Thursday, August 11, 2022

MAHA MRUTHYUNJAYA MANTHRAM

  மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம்  -  நங்கநல்லூர் J K  SIVAN 


நமது ஹிந்து சனாதன தர்மத்தில் அநேகருக்கு தெரிந்த சின்ன மந்திரம் இது.

''ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्''   

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம்  புஷ்டி வர்தனம்   உர்வாருகம் இவ   பந்தனா அம்ருத்யோர் முக்ஷீய  மாம்ருதாத் ''ǁ

Om Tryambakam Yajamahe Sugandhim Pushti-Vardhanam
Urvarukamiva Bandhanan Mrityormukshiya Mamritat॥

இதற்கு மஹா ம்ரித்யுஞ்சய மந்த்ரம் என்று பெயர் . மரணத்தை வெல்லும் மந்த்ரம்.  இதற்கு   மற்ற  பெயர்கள்  ருத்ர மந்த்ரம், த்ரியம்பகம் மந்த்ரம்.    ரிக் வேதத்த்தில்  7.59.12 வது ஸ்லோகம்.  முக்கண்ணன் பரமேஸ்வரனை வேண்டி  உச்சரிக்கப்படுவது. இந்த மந்த்ரம்  யஜுர்வேதத்திலும் வருகிறது. 
 1.8.6ல்  காணலாம்.

சர்வ மங்களத்தையும், வாழ்வில் வளத்தையும் அருள்பவன் த்ரியம்பகன் எனும் த்ரி நேத்ரன்  பரமசிவன். அவனைச் சரணடைந்து வேண்டும்  ஸ்தோத்ரம் இது.   எப்படி  பழுத்தவுடன்  வெள்ளரிப்பழம்  கொடியிலிருந்து தானாகவே விடுபட்டு விடுகிறதோ    அதைப்போல்  சம்சார பந்தத்திலிருந்து  என்னை விடுவித்து மரணத்தை வென்ற  மோக்ஷத்தை   அருள்வாய்''
ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும்  பெற  உச்சரிக்கப்படும்  மந்த்ரம். 

ஓம்  என்பது பிரணவ மந்த்ரம்.  அதை சொல்லாமல் எந்த மந்திரமும் இல்லை.   என்றும் இளமையான, திடகாத்ர , த்ரிநேத்ரா , முக்கண்ணா,   உன்னை வணங்குகிறோம்,  நறுமணம் உடைய,  திடகாத்திர சக்தி கொண்டவனே,   எப்படி பழுத்த  வெள்ளரிப்பழம், கொடியிலிருந்து  தானாகவே தன்னை விடுவித்துக்  கொள்கிறதோ அது போல்,   என்னை உலக பந்த  பாசங்களிலிருந்து,  மரணத்திலிருந்து மீட்டு  அமரத்வத்தை ,  மோக்ஷத்தை,  நிறைவான   அமைதியை அளிப்பாய்.  

இந்த மஹா ம்ருத்யுஞ்ஜய  மந்த்ரத்தை அளித்தவர்  மார்க்கண்டேய ரிஷி.  ஒரு தடவை சந்திரன்  தக்ஷ ப்ரஜாபதியால் சபிக்கப்பட்ட போது  மார்க்கண்டேய ரிஷி இந்த மந்திரத்தை  தக்ஷனின் பெண்ணிடம்  உபதேசிக்க அவள்  சந்திரனை அதை  ஜபிக்கச்செய்து, சந்திரன் சாப விமோச்சனம்  பெறுகிறான் என்று ஒரு கதை.  

இந்த மந்திரம்  ருத்ர மந்திரம் எனப்படும்.   மனோ உறுதி,  உடல் நலம்  மோக்ஷ  காரக சாதனம் என சக்திவாய்ந்ததாக வேதங்களால் சொல்லப்பட்டது.   காயத்ரி மந்திரம் பரிசுத்தம் அடைய உதவுவது போல், இந்த மஹா மிருத்யுஞ்ஜய  மந்த்ரம் உள்ள தேக  நிவாரணி.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...