Saturday, June 11, 2022

SANDHYAVANDHANAM.

 சந்தியாவந்தனம் பற்றி கொஞ்சம்....   நங்கநல்லூர்   J K  SIVAN 


ராமன் லக்ஷ்மணர்கள்  இருவருமே  சந்தியாவந்தனம் பண்ணினார்கள் என்று  ராமாயண பாலகாண்டம்  23.2. சொல்கிறது. டேய்  ராமா,  எழுந்திரடா,  கிழக்கே சூரியன்  உதிக்கப்போகிறான். சீக்கிரம்  எழுந்து சந்தியாவந்தனம் பண்ணு  என்று விஸ்வாமித்திரர் கூறுகிறார்.   மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் 82.21 ஸ்லோகம்  கிருஷ்ணன் சந்தியாவந்தனம் பண்ணினதை சொல்கிறது. ரெண்டு பேருமே  பிராமணர்கள் இல்லை. சூரியனை வணங்க ஜாதி முக்கியமில்லை.

ஸந்த்யாவந்தன  தேவதைகள் பெயர்கள்   ப்ராஹ்மி, ரௌத்ரீ , வைஷ்ணவி.  ரிஷி யின் பெயர் பிரணவ ரிஷி.
எல்லா மந்திரங்களுக்கும் சந்தஸ், தேவதை, ரிஷி உண்டு. 

ப்ராதஸ்  சந்தியா தேவதை  காயத்ரி (வெண்ணிறம்).  மாத்யான்ஹிகம் பண்ணும்போது தேவதை சாவித்ரி (சிவந்தவள்)  சாயம் சந்தியாவின் போது  அவள் ஸரஸ்வதி  (கருப்போ கருநீலமோ)  இதை தான் வேதத்தில்  ஸ்ம்ரிதி சொல்கிறது:  gāyatrī nāma purvāhne sāvatrī madhyame dine   sarasvatī ca sāyāhne saiva sandhyā trishu smṛtā'' 

நாம்  ஒவ்வொருவரும் ஒரு ரிஷியின் வம்சாவளி. அதை கோத்ரம் என்று சொல்வார்கள்.  உன் கோத்ரம் என்ன? நான் பாரத்வாஜ கோத்ரம், ஹரித கோத்ரம், கௌசிக கோத்ரம், கௌண்டின்ய கோத்ரம்  என்கிறோமே  அவர்கள் ரிஷிகள்.  ஒரே கோத்திரத்தில் பெண் பிள்ளைகளை கல்யாணம் செய்த்துக்கொள்வதில்லை, அதே கோத்ரம் என்றால்  ''ஸ கோத்ரம்'' .  சகோதர சகோதரிகள் என்ற வார்த்தை அதிலிருந்து வந்தது.   

காயத்ரி மந்திரத்துக்கு  24 அக்ஷரங்கள் .  தத் t (तत्), 2 ஸ  (स), வி  (वि), துர்  (तुर्),வ  (व), ரே  (रे),ணி  (णि),யம் (यं), பர்  (भर्), கோ  (गो), தே (दे),வ  (व),ஸ்ய  (स्य), தீ  (धी), ம  (म),ஹி  (हि),தி  (धि),யோ  (यो),யோ  (यो), ன  (नः), ப்ர  (प्र),சோ  (चो) தda (द) யாத்  (यात्).

பகல் பன்னிரண்டு மணி நேரத்தை  ஐந்து பாகங்களாக பிரித்திருக்கிறது.  ஒவ்வொரு பாகமும் 2மணி  24  நிமிஷம். அதற்கு நாழிகை என்று பெயர்.  அந்த ஐந்து பிரிவின் பெயர்  ப்ராத காலம் , பூர்வாஹன காலம், மத்தியானம், அபராஹனம் , சாயாஹனம்  சூர்யோதயத்திலிருந்து தான் நாழிகைகளை  கணக்கிட 
வேண்டும்.    கல்யாண பத்திரிகைகளில் ..'' முஹூர்த்தம்......  உதயாதி   நாழிகை...   முதல்...... வரை ... என்று பார்த்திருக்கிறீர்கள் அல்லவா.? 
ஆகவே  சந்தியா காலத்துக்கு  72 நிமிஷம் கால அளவு.

ப்ராதஸ் சந்தியா காலத்துக்கு  2 நாழிகை நேரம், சூர்யோதயத்துக்கு முன்னால் .
மத்தியானம்  உச்சி நேரத்துக்கு முன்னால்  ஒண்ணரை  நாழி உச்சிவேளைக்கு பின்னால்  ஒண்ணரை நாழி.
சாயம் சந்தியாகலாம்   சூர்ய அஸ்தமனத்துக்கு முன்னால்  ஒரு நாழி  பின்னால்  ரெண்டு நாழி.
உத்தேசமாக  காலை 6 மணிக்கு உதயம்  6மணிக்கு சாயந்திரம் அஸ்தமனம் என்று வைத்துக்கொள்கிறோம்.

இந்த கணக்கு பிரகாரம்  ப்ராதஸ்  ஸந்த்யாகாலம்  காலை  5.12மணிக்கு,  சாயம் ஸந்த்யாகாலம்  மாலை 5.36க்கு ஆரம்பம். மத்தியானம் 11.24 முதல்  12.36 வரை.

சந்தியாவந்தனம் காலையில்  கிழக்கு பார்த்து ,  மாத்யான்ஹிகம்  வடக்கு பார்த்து,  சாயம் ஸந்த்யா  மேற்கு பார்த்து செய்வது வழக்கம்.  ஆசமனம் பண்ணும் போது  மட்டும்  கிழக்கோ வடக்கோ பார்த்து பண்ணவேண்டும்.

யமனும்   அத்ரி மகரிஷியும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?   பிராமணன் ஒவ்வொருநாளும்  சந்தியாவந்தனம் பண்ணுபவம் மோக்ஷம் அடைகிறான்.  வேத ஸ்ம்ரிதி இதை  "yatsandhyāmupāsate brahmaiva tadupāsate" (ஸந்த்யா  உபாசனை பண்ணுபவன் பரப்ரஹம்மத்தை  உபாசிக்கிறான்).

சந்தியாவந்தனம் பண்ணுபவர்களுக்கு நமஸ்காரம். பண்ணாதவர்கள் பண்ண ஆரம்பிக்கலாம், குழந்தைகளையாவது பண்ண செய்யலாம்.  ரெண்டும் பண்ணாதவர்கள் இதெல்லாம் தெரிந்து கொள்ளவாவது செய்யலாம்.  இதெல்லாம்  தேவையே இல்லை என்று எண்ணுபவர்கள்  என்னை மன்னித்துவிட்டு வேறு ஏதாவது வழக்கம்போல்  செய்யலாம். தப்பே இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...