எல்லாம் மாயை தானா....
''உத்தவா, நான் பிருந்தாவனத்தை விட்டு வந்தபின் என் மனம் மீண்டும் மீண்டும் அங்கே செல்லவேண்டும் அந்த ஆனந்த வாழ்வை நான் மீண்டும் வாழவேண்டும் என்ற ஆர்வம் விருப்பம் எனக்கு இருந்தாலும் நான் இப்போது ஒரு ராஜ்யத்தின் அதிபதி, எனக்கு என்று நிறைய கடமைகள் என் முன்னே நிற்கிறது. நான் பழைய பிருந்தாவன கிருஷ்ணனாக இனி இருக்க முடியாது என்பது என்னால் உணர முடிகிறது.
நீ நேராக பிருந்தாவனம் செல். அங்கே எல்லோரையும் பார்த்து என் நிலைமையை எடுத்துச் சொல். கிருஷ்ணன் ஒருநாள் கண்டிப்பாக வருவான். அவன் உங்களை மறக்கவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்.
யசோதை நந்தகோபரிடம் அவர்கள் ஆசைமகன் கிருஷ்ணன் நன்றாக இருக்கிறான். அளவு கடந்தஅன்போடு உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறான். அவனது ராஜ்யபாரம் அவனை அழுத்தி அங்கே இங்கே அசைய முடியாமல் இறுத்தி வைத்திருக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று சொன்னேன் என்று புரியவை.
ராதையை சந்தித்து இதையே அவளிடமும் சொல். கிருஷ்ணன் ஒரு வினாடியும் உன்னை மறக்கவில்லை என்று சொன்னேன் என்று சொல்.
''உத்தவா, இதற்கு நான் உன்னை தேர்ந்தெடுத்த காரணம், நீ அசப்பில் என்னைப்போலவே இருப்பவன், என்னை நன்றாக அறிந்தவன். அழகாக விளக்கத் தெரிந்தவன்''
கிருஷ்ணன் உத்தவனை பிருந்தாவனம் அனுப்பினான்.
உத்தவன் பிருந்தாவனத்தை அடைந்தவுடன், கோப கோபியர்களை அழைத்தான். முதலில் அவன் தேரைக் கண்டதும் '' கிருஷ்ணன் வந்துவிட்டான்'' என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்த வ்ரஜ பூமி மக்கள், பசுக்கள் அனைத்து ஜீவராசிகளும் தேரிலிருந்து இறங்கியது கிருஷ்ணன் அல்ல, அவனைப் போலவே உருவம் கொண்ட வேறொருவன் என்று அறிந்து ஏமாற்றம் அடைந்தார்கள். வெகு விரைவில் உத்தவன் நிலைமையை புரிந்துகொண்டான்.
கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு சென்றதுமே, சூரியன் ஒரேயடியாக பிருதாவானத்தில் அஸ்தமித்து போனது போல் ஆகிவிட்டது. கிருஷ்ணன் இருந்தபோது இருந்த அந்த சந்தோஷம், கலீர் கலீர் சிரிப்பு, ஆட்டம் பாடம், எல்லாமே அடங்கிவிட்டது. காற்றில் கலந்து வரும் கண்ணன் குழலோசை... கேட்க முடியவில்லை. காற்றில் ஏக்க பெருமூச் சில் உஷ்ணம் தான் இருக்கிறது. பூத்துக் குலுங்கும் மரங்கள் செடிகள், கொடிகள் வறட்சி பிரதேசத்தில் நீருக்கு வாடும் தாவரமாகி விட்டன. பறவைகள் சப்த ஜாலங்கள் செய்யாமல் மரங்களில் அவற்றின் கூடுகள் எல்லாமே மரணம் நிகழ்ந்த வீடு போல் நிசப்தமாகிவிட்டது.
கோப கோபியர்கள் திடீரென வயோதிகர்களாகி விட்டார்கள், கண்கள் அழுதழுது கோவைப் பழங்க ளாகிவிட்டன. யமுனையில் நீர் முன்பு போல் குதூகலம் இல்லாமல் ஏனோ தானோ என்று ஓடுகிறது. யமுனை தனது போக்கையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு எங்கோ போய்விட்டது. தென்றல் நெருப்பாக சுடுகிறது. குளிர்ச்சியாக இருக்க வேண்டிய ஏரி குளம், நதி எல்லாமே சுடுநீராக மாறிவிட்டது. பசுக்கள் கண்களில் ஓயாமல் கண்ணீர் வடிகிறது. கசாப்பு கடை கத்திக்கு கழுத்தை காட்டும் மாடுகளாக அல்லவோ துயரத்தில் வாடுகிறது. எல்லா கண்களும் பாதையில் கிருஷ்ணன் வருவானா என்று பார்த்து பார்த்து பஞ்சடைந்து போய் விட்டன.
ஆஹா இங்கே எல்லாமே மாறிவிட்டதற்கு காரணம் ஒரே ஒரு ஜீவன். கிருஷ்ணன். கிருஷ்ணன், கிருஷ்ணன். அந்த ஒரு ஜீவன் அல்லவோ அனைத்து ஜீவன்களை யும் கட்டிப்போட்டிருந்தது....
கண்ணில்லாத ஸூர்தாஸ் கண்ணன் இல்லாத பிருந்தாவனத்தில் மனக்கண்ணால் பார்த்து பாடிய பாடல் ஆங்கில வடிவம்.
these groves and thickets have become our enemy without Gopal.
The same vines and creepers were so shady, so cool then, now they seem afire,
The Yamuna flows in vain,the birds sing in vain, the lotus bloom, the bees hum.The breeze, water, and camphor were supposed to be cool and life giving
now they burn like hot rays of sun.
O Uddho, tell Madhava that his separation, like a butcher’s knife
keeps stabbing us.
Life is flowing out. Waiting and waiting
looking at the path for Surdas’s Lord to come
our eyes have turned red like Gunja seeds.
No comments:
Post a Comment