Tuesday, September 13, 2022

SANDHYA VANDHANAM

 சந்தியாவந்தனம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ப்ராஸனம் 

தினமும் சந்தியாவந்தனம் செய்பவர்கள் இதை அறிவார்கள்.  ப்ராஸனம்  என்று சூரியனை வழிபடும் மந்திரம். இதை மூன்று வேளையும்  சொல்வது வழக்கம். மந்திரத்தில் வேளைக்கு  தகுந்தாற்போல் சிறிது மாற்றம்  அவ்வளவு தான். 

 காலையில்   சொல்லும் ஸூர்யஸ்ச்ச என்ற அனுவாகம்:

 ''ஸூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ந்தாம்
யத் ராத்ரயா பாபம காரிஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண ஶிஶ்னா.
ராத்ரிஸ் ததவ லும்பது. யத் கிஞ்ச துரிதம் மயி. இதமஹம் மாமம்ருத யோனௌ ஸுர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா''

ஸ்வாஹா என்று சொல்லும் போது கையில் உள்ள ஜலத்தை பருகி ஆசமனம் செய்கிறோம்..

காலையில் ஸூர்யஸ்ச்ச என்ற அனுவாகத்திற்கு ரிஷி அக்னி. சந்தஸ் தேவி காயத்ரி. தேவதை ஸூர்யன். ஆத்ம சுத்திக்காக ஜலம் அருந்துவதில் வினியோகிக்க படுகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வது முக்கியம்.

தியாகத்தின் உருவான,  ஞான உருவகமாக  சூரியனே  உன்னை வணங்கி நான் என்ன வேண்டுகிறேன் தெரியுமா?  கோபம், ஆத்திரம், என் செயல்களில், பேச்சில், என்  எண்ணத்தில்,  உன் உடம்பில் பல பாகங்களின் ஈடுபாட்டால்  நேர்கிறது. அதனால் விளையும் பாபம்  கொடியது.  இரவும் பகலும் என்னை அந்த கோபத்திலிருந்து  விடுவித்து ரக்ஷிக்கவேண்டும், மோக்ஷம் அருளவேண்டும்.

 பகலில் அதைச்  செய்யும் போது , பகலுக்கு அதிஷ்டான தேவதையும், ஸூர்யனும் அதை சாக்ஷியாக  பார்த்துக் கொண்டி ருக் கிறார்கள்.ராத்திரி யில் அதற்கான தேவதை கண்காணிக்கிறது.  என் பாவங்களுக்கு  இவர்களே பின்னால் யம லோகத் தில் சாக்ஷியாக வருகிறார்கள்.

ஆதலால் சூர்யனும், அவரால் உண்டுபண்ணப்பட்ட பகல் தேவதையும், இரவானால் அக்னியும், இரவு தேவதையும் அந்த பாபங்க்களை போக்கடிக்கட்டும். கோபம். கோபத்திற்க்கு பதி மன்யுபதி.இவர்களும் கோபத்தினால் நாம் செய்யும் பாபங்களை போக்கடிக்கட்டும். நம்மை சுத்தமாக செய்யட்டும் என வேண்டுகிறோம்.காமம் கோபம் என்பது மனதின் ஒரு மாறுதல் ஆகும்.

எக்காலத்திலும், எங்கும், எதிலும் ஈசன் நிறைந்து இருக்கிறார். காமம், கோபம் முதலியன உண்டாகும் போது அதன் வழியாகவும் பகவானை நினைக்க வேண்டும்.அவனன்றி அணுவும் அசையாது.   சூர்ய  மஹா ப்ரபு. கோபமாகவும், கோபத்திற்கு அதிபதியாகவும் உள்ளவரே.  பாபத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகிறோம். இந்த கருத்து கொண்டு தான் காமோகாரிஷித், மன்யுரகாரிஷித் என நமஸ்கரிக்கிறோம்.  அதைப்பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.

பகலில் ஆபஹ் புனந்து இத்யனுவாகஸ்ய ஆப ரிஷி: அனுஷ்டுப் சந்த: ப்ருஹ்மணஸ்பதிர் தேவதா. ஆப: புனந்து என்னும் அனுவாகத்திற்கு ஜலம் ரிஷி; அனுஷ்டுப் சந்தஸ்; ப்ருஹ்மணஸ்பதி தேவதை. இது  பகல் ப்ராஶ்னம். 

ஆப: புனந்து ப்ருத்வீம் ப்ருத்வீ பூதா புனாது மாம். புனந்து ப்ருஹ்மணஸ்பதி: ப்ரஹ்ம பூதா புனாதுமாம். யதுசிஷ்டம் அபோஜ்யம் யத்வா துஸ்சரிதம் மம. ஸர்வம் புனந்து மாமாபோ அஸதாஞ்ச ப்ரதி க்ரஹக்கு ஸ்வாஹா. ஸ்வாஹா என்று சொல்லும் போது கையில் உள்ள ஜலத்தை உட்கொண்டு ஆசமனம் செய்யவும்.

இதில் என்ன வேண்டுகிறோம் என்றால்  ஜலம் எனது பூத உடலை சுத்தமாக்கட்டும்.பூத உடல் மூலமாக ஸூக்ஷ்ம உடலுக்கும் சுத்தி ஏற்படட்டும். ப்ருஹ்மாவிற்கும், வேதத்திற்கும் அதிபதியான பகவான் என்னை சுத்த மாக்கட்டும். எங்கும், எப்போதும், என்னை சுத்தமான வேதம் என்னை சுத்தமாக்கட்டும்.

என்னை அசுத்தமாக செய்யும் மலாதிகளும், உண்ண தகாததை உண்டது, தகாவருடன், தகாத வழியில் சேர்ந்தது முதலிய ஸகல பாபங்களையும் ஜல தேவதை போக்கடிக்கட்டும்.

மாலையில்:  அக்னிஸ்ச இத்யனுவாகஸ்ய ஸூர்ய ரிஷி: தேவி காயத்ரீ சந்த: அக்னிர் தேவதா
அக்னிஶ்ச என்னும் அனுவாகத்திற்கு ரிஷி ஸூர்யன்; சந்தஸ் காயத்ரீ; தேவதை அக்னி.

''அக்னிஶ்ச மாமன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம் யதஹ்னா பாபம கார்ஷம். மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண ஶிஶ்னா அஹஸ்ததவ லும்பது. யத் கிஞ்ச துரிதம் மயி இத மஹம் மாமருத யோ நெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா''

கையில் உள்ள ஜலத்தை ஸ்வாஹா என்று சொல்லும் போது உட்கொண்டு ஆசமனம் செய்கிறோம்.

காலையில் சொன்ன ஸூர்யஸ்ச என்ற மந்திரத்தின் தாத்பர்யம் தான் இதற்கு.   ஸூர்யஸ்ச என்பதற்கு பதில் அக்னிஶ்ச என்று அக்னி தேவனுக்கு ப்ராதான்யம் கொடுக்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...