மாயனும் மாயாவும் - நங்கநல்லூர் J K SIVAN
அந்த காலத்தில் குழந்தை பிறந்து தொப்புள் கொடி அறுத்ததும் அடுத்ததாக வந்து நிற்பவர் ஜோசியர். பிறந்த நேரம், நாள், நக்ஷத்ரம், திதி எல்லாம் ஜாதகம் பார்த்து பிள்ளையின் ஆய்சு, எதிர்காலம் என்ன என்று பெற்றோர்கள் ஆவலாக தெரிந்து கொள்வார்கள். ஜாதகர்மா என்று அதற்கு பெயர். கிருஷ்ணனுக்கு அதெல்லாம் யாரும் பண்ண நேரமில்லை. பிறந்ததுமே பார்சல் பண்ணி உயிர் தப்ப நள்ளிரவிலேயே கோகுலம் அனுப்பப்பட்டான். இப்படிச்செய் என்று தந்தை வசுதேவருக்கு கட்டளையிட்டதே மஹாவிஷ்ணு அம்சமான கிருஷ்ணன் தான்.
ततश्च शौरिर्भगवत्प्रचोदित:
सुतं समादाय स सूतिकागृहात् ।
यदा बहिर्गन्तुमियेष तर्ह्यजा
या योगमायाजनि नन्दजायया ॥ ४७ ॥ ஸ்ரீமத் பாகவதம் 10.3.47 ஸ்லோகம்.
tataś ca śaurir bhagavat-pracoditaḥ
sutaṁ samādāya sa sūtikā-gṛhāt
yadā bahir gantum iyeṣa tarhy ajā
yā yoga-māyājani nanda-jāyayā
மெஷின் மாதிரி வசுதேவர் கிருஷ்ணனைத் தூக்கிக்கொண்டு கம்சன் அரண்மனைச் சிறையிலிருந்து வெளியே வந்து, எவரும் பார்க்காமல் மதுராவை விட்டு கிளம்பி கொட்டும் மழையில் காரிருளில் யமுனையைக் கடந்து அக்கரையில் கோகுல கிராமம் அடைந்து நந்தகோபன் அரண்மனைக்குள் எவரும் பார்க்காமலேயே நுழைந்து பிரசவ அறையில் புகுந்ததும் கிருஷ்ணன் யசோதையின் வயிற்றில் உதித்து பிறந்தான். அடுத்து இன்னொரு பெண் குழந்தை அப்போதே யசோதைக்கு யோகமாயா வாக பிறந்து அந்த குழந்தையை வசுதேவர் தூக்கிக்கொண்டு வந்த வழியே மீண்டும் சென்று எவர் கண்ணிலும் படாமல் சிறைக்குள் தேவகி அருகே பிறந்தகுழந்தையாக குவா குவா என்று கத்தியதும் காவலாளிகள் எழுந்தனர். கம்சனுக்கு எட்டாவது குழந்தை பிறந்த சேதி பறந்தது. தேவகிக்கு விஷ்ணுவாக சதுர்புஜத்தோடு, சர்வாபரணனாக பிறந்தவன் யசோதைக்கு கருப்பு கிருஷ்ணனாக பிறந்தான் என்கிறது இந்த ஸ்லோகம். அற்புதம். பகவானால் முடியாது என்ன? தேவகியின் பக்திக்கு முன் பகுத்தறிவு இங்கே செல்லாது. யானை முன் அது கொசு/
No comments:
Post a Comment