நவராத்ரி கொலு - நவராத்ரி J K SIVAN
நல்லவேளை கொரோனா ராக்ஷ்சன் தொந்தரவு இல்லாமல் இந்த வருஷம் நவராத்ரி கொலுவுக்கு (அதிகம் முக கவசம் காணோம்) பெண்கள் குழந்தைகள் நடமாட்டம் முன்பெல்லாம் போல் இல்லாமல் கொஞ்சமாவது காண்கிறது.
நவராத்திரியை விட்டால் இதோ தெருக்கோடியில், அடுத்த மாசம் ஐப்பசியில், தீபாவளி காத்துக்கொண்டிருக்கிறது. அப்புறம் ஆறுநாள் மஹா சஷ்டி என்று சுப்பிரமணிய சுவாமி வழிபாடு. ஆஹா நமது முன்னோர்கள் அற்புதமானவர்கள், பார்த்தீர்களா, எப்படி தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பண்டிகை பகவானை நினைப்பதற்கு என்று தொடர்ந்து வரிசையாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நவராத்ரி முதல் மூன்று நாள்: துர்காவுக்கு பிரதானம்.
அடுத்த மூன்று நாள் மஹாலக்ஷ்மிக்கு பூஜை.
கடைசி மூன்று நாள் சரஸ்வதியாக அம்பாள் அருள் புரிகிறாள்.
நவராத்திரியின் 1ம் நாள் - தேவி மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
2ம் நாள் - கௌமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரி.
3ம் நாள் - வாராஹி , கன்யா கல்யாணி .
4ம் நாள் - மகாலட்சுமி. இவளே ரோஹிணி
5ம் நாள் - வைஷ்ணவி, மோகினி..
6ம் நாள் - இந்திராணி. சர்ப்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்த கோலம்.
7ம் நாள் - மஹா ஸரஸ்வதி, சுமங்கலி.
8ம் நாள் - நரசிம்மி .சினம் தணிந்த கோலம்.
9ம் நாள் - சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரி. ஆயுத பூஜை.
2ம் நாள் - கௌமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரி.
3ம் நாள் - வாராஹி , கன்யா கல்யாணி .
4ம் நாள் - மகாலட்சுமி. இவளே ரோஹிணி
5ம் நாள் - வைஷ்ணவி, மோகினி..
6ம் நாள் - இந்திராணி. சர்ப்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்த கோலம்.
7ம் நாள் - மஹா ஸரஸ்வதி, சுமங்கலி.
8ம் நாள் - நரசிம்மி .சினம் தணிந்த கோலம்.
9ம் நாள் - சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரி. ஆயுத பூஜை.
என் பழைய சைக்கிள் குளித்து, சந்தனம் குங்குமம் பூசிக்கொண்டு தலையில் ஒரு மஞ்சள் பூ வைத்துக்கொள்ளும். கிட்டத்தட்ட அரை அரை நூற்றாண்டுகளாக எனக்கு வாகனமாக இருந்த சைக்கிள் ஓட்டுவதை மறந்து போய்விட்டேன். கடைசியாக 20 வருஷங்களுக்கு முன் பயத்தோடு சைக்கிள் மேல் ஏறி உடனே இறங்கிவிட்டேன்.ஸ்கூட்டர் வந்தபிறகு சைக்கிள் மிதிப்பது நின்று போனது.
10ம் நாள் - அசுரர்களை அழித்து அம்பிகையின் வெற்றியை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
குழந்தைகள் மழலைப் பள்ளிக்கூடங்கள் திறந்து இருக்கும். வருபவர்களுக்கு எல்லாம் சாக்லேட். ரெண்டு ரெண்டரை வயசில் அழ அழ குழந்தைகளை நிறைய பணம் கொடுத்து பள்ளியில் சேர்ப்பார்கள். படிப்பு கிடையாது வெறும் விளையாட்டு என்றாலும் குழந்தைகளுக்கு புது இடம், புது முகங்கள் புது பழக்கம் என்பதால் வீட்டிலிருப்பதற்கே விரும்பும். கூடவே பெற்றோர்கள் உட்கார்ந்திருந்து ஒரு மணி ஒன்றரைமணி நேரம் கழித்து குழந்தைகளோடு வீட்டுக்கு திரும்புவார்கள்.
No comments:
Post a Comment