அரிய அற்புத நண்பர் - #நங்கநல்லூர்_J_K_SIVAN LATE ஸ்ரீ C . சுந்தரராம மூர்த்தி.
அவர் என்னுடைய மதிப்புக்குரிய நண்பர். பல மணி நேரங்கள் போனில் பேசி இருக்கிறோம். அவர் வாழ்ந் தது வேளச்சேரியில். நங்கநல்லூர் வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
நான் அவரை அவரது இரண்டாவது மகன் வீட்டில் நன்மங்கலத்தில் மூன்று முறை பார்த்து பேசி இருக்கிறேன்.
நான் அவரை விட நான்கு வயது வருஷத்தில் மட்டும் பெரியவன். அவரோ நாலாயிரம் மடங்கு ஞானத்தில் என்னை விட பெரியவர்.
ஸ்ரீ C சுந்தரராம மூர்த்தி ஒரு பல்கலை சாகரம். விற்பன்னர். ஓவியம், சிற்ப சாஸ்திரம், பல மொழி களில் பாண்டித்யம் கொண்டவர். பம்பாயில் TATA நிறுவனத்தில் பெரிய உத்யோகத்தில் பணியாற்றி யவர். ஆங்கிலத்தில், சமஸ்க்ரிதத்தில், தமிழில் சிறந்த ஆன்மீக எழுத்தாளர். தீவிர சக்தி உபாசகர். ஒவ்வொருநாளும் ஏழு எட்டுமணி நேரம் அம்பாள் பூஜையில் ஈடுபடுபவர். மஹா பெரியவாளை உயிர் மூச்சாக வழிபட்டவர்.
காஞ்சி மஹா பெரியவா அடிக்கடி உயர்வாக சொல்லிக் கொண்டே இருக்கும் மஹான்களில் ஒருவர் பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்.. ஸ்ரீ சுந்தரராமமூர்த்தி ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளின் மகள் வயிற்று கொள்ளுப்பேரன். பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் பிரபலமாக உபன்யாசம் செய்த ரஸ நிஷ்யந்தினி யை ஆங்கிலத்தில் ' RASA AASWAADHA TARANGINI '' என்று விவரமாக பல மேற்கோள்கள் காட்டி மூன்று பாகங்களாக 2100 பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு பெரிய புத்தகத்தை தனது வாழ்நாள் வெற்றியாக அளித்து அதன் மூலம் வரும் நன்கொடைகளை அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் உருவாகும் மஹா பெரியவா மணி மண்டபத்துக்கு காணிக்கையாகவும், காஞ்சியில் மகா பெரியவா அதிஷ்டான சேவைக்கான காணிக்கையாகவும் பயன்பட விரும்பியவர்.
மேலே கண்ட புத்தக 3 பாகங்களையும் எனக்கென்று வைத்திருந்ததை அவர் ஜேஷ்ட புத்ரன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ன இன்று என்னிடம் சேர்ப்பித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி இப்போது இல்லை. மஹா
பெரியவாளுக்கு சேவை செய்ய புறப்பட்டுவிட்டார். அவர் எனக்கு அளிக்க விரும்பிய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இன்று எனக்களித்த மூன்று பாகங்களை படித்து மேற்கண்ட நூலின் சில அம்சங்களை தமிழில் என் விருப்பப்படி எடுத்துச் சொல்வது தான் அவருக்கு நான் செலுத்தும் நட்பு காணிக்கையாகும்
No comments:
Post a Comment