Sunday, June 5, 2022

RIGVEDHA THARPANAM

 அமாவாஸ்யா தர்ப்பணம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


ருக்வேதிகள்

வாத்யார்  வழக்கமான   குளத்தங்கரை   பிள்ளையார்  கோவில் மண்டபத்தில்  உட்கார்வதற்கு முன்  எதிரே  அமர்ந்திருக்கும்  ருக்வேதி  கிரஹஸ்தர்கள், ப்ரம்மச்சாரிகளை பார்க்கிறார்  மொட்டு  மொட்டாக  பஞ்சகச்சத்தோடு, தொந்தி தொப்பையோடு,   சொம்பு , தாம்பாளம், பஞ்சபாத்ர உத்ரணியோடு   பலகைகளில்  உட்கார்ந்து கொண்டு வாத்யார்  கட்டளைக்கு காத்திருக்கிறார்கள்.

ஆசமனம் பண்ணுங்கோ:   ஆசமனம்; செய்யும் போது கையில் பவித்ரம் இருக்க கூடாது.

1. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொடுங்கொ. 
 தலைலே  கொட்டிக்குங்கோ:  5 தடவை. 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. 

இடது கைய  வலது தொடை மேல் வச்சு வலது கையால் மூடிண்டு சொல்லுங்கோ: 
ஓம் பூ+ பூர்புவஸுவரோம். மமோபாத்த +ப்ரீத்தியர்த்தம் சங்கல்பம் செய்த பிறகு , 
பூணலை இடம் போட்டுக்கோங்கொ.

அப்பா வர்கத்திற்கும் அம்மா வர்கத்திற்கும் தனி தனி யாக கூர்ச்சம் போடுபவர்கள் கிழக்கில் தெற்கு நுனி யாக ஒரு கூர்ச்சமும் மேற்கில் தெற்கு நுனியாக ஒரு கூர்ச்சமும் போடவும்.  


கிழக்கில் உள்ளதில் அஸ்மின் கூர்ச்சே “ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி” என்றும் மேற்கிலுள்ளதில் அஸ்மின் கூர்ச்சே அஸ்மத் மாதாமஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி என்று தர்பங்களை போடவும்.

ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை  போடவும். 

"உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.   யாருக்கு இன்னிக்கு தர்ப்பணம் பண்றோமே அந்த பித்ருக்களை தர்ப்பையிலே  ஆவாஹனம் பண்ணியாச்சு.


ரிக் வேதத்தில் ஆஸநத்திற்கு மந்திரம் கிடையாது. இருந்தாலும் வழக்கத்தில் உள்ளது. ஆஸன மந்த்ரம்: 

கிழக்கில் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று கூர்ச்சத்தில் ஆஸனமாக தர்பங்களை போடவும்.

"ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயா மதந்து அதிப்ரூவந்து தே அவந்து , அஸ்மான்

மேற்கில் அஸ்மத் மாதா மஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்றும் தர்பங்களை போடவும்.;

ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம் என்று கூர்ச்சத்தில்  எள்ளை மறித்து போடவும்.

கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும். வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்''  அவாளுக்கு  ஆசனம் போட்டாச்சு.

பித்ரு வர்க்கம்;
இனிமே  அப்பா லிருந்து  ஆரம்பிச்சு தாத்தா, கொள்ளுத்தாத்தா வரை  கோத்ரம் பேர் சர்மா சொல்லி  தர்ப்பணம் பண்றோம். 
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி'' என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடுங்கோ..

.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் (அப்பா )ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை
.''..............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான்  (தாத்தா) ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
.............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான்(கொள்ளு தாத்தா) ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

ரிக் வேதத்தில் ஸ்த்ரீவர்க்கத்திற்கு தர்ப்பணம் கிடையாது. இருந்தாலும் செய்வது வழக்கமாக இருக்கிறது.
தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

............கோத்ரா:.............நாம்நீ  (அம்மா பேர் )  வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ (அப்பாவுடைய அம்மா,) ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
''..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ (அப்பாவுடைய பாட்டி)ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ (அப்பாவுடைய அம்மா) ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ (அப்பாவுடைய பாட்டி)  ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ (அப்பாவுடைய  கொள்ளு பாட்டி)ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

தாயார் பிறந்த கோத்ரம்.
..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான்( அம்மாவுடைய அப்பா) ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான்(அம்மாவுடைய  தாத்தா) ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் (அம்மாவுடைய  கொள்ளு தாத்தா)ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ (அம்மாவுடைய அம்மா)  ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ (அம்மாவுடைய  பாட்டி)ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ (அம்மாவுடைய கொள்ளு பாட்டி) ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

மஹாளய பக்‌ஷ தர்ப்பணம் செய்யும் போது கீழ் கண்ட மந்த்திரதையும் சேர்த்து செய்யவும்.

தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான்
ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.
ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.   விட்டுப்போன மீதி நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு.

பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்‌ஷிணமாஹ சுற்றி விடவும்.

ரிக் வேதத்தில் இல்லா விட்டாலும் பழக்கத்தில் உள்ளது. கீழுள்ள மந்த்ரம் சொல்லி ஒரு தடவை எள்ளும் ஜலமும் விட வேண்டும்.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத  

பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்‌ஷிண நமஸ்காரம் செய்யவும்.
இப்போ தான் பூணலை சரியாக  இடது  தோளிலிருந்து வலது பக்கமாக போட்டுக்கொள்ளவேண்டும். 

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்‌ஷிண பதே பதே.

இப்போ மறுபடியும் பூணல் இடம். பண்ணிக்க வேண்டும்.  (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.

உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான் வர்கத் த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.   மூன்று தலை முறை பித்ருக்களை திருப்தி படுத்தி விட்டு அவர்களை திருப்பி அவர்களிடத்துக்கு அனுப்புவது.

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்)

" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .

கீழுள்ளதைச் சொல்லி உபஸ்தானம் செய்வது விசேஷம். ஆனால் பெரும்பாலும் செய்வதில்லை.

ஓம் நமோவ: பிதரோ இஷே நமோ வ: பிதர ஊர்ஜே நமோ வ: பிதர: சுஷ்மாய நமோ வ: பிதரோ கோராய: நமோ வ:: பிதரோ ஜீவாய நமோ வ: பிதரோ ரஸாய ஸ்வதா வ : பிதர: நமோ வ: பிதர: நம: ஏதா யுஷ்மாகம் பிதர: இமா: அஸ்மாகம் ஜீவா வ: ஜீவந்த: இஹஸந்த: ஸ்யாம மனோ ந்வா ஹூவாமஹே நாராசம்ஸேன ஸ்தோமேன பித்ரூணம் ச மன்மபி: ஆ த ஏது மன; புன:

க்ரத்வே தக்‌ஷாய ஜீவஸே ஜ்யோச்ச ஸூர்யம் த்ருஸே புனர்ன: பிதரோ மனோ ததாது தை வ்யோஜன: ஜீவம்வ்ராதம் ஸசேமஹி.


மறுபடியும்  பூணலை சரியாக  இடது தோளிலிருந்து  வலது பக்கம்  செல்லும்போது போட்டிக்கொள்ளவும். 
அதைத்தான்  பூணல் வலம் பண்ணிக்கொள் என்று சொல்வார். 

தர்மஸாஸ்த்ரம்: தக்‌ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்‌ஷிணை, வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து  விடவும்.

 தக்ஷிணை கொடுக்கும்போது  சொல்லவேண்டிய  மந்த்ரம்: 

ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.  அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி  ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.

பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.

பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்‌ஷிண நமஸ்காரம் செய்யவும்.

நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.  அவரவர் குலாசார வழக்கப்படி செய்யவும்.

எல்லா வேதக்காரர்களும் ப்ரம்ம யஞம் தினமுமே  செய்யவேண்டும். அமாவாஸ்யா தர்ப்பணம் பண்ணிய  பிறகாவது செய்யவேண்டும்  அதை அடுத்த பதிவில் இடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...