னத சக்தி தெய்வம். சர்வமும் சகலமும் தானே ஆன அநாதி நாயகன். சம்ஹார மூர்த்தி. சிருஷ்டி ஸ்திதி லய மும்மூர்த்திகளில் ஒருவர்.
ராஜா மனு தனது செல்வத்தை புதல்வர்களுக்கு பிரித்து கொடுக்கிறான். நாபானெதீஸ்தன் எனும் கடைசிப் பிள்ளைக்கு எதுவும் கிடைக்கவில்லை. நீ ஆங்கிரஸ் நடத்தும், யாகத்துக்குப் போ, ரௌத்ர ப்ரம்மன் மந்திரங்களை ஜெபிக்கும்போது நீயும் சொல். தக்ஷிணையாக அவர்களது ஆயிரம் பசுக்களை பெற்றுக்கொள்.
சுலபத்தில் கூப்பிட, அழைக்கமுடியாத, பெயர் கொண்ட அந்தப்பிள்ளை அவ்வாறே ஆயிரம் பசுக்களை தானமாக பெறுகிறான். அப்போது வடக்கே இருந்து கருப்பு நிற ஆடைகளோடு ஆஜானுபாகுவாக ஒருவன் தடுக்கிறான்.
' நில், எங்கே போகிறாய் இவற்றோடு? இவை என்னுடைய பசுக்கள். நீ எப்படி இவற்றை சொந்தம் கொண்டாடலாம்'' என்கிறான்.
ஆங்கிரஸுக்கு அப்பசுக்கள் சொந்தம் இல்லை என்று அறிந்த மனுவின் பிள்ளை அந்த பசுக்களை ''ஐயா நீங்களே உங்கள் பசுக்களை எடுத்துக் கொள்ளுங்கள் ''என்கிறான்.
அந்த கருப்பு ஆடை ஆசாமி தான் யார் என்று உணர்த்துகிறான். அவன் ஓதிய மந்திரத்தால் அல்லவோ அந்த பிள்ளை ஆயிரம் பசுக்களை பெற்றான். இந்த பிள்ளையே அந்த மந்திரங்களுக்கு சொந்தக்காரன்.
ரௌத்ர பிரம்மன் தான் எதிரே நின்ற அந்த ஆஜானுபாஹு கருப்பு ஆடை ஆசாமி என்று மனுவின் பிள்ளை அறிந்து வணங்குகிறான்.
''உன்னை சோதிக்கவே வந்தேன், உன் நேர்மை எனக்கு பிடித்தது. இந்த ஆயிரம் பசுக்களும் உனதே'' என்று ரௌத்ர பிரம்மன் ஆசிர்வதிக்கிறான். மந்திரங்களை சரியாக ஓதியதற்கு ''தக்ஷிணை'' தந்ததால் ரௌத்ரன் தக்ஷிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டவர். வேதமந்த்ரங்களை உச்சரிப்பவர்களுக்கு தக்ஷிணை கொடுக்கும் பழக்கம் இந்த சம்பவத்திற்கு பிறகு வழக்கமாகியது. இன்றும் உள்ளது.
தக்ஷிணம் என்றால் தெற்கு திசை. அதை நோக்கி அமர்ந்ததால் தக்ஷிணாமூர்த்தி என்று நாம் அறிந்தாலும் இந்த தக்ஷிணை விஷயம் புதிதல்ல புராணங்களில் உண்டு. நாம் படிக்காததால் நமக்கு தெரியவில்லை.
''தக்ஷ் என்றால் வலிமை. சக்திவாய்ந்த அசுர ராஜா அதனால் ' தக்ஷன்' எனப்பட்டான். சிவனை எதிர்த்தான். சிவனால் வதம் செய்யப்பட்டான்.
No comments:
Post a Comment