ஆதி சங்கரரின் வினா விடை - நங்கநல்லூர் J K SIVAN
ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.
६४ किं जन्म? विषयसंगः किमुत्तरं जन्म? पुत्रः स्यात्। कोऽपरिहार्यॊ? मृत्युः कुत्र पदं विन्यसेच्च? दृक्पूते॥
64. kim janma? Vishaya sangah, kimuttaram janma? Putrah syaat ko’parihaaryo? Mrityuh, kutra padam vinyasechcha? Drikpoote
169. பிறப்பிற்கு எது காரணம்?
புலன் உணர்வுகள் மேல் கட்டுப்பாடில்லாத ஆர்வம், விருப்பம்.
170. பிறந்த பின் எவன் வாழ்வுக்கு காரணமாகிறான்?
பிறந்த பின் அடுத்த காரண புதன் பிள்ளை, புத்ரன்.
171.எதை தவிர்க்க முடியாது ?
மரணத்தை.
172.அடுத்த காலடியை எங்கே வைக்க வேண்டும்?
கண் எது சுத்தமான இடம் என்று காட்டுகிறதோ அங்கே.
६५ पात्रं किमन्नदाने? क्षुधितं, कोऽर्च्योहि? भगवदवताराः।कश्च भगवान्? महेशः शंकरनारायणात्मैकः॥
65. paatram kimannadaane? Kshudhitam, ko’rchyo hi? Bhagavadavataarah kashcha bhagavaan? Maheshah shankaranaaraayanaatmaikah
173. யார் பிக்ஷை பெற தகுந்தவர்/
பசியினால் வாடுபவர்.
174.யாரை வழிபடவேண்டும் ?
பகவான் அம்சமாக அவதரித்தவர்களை. மஹான்களை .
175. யாரை பகவான் என்கிறோம்?
எந்த பரமாத்மனில் சங்கரனும் நாராயணனும் இணைந்திருக்கிறார்களோ அந்த பிரம்மம் தான் பகவான்.
६६. फलमपि भगवत्भक्तेः किं? तल्लोकसाक्षात्वं। मोक्षश्च को? ह्यविद्यास्तमयः कः सर्ववेदभूः अथचॊं॥
66. phalamapi bhagavat bhakteh kim? Tallokasaakshaatwam Mokshashcha ko? Hyavidyaastamayah, kah sarvavedabhooh? Atha chom
176. பகவான் மேல் பக்தி கொள்கிறோமே, அதன் பலன் என்ன?
வீடுபேறு என்கிறோமே அந்த மோக்ஷம், முக்தி. பகவான் உறையும் ஸ்தலம்.
177. எது மோக்ஷம்?
அஞ்ஞானம், அறியாமை, அவித்யாவிலிருந்து விடுதலை பெறுவது.
178. வேதங்களின் ஆதாரம் எது?
ஓம் எனும் பிரணவ மந்த்ரம்.
६७ इत्येषा कण्ठस्था प्रश्नोत्तररत्नमालिका येषां। ते मुक्ताभरणा इव विमलाश्चाभान्ति सत्समाजेषु॥
67. ityeshaa kanthasthaa prashnottararatnamaalikaa yeshaam te muktaabharanaa iva vimalaashchaabhaanti satsamaajeshu
ஆதிசங்கரர், இதுவரை 178 கேள்விகளைத் தானே கேட்டு, அதற்கு தானே சுருக்கமாக பதிலும் தந்திருக்கிறார். ப்ரஸ்னம் என்றால் கேள்வி, உத்தரம் என்றால் பதில், இந்த ரத்ன சுருக்க அற்புத கேள்வி கேள்வி பதிலை மாலையாக தொடுத்து அதற்கு பிரஸ்னோத்ர ரத்னமாலிகா என்று பெயர் சூட்டி நமக்கு அருளியிருக்கிறார். இதை யார் நன்றாக அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் கற்றவர்கள் மத்தியில் ரத்னமாக ஜொலிப்பார்கள், சிறந்த பளபளக்கும் விலையுர்ந்த நவரத்ன மாலையை கழுத்தில் சூடிக்கொண்டால் எப்படி பிறரைக் கவருமோ அது போல் பிரஸ்னோத்ர ரத்னமாலி கைளிகை அறிந்தவர் எல்லோராலும் போற்றப்படுவார் என்கிறார்.
ஆதிசங்கரரின் வினா விடை இதோடு நிறைவுபெறுகிறது.
இதை ஒரு சிறு புத்தக\=மாக்கி தேவைப்படுபவர்களுக்கு மாத்திரம் இலவசமாக விநியோகிக்கலாம். யார் இந்த விஷய தான கைங்கர்யத்தில் ஈடுபட முன் வருகிறீர்களோ என்னிடம் அறிவிக்கலாம். 9840279080 . அல்லது ஒரு சிலர் தாமே இதை அச்சடித்து விநியோகிப்பதாக இருந்தால் எங்கள் அனுமதி பெற்று, விலையில்லாமல் விநியோகிக்கலாம்.
உங்கள் சித்தம் எங்கள் பாக்யம்.
இப்படி நன்கொடை பெற்று, அச்சக்கூலி, காகிதக்கூலி, தட்டச்சுக்கூலி எல்லா செலவுகளையும் சந்தித்து இதுவரை 35 புத்தகங்களை விலையில்லாமல் விநியோகித்துள்ளோம்.தொடர்ந்து இதில் ஈடுபட்டு வருகிறோம். 80 புத்தகங்கள் அச்சேற காத்திருக்கிறது... நன்கொடையாளரை எதிர்பார்த்துக்கொண்டு.
அன்னதானத்தை விட சிறந்தது விஷய தானம் என்று மஹா பெரியவா அடிக்கடி சொல்வார். அதுவே எங்கள் லக்ஷியம்.
No comments:
Post a Comment