Wednesday, September 7, 2022

NEELAKANTA SIVAN

 மறந்து போன ஒரு சிவபக்தர். - #நங்கநல்லூர்_J_K_SIVAN

நீலகண்ட சிவன்
தமிழகத்தில் எத்தனையோ மஹானுபவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீலகண்ட சிவன் (1839-1900). இயற்பெயர் சுப்ரமணியன். சிறந்த சிவபக்தர். அருமையனாக பக்தி பாடல்கள் இயற்றி, பல வித்வான்களால் இன்றும் முகாரி, நாதநாமக்ரியை என்று பல ராகங்களில் பாடப்பட்டு வருகிறது. ரெண்டாயிரம் பக்தி பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார், எங்கே அவைகள்?
நீலகண்ட சிவன் நாகர்கோவில் பகுதியில் வடிவீஸ்வரத்தில் பிறந்தார், பழைய திருவாங்கூர் தலைநகரான பத்மநாபபுரத்தில் வசித்தவர். அவரது தந்தை சுப்பிரமணிய ஐயர்’ பத்மநாபபுரம் நீலக்கண்டஸ்வாமி கோவிலில் ஒரு அதிகாரி. அம்மா அழகம்மாள். இவருடைய ஒருநாள் ஒரு பொழுதாகிலும் என்ற பாடல் MKT பாகவதர் குரலில் கேட்டு பலமுறை மயங்கி இருக்கிறேன். ஆனந்த நடமாடுவார், சம்போ மகாதேவா போன்றவை பிரபலமான பாடல்கள்.
அவரது இன்னொரு பாட்டை இன்று காலை கேட்டேன். அது இது தான்: அவரது பாடல்களில் ''நீலகண்டன்'' என்ற முத்திரை இருக்கும்:
என்றைக்கு சிவ க்ருபை வருமோ, ஏழை
என் மன சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)
அனுபல்லவி:
கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசு போல்
ஒன்றுக்கும் அஞ்சாத என் உள்ளத்துயரம் நீக்க (என்றைக்கு)
சரணம்:
உண்டான போது கோடி உறவு முறையோர்கள் வந்து
கொண்டாடித் தொண்டாடிக் கொள்வார்-- தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார் இந்த கைத்தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தைத் தள்ளி நற்கதி செல்ல (என்றைக்கு)
நான் கொண்ட துயரத்தை நான் வென்றேன் எனக்காட்டி
வீண் கண்ட இருளெல்லாம் வெளியாக்கிப் பொருள் நாட்டி
யான் இன்றுள் இளைப்பாறி ஆனந்தப் பெருந்தீரன்
தான் நின்ற நீலகண்டன் சரணாரவிந்தம் சேர (என்றைக்கு)
இதற்கு அர்த்தம் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...