ஆதி சங்கரரின் வினா விடை - நங்கநல்லூர் J K SIVAN
ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.
६०. किं पारमार्थिकं स्यात्? अद्वैतं चाज्ञता कुतो? अनादिः।वपुषश्च पोषकं किं? प्रारब्धं चान्नदायी किं? चायुः
60. Kim paaramaarthikam syaat? Adwaitam, chaajnataa kuto? anaadih Vapushashcha poshakam kim? Praarabdham, chaannadaayi kim?
Chaayuh
Chaayuh
158: எது உயர்ந்த லக்ஷியம்/
அத்வைத ஞானம்.
159: அஞ்ஞானம் எங்கே இருந்து தோன்றுகிறது?
அதற்கு ஆரம்பமே இல்லை.
160. உடம்புக்கு எது மூல காரணமாகிறது.
ப்ராரப்தம். பூர்வ ஜன்ம கர்ம பலன்.
161. எது வாழ்விக்கிறது?
ஆயுசு. விதிக்கப்பட்ட வாழ்நாள்.
६१. को ब्राह्मणैरुपास्यॊ? गायत्र्यर्काग्निगोचरो शंभुः।गायत्र्यामादित्ये चाग्नौ शम्भौ च किं नु? तत्तत्वं
61. ko braahmanairupaasyo? Gaayatryarkaagnigocharo shambhuh gaayatryaamaaditye chaagnau shambhau cha kim nu? Tattatwam
162. வேதப் பிராமணர்கள் உபாசிப்பது யாரை?
சம்புவை . காயத்ரியில் உறைபவரை. சூர்யன், அக்னியை.
163. அப்படி என்ன இருக்கிறது காயத்ரியின், சூரியனில், சம்புவில், அக்னியில்?
சிவதத்வம். ஸாஸ்வத உண்மை.
६२. प्रत्यक्षदेवता का? माता, पूज्यो गुरुश्च कः? तातः।कः सर्वदेवतात्मा? विद्याकर्मान्वितो विप्रः॥
62. pratyaksha devataa kaa? Maataa, poojyo gurushcha kah? taatah Kah sarvadevataatmaa? Vidyaakarmaanwito viprah
164. ப்ரத்யக்ஷ தெய்வம் எது?
அம்மா.
165. யாரைவணங்கவேண்டும், யார் குரு?
ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பா.
166. தெய்வீகம் எங்குநிறைந்திருக்கிறது.?
பற்றற்ற நன்றாக வேதம் உணர்ந்த வைதிகர்களிடம்.
६३. कश्च कुलक्षयहेतुः? संतापः सज्जनेषु योऽकारि। केषाममोघवचनं? ये च सत्यमौनशमशीलाः॥
63. kashcha kulakshayahetuh? Samtaapah sajjaneshu yo’kaari keshaamamoghavachanam? Ye cha punah satyamaunashamasheelaah
167. ஒரு வம்சத்தின் வீழ்ச்சிக்கு எது காரணம்?
நல்லோருக்கு , சாதுக்களுக்கு, உடல், மன உளைச்சலை, கவலையை, துன்பத்தை தரும் செயல்களை செய்வ.
168. யார் சொல்லும் வார்த்தை தட்டாது, கட்டாயம் பலிக்கும், பலனளிக்கும்.?
எவன் சத்யவானாக இருக்கிறானோ, மனஅமைதியோடு, விருப்பு வெருப்பின்றி , எல்லோரையும் சமமாக மதித்து, மௌனமாக இருக்கிறானோ அவன் சொல்வது.
அடுத்த பதிவோடு நிறைவு பெறுகிறது.
No comments:
Post a Comment