பூந்தானம் - நங்கநல்லூர் J K SIVAN
''ரெடியா? கிருஷ்ணனிடம் போகலாம் வா''
மற்ற மதத்தினரை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எண்ணற்ற ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு க்ஷேத்திரங்கள், ஸ்தலங்கள், பெயரை வைப்பது வழக்கம். குலதெய்வம் சுவாமி பெயர், தாத்தா பாட்டி பெயர் வைப்பதும் ஒன்று தான். அந்த தாத்தாக்கள், பாட்டிகள் எல்லோருமே அப்படி சுவாமிபெயர், ஊர் பெயர் கொண்டவர்கள் தானே. இப்போது அந்த பழக்கம் தேய்ந்து விட்டது. புதுசு புதுசாக என்னென்னவோ வாயில் நுழையாத பெயர்களை ஸ்டைலாக இருக்கட்டும் என்று வைக்கிறார்கள். ஆனாலும் நம்மிடையே எத்தனையோ பேர் இன்னும் சிதம்பரம், பழனி, மதுரை, ராமேஸ்வரன், காசி, திருப்பதி, காளஹஸ்தி, கைலாசம், உடுப்பா, சுசீந்திரன், எல்லாம் இருக்கிறார்கள்.
மலையாள தேசத்தில் வீட்டு பெயரை சூட்டிக்கொள்வார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். நிறைய கிருஷ்ணன் மீது இனிமையாக மலை யாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர்.
மலையாள தேசத்தில் வீட்டு பெயரை சூட்டிக்கொள்வார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். நிறைய கிருஷ்ணன் மீது இனிமையாக மலை யாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர்.
காலம் சென்றது. பாகவதத்திலும் கிருஷ்ண கானத்திலும் தனது காலம் ஓட ஆனந்தமாக எப்போதும் மனதில் கிருஷ்ணனோடு இணைந்து வாழ்ந்த பூந்தானத்தின் பூலோக வாழ்க்கை முடியப்போகிறது என்று கிருஷ்ணனுக்கு தெரிந்தது. பூந்தானத்தை இனி தன்னுடன் வைத்துகொள்ள ஆசை அவனுக்கு.
"பூந்தானம் என்னிடம் வா" என்று அழைத் தான் கிருஷ்ணன். பூந்தானம் தலை கால் புரியாமல் ஆனந்தத்தில் நர்த்தனமாடினார். தெருவெல்லாம் ஓடினார். பார்ப்பவர்கள் பைத்தியம் என்று தான் சிரிப்பார்கள். ஆனால் அவருடைய பிரம்மானந்தம் அவருக்கு தானே தெரியும் . கிராமத்தில் தெருவில் யார் கண்ணில் பட்டாலும் கேட்டார்
" கிருஷ்ணன் என்னை வரச்சொல்லி இருக்கி றான். நான் வைகுண்டம் போகப்போகிறேன். உங்களில் யார் யாருக்கெல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம் போகவேண்டும் என்ற ஆசையோ உடனே என்னோடு வாருங்கள். போகலாம்''
கொஞ்சம் யோசியுங்கள், அப்போதும் சரி, இப்போதும் சரி யாராவது பூலோக வாழ்க்கை யை விட்டு மேல் மேல் லோகமோ, கோ லோகமோ போகலாம் வா என்று அழைத்தால் வருவார்களா?
ஊர்க்காரர்கள் ஒரே ஓட்டமாக பூந்தானத்திடமிருந்து கொரோனாவை கண்டு பயந்து ஓடுவது போல் தலை தெறிக்க ஓடினார்கள். அவர் வீட்டில் பணிபுரிந்த ஒரு வயதான பெண்மணி அவரிடம் வந்தாள் .
"ஐயா என்னையும் உங்களோடு கிருஷ்ணனிடம் அழைத்து செல்கிறீர்களா?" என வேண்டினாள்.
ஒருநாள் முன்கூட்டியே குறித்த நேரத்தில் ஒரு விமானம் வந்து பூந்தானம் வீட்டு வாசலில் இறங்கியது. தனது பூத உடலோடு பூந்தானமும் அந்த முதியவளும் அதில் புறப்பட்டு வைகுண்டம் சென்று கிருஷ்ணனோடு கலந்தார்கள்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. நாராயண பட்டத்ரி காதிலும் விழுந்தது.
பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்க ணமோ தேவையில்லை. உள்ளத்தில் பக்தி பூர்வ எண்ணம் ஒன்றே போதுமே என்று உணர்ந்து தலை ஆட்டினார். கண்களில் நீர்.
No comments:
Post a Comment