Thursday, September 15, 2022

ADHI SANKARAR

ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

४१. कुत्र विषं? दुष्टजने, किमिहाशौचम् भवेत्? ऋणं नृणां।  किमभयमिह? वैराग्यं भयमपि किं? वित्तमेव सर्वेषां ॥
41.  kutra visham? Dushtajane, kimihaashaucham bhavet? Rinam nrinaam  kimabhayamiha? Vairaagyam bhayamapi kim? Vittameva sarveshaam

96. எதை விஷமென்று கருதலாம்?
தீய மனிதர்களை.

97.எது அசௌசம், அசுத்தம் எனலாம்?
பிறரிடம் கடன் படுவதை 

98. எது பயத்தை போக்கி தைர்யம் அளிக்கிறது?
உலக சமாச்சாரங்களில் பற்று கொள்ளாமல் இருப்பது. 

99. அப்படியென்றால் எது பயம்?
பணத்தை எப்படியாவது  முயன்று சேர்த்து வைத்துக் கொள்வது. 

४२. का दुर्लभा नराणाम्? हरिभक्तिः, पातकं च किम्? हिंसा।   को हि भगवत्प्रियः स्यात्? योऽन्यमुद्वेजयेदनुद्विग्नः
42.  kaa durlabhaa naraanaam? Haribhaktih, paatakam cha kim? himsaa    Ko hi bhagavat priyah syaat? Yo’nyam nodwejayedanudwignah

100. மனிதர்கள்  கஷ்டப்பட்டு  அடைய முயற்சிக்காதது  எது?
கிருஷ்ணனிடத்தில் பூரண பக்தி

101. எது பாபம் ?
பிற உயிர்களை ஹிம்ஸை  செய்வது. 

102. பகவானுக்கு பிரியமானவன் யார்?
எவன் தனது மனதால்  தானும்   சஞ்சலப்படாமல், பிறருக்கும்   எந்தவித மனா வியாகூலமும் தராமல் இருக்கிறானோ அவனை பகவானுக்கு பிடிக்கும். 

४३. कस्मात्सिद्धिः? तपसः, बुद्धिः क्व नु? भूसरे।   कुतोबुधिः? वृद्धोपसेवया, के व्रिद्धा: ये धर्मतत्त्वज्ञा:॥
43.  kasmaat siddhih? Tapasah, buddhih kwa nu? Bhoosure, kuto  buddhih?  Vriddhopasevayaa, ke vriddhaah? Ye dharmatattvajnaah

103. ஒருவன் வெற்றி பெற  எது ஆதாரம்?
அவன் செய்யும் விடா முயற்சி, தவம். 

104. புத்திசாலித்தனம், அறிவு கூர்மை எங்குள்ளது?
வேதத்தை நன்றாக அறிந்து புரிந்துகொண்டு சேவை புரியும் வயது முதிர்ந்த  வேதியர்களிடம்.

105. யாரை முதியவர் என்கிறோம்?
தர்மத்தை நன்றாக அறிந்து அதன் சாரத்தை  உணர்ந்தவர்கள் தான் முதியவர்கள். 
   
 ४४. संभावितस्य मरणादधिकं किं? दुर्यशो भवति। लोके सुखी भवेत् को? धनवान्, धनमपि च किं? यतश्चेष्टं         
44.  sambhaavitasya maranaadadhikam kim? Duryasho bhavati  Loke sukhee bhavetko? Dhanavaan, dhanamapi cha kim?
 Yatashcheshtam
           
106. மற்றவர்களால் புகழப்பட்ட, போற்றப்பட்டவனுக்கு, எது மரணத்தை விட மோசமானது?
பிறரால் அறியப்படாமல் இருக்கும்போது. லக்ஷியம் செய்யப்படாதபோது. 

107. இந்த உலகத்தில் நாம் யாரை வசதியாக வாழ்பவன் என்கிறோம்?         
செல்வம் படைத்தவனை 

108. ஓஹோ, எதை செல்வம் என கருதுகிறோம் ? 
எதன் மூலம் ஒருவன் தனக்கு விருப்பமானதை அடையமுடியுமோ அதை. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...