ஆதி சங்கரரின் வினா விடை - நங்கநல்லூர் J K SIVAN
ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.
45. सर्वसुखानां बीजं किं? पुण्यम्, दु:खमपि कुतः पापात्। कस्यैश्वर्यं? यःकिल शंकरमाराधयेत्भक्त्या॥
45. Sarvasukhaanaam beejam kim? Punyam, dukhamapi kutah? papaya Kasyaishwaryam? Yah kila shamkaramaaraadhayet bhaktyaa
109. சந்தோசம், வசதி, இதற்கெல்லாம் மூல விதை எது?
நாம் செய்த புண்யகாரியங்களின் பலன்.
110.எங்கிருந்து துக்கம் பிறக்கிறது?
நாம் செய்த பாப கார்யங்களின் பலநான் நாம் கஷ்டங்கள் துக்கங்கள்,துயரங்களை எதிர்கொள்கிறோம்.
111. எவரால் சகல சம்பத்துகளும் பெற்று பிறரை கட்டுப்பாட்டோடு வழி நடத்த முடியும்?
யார் பரமேஸ்வரனை பூரண பக்தியோடு வழிபட்டு அவன் அருள் பெற்றவரோ அவரால் தான் இது முடியும்.
४६. को वर्धते? विनीतः, को वा हीयते? यो दृप्तः। को न प्रत्येतव्यो? ब्रूते यश्चानृतम् शश्वत्॥
46. Ko vardhate? Vineetah, ko vaa heeyate? Yo driptah Ko na pratyetavyo? Broote yashchaanritam shashwat
112. எவரால் முன்னேற்றம் அடையமுடியும்?
எவர் எல்லோரிடமும் வினயமாக நடந்துகொண்டு, எளிமையாக வாழ்கிறாரோ அவரால் தான் உயர முடியும்.
113.யார் மேலே உயர முடியாதவர்?
வீண் டம்பம், வறட்டு கௌரவம், அகம்பாவம் கொண்ட குணத்தவரோ அவரால் வாழ்வில் முன்னேறமுடியாது.
114. யாரை நம்ப முடியாது?
வாய் ஓயாமல் பொய் சொல்கிறவனை.
४७. कुत्राऽनृतेप्यपापं? यच्चोक्तं धर्मरक्षणार्थं। को धर्मो? अभिमतो यः शिष्टानां निजकुलीनानां॥
47. kutraa’nritepyapaapam, yachchoktam dharmarakshaartham ko dharmo? Abhimato yah shishtaanaam nijakuleenaanaam
115. எப்போது நாம் சொல்லும் பொய் ஒரு பாப கார்யமாகாது.?
தர்மத்தை பாதுகாக்க சொல்லப்படும் பொய் .
116. தர்மமா?அது என்ன?
நமது முன்னோரால், அங்கீகரிக்கப்பட்ட நேர்மையான நியாயமான, கோட்பாடுகள், உயர்ந்த எண்ணங்கள் செயல்கள், சுயநலமற்ற ஈடுபாடுகள், வழக்கங்கள்.
४८. साधुबलं किं? दैवं, कः साधु:? सर्वदा तुष्टः। दैवं किं? यस्सुकृतं कः सुकृती? श्लाघ्यते यस्सद्भि:॥
48. saadhubalam kim? Daivam, kah saadhuh? Sarvadaa tushtah daivam kim ? yassukritam, kah sukritee? Shlaaghyate yah sadbhih
48. saadhubalam kim? Daivam, kah saadhuh? Sarvadaa tushtah daivam kim ? yassukritam, kah sukritee? Shlaaghyate yah sadbhih
117. ஒரு சிறந்த பக்திமிக்க சாதுவின் பலம் என்ன?
வேறெது ? தெய்வம் ஒன்றே.
118. சாது என்றால் யார்?
எவர் எப்போதும் சந்தோஷமாக, த்ரிப்தியோடு ஆனந்தமாக காணப்படுகிறாரோ அவர். .
119. தெய்வம் என்றால் யார்?
119. தெய்வம் என்றால் யார்?
சுக்ரிதம் என்கிறோமே சத் காரியங்கள், நல்ல செயல்கள் மட்டுமே புரியும் மனிதன்.
120. அப்படிப்பட்ட சுக்ரிதீ , அதாவது நன்மை செய்பவனை எப்படி அறிவது?
நல்லோரால் புகழப்படுபவன் எவனோ அவன்.
No comments:
Post a Comment